Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
நீதா அம்பானி தனது சின்ன மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கு கொடுத்த திருமண பரிசு என்ன? அதன் விலை என்ன தெரியுமா?
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் அவரது காதலி ராதிகா மெர்ச்சண்ட்-டன் கடந்த ஜூலை 12, 2024 அன்று மிக பிரம்மாண்டமாக உலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்றது. இந்த ஜோடி குஜராத்தின் ஜாம்நகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வை ஆடம்பரமாக கொண்டாடியது. உலகம் முழுவதுமிருந்து தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 5000 கோடி செலவில் செய்யப்பட்ட இந்த திருமணம் 1 மாதத்துக்கும் மேலாக சமூக வலைத்தளங்கள், இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வ்தேச ஊடகங்களிலும் பேசுபொருளாக இருந்தது. அவர்கள் திருமணம் முடிந்த பிறகும், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி இப்போதும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நண்பர்களுடன் ஒரு நிதானமான பயணத்தின் போது அவர்களின் காதல் கதை மலர்ந்தது, இது அவர்களின் உறவுக்கு வழிவகுத்தது என்று ராதிகா பகிர்ந்து கொண்டார். இவர்களது நிச்சயதார்த்தம் 2022ல் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடந்தது.
தனது சின்ன மருமகள், ராதிகா மெர்ச்சன்ட் உடனான நெருங்கிய பிணைப்பிற்கு பெயர் பெற்ற நீதா அம்பானி, தனது மருமகளுக்கு ஒரு அற்புதமான முத்து மற்றும் வைர சோக்கர் நெக்லஸை பரிசளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ராதிகா ஜூலை 2022 இல் இந்த அற்புதமான நெக்லஸை நேர்த்தியாகக் அனைவரின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தினார், அதை ஒரு அழகான தங்க நிற லெஹங்காவுடன் இணைத்து, தனது நேர்த்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நேர்த்தியான மற்றும் விலையுயர்ந்த வைர நெக்லஸின் துல்லியமான மதிப்பு வெளியிடப்படாத நிலையில், இதன் தோராயமான மதிப்பு 108 கோடி என்று கூறப்பட்டுள்ளது. நீதா அம்பானியின் இந்த செயல் அனைத்து மாமியார்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
ஏப்ரல் 2022 இல், முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்காக பாம் ஜுமைராவில் ஒரு ஆடம்பரமான கடல் புறம் சார்ந்த மாளிகையை வாங்கியதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். துபாயின் மேல்தட்டு சுற்றுப்புறங்களில் ஒன்றில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான சொத்து 3000 சதுர அடியில் உள்ளது, 10 படுக்கையறைகள் மற்றும் 70 மீட்டர் நீளமுள்ள ஒரு தனியார் கடற்கரையுடன் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 640 கோடியாகும். நியூஸ் 18 இன் அறிக்கையின்படி, இந்த பரிவர்த்தையானது துபாயில் மிக முக்கியமான குடியிருப்பு சொத்து பரிவர்த்தனைகளில் ஒன்றாகும்.
இதற்கிடையில், பிரம்மாண்டமான திருமணத்திற்குப் பிறகு, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக நீதா அம்பானி, முகேஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோருடன் பாரிஸ் சென்றனர். விளையாட்டுகளில் கலந்துகொள்வதைத் தவிர, புதுமணத் தம்பதிகள் குடும்பத்துடன் டிஸ்னிலேண்டிற்குச் சென்றனர். தம்பதிகள் இன்னும் இந்தியாவிற்கு திரும்பவில்லை.



Click it and Unblock the Notifications
