ஜூலை மாதம் புதிய பாபா வாங்கா கணிப்பு படி இந்த நாட்டில் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம்... ஜாக்கிரதை...!

New Baba Vanga Prediction for July: எதிர்காலத்தை தெரிந்து கொள்வது என்பது உலகில் எப்போதுமே மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயமாகும். அதனால்தான் நோஸ்ட்ரடாமஸ், பாபா வாங்கா போன்றவர்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள். ஜோதிடத்தையும் மக்கள் அதற்காகத்தான் நம்புகிறார்கள். தற்போது புதிதாக ஒருவர் எதிர்காலத்தைக் கணித்து பிரபலமடைந்து வருகிறார்.

தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய மங்கா கலைஞரான ரியோ டாட்சுகி, அவர் எழுதிய "The Future I Saw" என்ற புத்தகத்தில், எதிர்காலத்தில் உண்மையாக நடந்த விஷயங்களைப் பற்றி வரைந்து எழுதினார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது, அதனால்தான் இப்போது அவரது கணிப்புகள் உலகம் முழுவதும் கவனிக்கப்படுவதாக இருக்கிறது.

New Baba Vanga Prediction for July Japanese Baba Vanga Predicts Mega Disaster in July 2025

1999 ஆம் ஆண்டு "மார்ச் 2011 இல் ஒரு பெரிய பேரழிவு" பற்றிய அவரது கணிப்பு, மார்ச் 11, 2011 அன்று ஏற்பட்ட டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமியுடன் கிட்டத்தட்ட சரியாக ஒத்துப்போன போது அவர் முதலில் சர்வதேச கவனத்தைப் பெற்றார்.

ஜூலை 5, 2025 பற்றிய கணிப்பு

புதிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் தி நியூ பாபா வாங்கா, தனது புதுப்பிக்கப்பட்ட புத்தகத்தில், ஒரு விசித்திரமான அதேசமயம் பயமுறுத்தும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அவரது புதிய கணிப்பின் படி, ஜூலை 5, 2025 அன்று ஜப்பானில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும். இருப்பினும், என்ன நடக்கும் என்பதை அவர் சரியாக விளக்கவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் இப்போது மிகவம் வைரலாகிவிட்டன. சமூக ஊடகங்களில், ஜப்பானியர்கள் இந்த தேதியைப் பகிர்ந்து அதைப் பற்றி பயம், ஆர்வம் மற்றும் கவலையை பகிர்ந்து கொள்வதால், இது ஒரு பிரபலமான தலைப்பாக மாறியுள்ளது.

ஜூலை 5, 2025 அன்று ஒரு பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வைப் பற்றி ரியோ டாட்சுகி முன்னறிவித்துள்ளார், சிலர் அதை ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஏற்பட்ட பிளவால் தூண்டப்பட்ட சுனாமி அல்லது பூகம்பம் என்று விளக்கியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

New Baba Vanga Prediction for July Japanese Baba Vanga Predicts Mega Disaster in July 2025

ரியோ டாட்சுகியின் கடந்த கால முக்கிய கணிப்புகள்

- இளவரசி டயானாவின் மரணத்தை அவர் சரியாக கணித்திருந்தார்
- பாடகி ஃப்ரெடி மெர்குரியின் மரணம்
- 2020 களில் COVID-19 போன்ற ஒரு உலகளாவிய நோய் பரவல் ஏற்படுவதையும் அவர் கணித்திருந்தார்.

இந்த துல்லியமான கணிப்புகள் காரணமாக, இப்போது பலரும் அவர் இந்த முறையும் அவர் சரியாக கணித்திருக்கலாம் என்று நம்புகிறார்கள், இதனால் பரவலாக பதட்டமான சூழல் நிலவுகிறது.

கணிப்பின் விளைவுகள்

ரியோ தட்சுகியின் கணிப்புக்குப் பிறகு, ஜப்பானில் விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் பேரழிவு குறித்த அச்சம் காரணமாக கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஹாங்காங்கிலிருந்து சராசரி முன்பதிவுகள் இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளன, ஜூன் மாத இறுதிக்கும் ஜூலை மாத தொடக்கத்திற்கும் இடையிலான முன்பதிவுகள் 83 சதவீதம் வரை சரிந்துள்ளன.

ஏப்ரல்-மே மாத விடுமுறை காலத்தின் போது ஜப்பானுக்கான முன்பதிவுகளில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக ஹாங்காங்கில் உள்ள ஒரு பயண நிறுவனம் தெரிவித்துள்ளது, பல பயணிகள் ஏற்கனவே உள்ள கோடைகால முன்பதிவுகளை ரத்து செய்தனர், ரியோ தட்சுகியின் கணிப்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரியோ தட்சுகியின் கணிப்புகளை புறக்கணிக்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர், அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்றும் கூறியுள்ளனர். "சமூக ஊடகங்களில் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத வதந்திகள் பரவுவது சுற்றுலாவைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும்: என்று மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறினார்.

Story first published: Wednesday, June 18, 2025, 18:55 [IST]
Desktop Bottom Promotion