Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல சூரிய பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க...
இந்து மதத்தில் சூரியன் மிகவும் முக்கியமான தெய்வம். ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரிய பகவான் ஏழு குதிரைகள் கட்டப்பட்ட தேரில் சவாரி செய்யக்கூடியவர்.
இந்த ஏழு குதிரைகளானது வானவில்லின் 7 நிறங்கள் அல்லது உடலில் உள்ள 7 சக்கரங்களைக் குறிக்கிறது. ஜோதிடத்தில் இந்த சூரியன் ஆன்மா, புகழ், தலைமை பண்புகள், தைரியம், அரசாட்சி, தந்தை மற்றும் கருணை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

கிழமைகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் ஞாயிற்று கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாகும். சூரியனின் அருளைப் பெற நினைப்பவர்கள் இந்நாளில் சூரியனை மகிழ்விக்கும் விஷயங்களை செய்தால், சூரியனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். அதே சமயம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருசில விஷயங்கள் செய்வது சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாக்கும்.
அதுவும் ஒருவரது ராசிநாதன் சூரியனாக இருந்தாவோ அல்லது சூரியன் ஒருவரது ஜாதகத்தில் மோசமான நிலையில் இருந்தாலோ, அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருசில உணவுகளை உண்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் சூரிய பகவானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.
சிவப்பு துவரம் பருப்பு
துவரம் பருப்பில் புரோட்டின் அதிகமாக உள்ளது. அதுவும் இறைச்சிகளை விட அதிகமான புரோட்டீன் துவரம் பருப்பில் காணப்படுகிறது. எனவே இதை ஞாயிற்றுக்கிழமைகளில் உட்கொள்வதையோ அல்லது பிரசாதமாக படைப்பதையோ தவிர்க்க வேண்டும்.
தண்டுக்கீரை
சைவ உணவாளர்கள் பலர் தங்கள் உணவுகளில் கீரையை சேர்ப்பார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டுக்கீரையை சாப்பிடுவது அசுபமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கீரை குறுகிய கால வற்றாத தாவரம் மற்றும் இது வைஷ்ணவத்தில் மரணத்தின் அடையாளமாக கூறப்படுகிறது. எனவே இந்த கீரையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பூண்டு
என்ன தான் பூண்டு பல மருத்துவ பண்புகளை கொண்டிருந்தாலும், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைப்பதில் சிறந்ததாக விளங்கினாலும், இந்த பூண்டு பற்களை ஞாயிற்று கிழமைகளில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென ஜோதிடம் கூறுகிறது. ஏனெனில் இது இறந்தவர்களின் வியர்வையைக் குறிக்கிறது.
மீன்
பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அதுவும் மீன் சாப்பிட நினைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து பொறுமையாக ருசித்து சாப்பிடுவார்கள். மீன் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வெங்காயம்
வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது என்பது கடினம். சொல்லப்போனால் அனைத்து சமையலிலும் கட்டயாம் இடம் பெறும் ஒரு காய்கறி என்றால் அது வெங்காயம் தான். ஆனால் இந்த வெங்காயத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் உட்கொள்வது அசுபமாக கருதப்படுகிறது.
காரணம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கு ஒரு பின்னிருக்கும் காரணத்தை அறிய தொடர்ந்து படியுங்கள். இன்றைய காலத்தில் இந்து மதத்தில் பசுவைக் கொல்வது பாவமாக கருதப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் மக்கள் இதை எதிர்க்கவும் செய்கின்றனர். ஆனால் அக்காலத்தில் இதுக்குறித்து அதிகம் பேசப்படவில்லை.
ஏனெனில் இந்து புராணங்களில் கோமத் யாகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது பசுவை பலியிடும் சடங்காக கருதப்பட்டது. இதுக்குறித்த ஒரு கதையும் உண்டு. அது ஒருமுறை ஒரு முனிவர் ஞாயிற்றுக்கிழமையில் கோமத் யாகம் செய்ய நினைத்தார். இந்த யாகத்தில் காலையில் பசு பலியிடப்பட்டு, மாலையில் புத்துயிர் அளிக்கப்படும். முனிவரின் மனைவி பலவீனமாக இருந்தார். அவரால் பசியை தாங்க முடியவில்லை.
முனிவரம், அவரது மனைவியும் பழங்கள் மற்றும் சேர்களை உட்கொண்டு தான் வாழ்ந்து வந்தனர். பசி தாங்க முடியாததால், முனிவரின் மனைவி இறந்த பசுவில் இருந்து சிறு துண்டை வெட்டி சமைத்து சாப்பிட முடிவு செய்தார். ஆனால் முனிவரின் மனைவியால் அந்த நாற்றத்தை தாங்க முடியவில்லை. அதனால், அந்த துண்டை காட்டில் எறிந்தார். அப்போது அது இரண்டு துண்டாக பிரிந்தது.
முனிவர் மாலையில் பசுவை உயிர்ப்பித்தார். அப்போது காட்டில் வீசப்பட்ட துண்டுகளும் உயிர்ப்பிக்கப்பட்டன. அப்படி வீசப்பட்ட முதல் துண்டுகளின் சதைப் பகுதி தரையில் பூண்டாகவும், இரடாவது பகுதி குளத்தில் விழுந்து மீனாகவும் உயிப்பிக்கப்பட்டன. தரையில் விழுந்த இரத்தம் சிவப்பு துவரம் பருப்பாகவும், அதன் தோல் வெங்காயமாகவும், எலும்பு தண்டு கீரையாகவும் மாறின. இந்த காரணத்தினால் தான், இந்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications