Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ராசிப்படி ஜனவரி 1 அன்று இந்த விஷயங்களை செஞ்சா.. லட்சுமியின் அருளால் செல்வம் பெருகுமாம்...
New Year 2024: இன்னும் சில நாட்களில் 2024 புத்தாண்டில் நுழையப் போகிறோம். அனைவரும் வருகிற புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக புத்தாண்டு நாளில் கோவில்களுக்கு செல்வது, சிறப்பு பூஜைகளை செய்வது, தான தர்மங்களை செய்வது என்று பல நல்ல காரியங்களை மேற்கொள்வோம்.
இப்படிப்பட்ட காரியங்கள் அனைத்தும் ஒருவரது பாவங்களைக் குறைத்து புண்ணியத்தை அதிகரிப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளைப் பெற வழிவகை செய்யும்.

ஜோதிடத்தின் படி, புத்தண்டின் முதல் நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களின் ராசிக்கேற்ப ஒருசில காரியங்களை செய்யும் போது, அந்த புத்தாண்டின் தொடக்கம் சிறப்பாக இருப்பதோடு, லட்சுமி தேவியின் அருளால் அந்த ஆண்டே செல்வ செழிப்போடு இருக்கும். இப்போது ராசிப்படி புத்தாண்டின் முதல் நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் நாளில் பருப்புக்களை தானம் செய்வது நல்லது. அத்துடன் புத்தாண்டு நாளில் சிவப்பு சந்தன பொடியை குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் செல்வ செழிப்பின் காரணியாக கருதப்படும் சுக்கிரனின் ஆசியைப் பெறவும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், புத்தாண்டின் முதல் நாள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு, பால் மற்றும் நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கை செழிப்பாக இருக்க புத்தாண்டின் முதல் நாளன்று அதிகாலையில் எழுந்து, விநாயக பெருமான வழிபட வேண்டும். அதோடு பசுக்களுக்கு பசுந்தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசியை சேந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சிவபெருமானை வழிபட வேணடும். இப்படி வழிபடும் போது, வேலைகளில் நல்ல வெற்றி கிடைப்பதோடு, சந்திரனின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சூரிய பகவானுக்கு செம்பு பாத்திரத்தால் நீரைப் படைத்து வழிபட வேண்டும். அதோடு, ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், சூரிய பகவானின் பரிபூர்ண அருள் அந்த ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் நாளில் விநாயக பெருமான வழிபட்டு, ஓம் கணபதயே நமஹ என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளன்று சுக்கிரனுக்கு உரிய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம், ஜாதகத்தில் சுக்கிரன் வலுவடைவதோடு, ஆண்டு முழுவதும் சுக்கிரனின் அருளால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டு நாளில் அனுமனை வழிபடுவது மிகவும் நல்லது. மேலும் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வலுப்படுத்த, ஏழை எளியோருக்கு பருப்புகளை தானம் செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவது நல்லது. இப்படி வழிபடுவதன் மூலம், அந்த ஆண்டு முழுவதும் குரு பகவானின் ஆசி கிடைப்பதோடு, வாழ்க்கையும் செல்வ செழிப்போடு இருக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டு நாளில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை ஏழை எளியோருக்கு தானம் செய்வது நல்லது. இப்படி செய்வதன் மூலம், சனி பகவானின் அருளால் அந்த ஆண்டில் நல்ல லாபத்தைக் காணலாம்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சனி பகவானை வழிபட்டு, கருப்பு நிற பொருட்களை ஏழை எளியோருக்கு தானம் செய்வது நல்லது.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டு நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, குரு பகவானுக்கு உரிய மந்திரங்களை ஓத வேண்டும். அப்படி செய்வதன் மூலம், குரு பகவானின் அருளால் அந்த ஆண்டு முழுவதும் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications