Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
New Year 2026: புத்தாண்டின் முதல் நாளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல ஆண்டு முழுவதும் கஷ்டப்படுவீங்க..
New Year 2026 Vastu Tips: 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் நுழைவோம். அதுவும் புத்தாண்டு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க, புத்தாண்டின் முதல் நாளில் ஒருசில வழக்கங்களை செய்வோம்.
ஆனால் இந்த புத்தாண்டின் முதல் நாளில் செய்யும் ஒருசில தவறுகள் அந்த ஆண்டு முழுவதும் கஷ்டங்களையும், பண பிரச்சனைகளையும், அதிக மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது 2026 புத்தாண்டின் முதல் நாளில் எந்த தவறுகளை ஒருவர் செய்யக்கூடாது என்பது குறித்து காண்போம்.

தவறு #1
வாஸ்துப்படி, புத்தாண்டின் முதல் நாளில் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால், புத்தாண்டின் வரும் மாதங்களில் பண பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, பணம் தொடர்பான மன அழுத்தம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
தவறு #2
புத்தாண்டின் முதல் நாளில் சண்டைகளையோ, கருத்து வேறுபாடுகளையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் நல்ல சந்தோஷமும், அமைதியும் நிறைந்த வீட்டில் தான் லட்சுமி தேவி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே புத்தாண்டில் உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், புத்தாண்டின் முதல் நாளில் சண்டைகளில் ஈடுபடுவதையோ, வாக்குவாதங்களில் ஈடுபடுவதையோ தவிர்த்திடுங்கள்.
தவறு #3
புத்தாண்டின் முதல் நாளில் கிழிந்த அல்லது பழைய ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதே வேளையில் கருப்பு நிற ஆடைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மற்றவர்கள் அனைந்த ஆடைகளை அணிவதை எப்போதும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். எனவே புத்தாண்டில் முடிந்த வரை புதிய ஆடைகளை வாங்கி அணியுங்கள்.
தவறு #4
புத்தாண்டு நாளன்று வீடு இருள் சூழ்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் வடகிழக்கு திசை இருள் சூழ்ந்திருந்தால், அது வறுமையைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதுவும் எப்போதும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்க, வீடு நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். அதுவும் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் விளக்குகளை ஏற்றி வைத்திருப்பது நல்லது.
எனவே நண்பர்களே! புத்தாண்டு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க, புத்தாண்டின் முதல் நாளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் வறுமையும், பிரச்சனையும் வாட்டி எடுத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications