Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல லட்சுமி தேவி உங்கள விட்டு போயிடுவாங்க...
Dont's On Friday: வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமையானது செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவியை வழிபட்டு, அவரது ஸ்தோத்திரத்தை உச்சரித்தால், வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுந்து, வீட்டின் செல்வம் அதிகரிக்க வழிவகை செய்வார் என்பது நம்பிக்கை.
ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ விரும்பினால், அதற்கு லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றிருக்க வேண்டும். உங்கள் வீட்டில் மற்றும் உங்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி வேண்டுமானால், அவருக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை செய்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இப்போது வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவைகள் எவையென்பதைக் காண்போம்.

லட்சுமி தேவியின் சிலையை கழுவக்கூடாது
வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்கும் நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவியை நீரில் கழுவுவது, லட்சுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு சமம். எனவே லட்சுமி தேவியின் சிலையை வெள்ளிக்கிழமைகளில் கழுவாதீர்கள். அதேப் போல் பழைய அல்லது உடைந்த சிலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தாமல், புதிய சிலையை வாங்கி வீட்டில் நிறுவலாம். இதன் மூலம் லட்சுமி தேவி வீட்டிலேயே நிலைத்திருப்பார்.
வீட்டின் கதவை மூடாதீர்
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் வீட்டின் பிரதான வாசல் கதவை மூடி வைத்திருக்காமல், சிறிது நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் லட்சுமி தேவி வீடு வீடாக செல்வார். இந்நிலையில் வீட்டின் கதவு மூடியிருந்தால், லட்சுமி தேவி வீட்டிற்குள் வராமல், வாசலோடு சென்றுவிடுவார். எனவே மாலை வேளையில் வீட்டின் வாசல் கதவை மூடி வைத்திருக்காதீர்கள்.
கடன் கூடாது
வெள்ளிக்கிழமைகளில் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அதேப் போல் கடன் கொடுக்கவும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால், வீட்டில் செல்வம் நிலைத்திருக்காமல் போவதோடு, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியமும் குறையும். முக்கியமாக இந்நாளில் யாரேனும் உதவி என்று கேட்டால், அவருக்கு உதவி செய்யுங்கள். அதுவும் அது கடனாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்நாளில் கடன் வாங்கினால், நிதி நிலைமை பலவீனமாகும்.
பெண்களை அவமதிக்காதீர்
வெள்ளிக்கிழமைகளில் பெண்களை அவமதிக்கவோ, திட்டவோ கூடாது. பெண்களை அவமரியாதை செய்வது, லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். எனவே இந்நாளில் வீட்டில் உள்ள பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். மாறாக அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு பெண்களை ஒவர் மதிக்கிறாரோ, அவரது கையில் பணம் அதிகம் சேரும்.
உப்பு, மஞ்சள் போன்றவற்றை கொடுக்காதீர்
உப்பு, மஞ்சள் போன்றவற்றில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த மங்களகரமான பொருட்களை வீட்டில் இருந்து மற்றவருக்கு கடனாக கொடுத்தால், வீட்டில் உள்ள லட்சுமி தேவியை மற்றவருக்கு கொடுப்பதற்கு சமம். எனவே இந்த பொருட்களை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications