Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
இந்தியாவின் முதல் பெண் உளவாளி யார்? அவர் நேதாஜியை காப்பாற்ற என்ன காரியம் செய்தார் தெரியுமா?
இந்தியாவில் காவல் துறை மற்றும் இராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், மரியாதையும் உளவாளிகளுக்கு எப்போதும் கிடைப்பதில்லை, அதற்கு முக்கிய காரணம் அவர்களின் ரகசியமான அடையாளம்தான். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் மரணத்திற்கு பிறகும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் வெகுவாக கிடைப்பதில்லை. அப்படி இந்தியா மறந்த ஒரு மிகச்சிறந்த உளவாளிதான் நீரா ஆர்யா. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் அவர்தான் இந்தியாவின் முதல் பெண் உளவாளி.
தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதன்மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த பதிவில் இந்தியா மறந்த இந்தியாவின் முதல் பெண் உளவாளியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப கால வாழ்க்கை
நீரா ஆர்யா 1902 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி, பாக்பத் மாவட்டத்தில் உள்ள கேக்ரா நகரில், ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். புகழ்பெற்ற தொழிலதிபராக இருந்த அவரது தந்தை சேத் சஜ்ஜுமால், தனது குழந்தைகளான நீராவிற்கும், பசந்திற்கும் கொல்கத்தாவில் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். சிறு வயது முதலே நீராவுக்கு நாட்டின் நலனில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் ஆசாத் ஹிந்த் ஃபௌஜில் உள்ள ராணி ஜான்சி ரெஜிமென்ட்டில் வீராங்கனையாகச் சேர்ந்தார்.
நீரா ஆர்யாவின் திருமணம்
நீராவின் தந்தை தனது மகளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையாக, அப்போதைய பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியும், இந்தியாவில் சிஐடி அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்ரீகாந்த் ஜெய் ரஞ்சன் தாஸைக் தேர்ந்தெடுத்தார்.
இருவரும் வெவ்வேறு சித்தாந்தங்களையும் வெவ்வேறு நாடுகளுக்கு விசுவாசத்தையும் கொண்டிருந்ததால், இது விரைவில் அவர்களிடையே பெரிய முரண்பாடாக மாறியது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் நீரா இணைந்திருப்பது அவரது கணவருக்கு தெரியவந்தபோது, அவர் நேதாஜியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அவர் நீராவை விசாரிக்கத் தொடங்கினார்.
நீரா ஆர்யாவின் தியாகம்
தனது கணவரின் முயற்சிகளுக்கு நீரா பணியவில்லை, ஆனால் ஸ்ரீகாந்த் விடாப்பிடியாக இருந்தார். ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில், நீரா நேதாஜியை முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் சந்தித்தபோது, ஸ்ரீகாந்த் நீராவைப் பின்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார், அப்போது நேதாஜியின் ஓட்டுநர் மீது குண்டு பாய்ந்தது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை உடனடியாக உணர்ந்த நீரா, சற்றும் யோசிக்காமல் அவரது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்று, நேதாஜியைக் காப்பாற்றினார். இதற்காக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவருக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நாட்டிற்கான அவரது தியாகமும், தேசபக்தியும் அத்துடன் முடிந்துவிடவில்லை.
துரோகம் செய்ய மறுத்தல்
சிறையில் இருந்த காலத்தில், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்கள் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தகவல்களைத் தெரிவித்தால், அவருக்குப் பிணை வழங்கப்படும் என்று நீராவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரை மறுத்துவிட்டார். வரலாற்று அறிக்கைகளின்படி, சிறையில், சுதந்திரப் போராட்டம் மற்றும் தலைவர்களைப் பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்தபோது, நீராவின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு சித்திரவதைகள் இருந்தபோதிலும், நீரா தனது தேசத்திற்கு விசுவாசமாக இருந்தார். மேலும், ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் முதல் பெண் உளவாளியாக ஆனார். அந்தப் பட்டத்தையும் பொறுப்பையும் நேதாஜியே அவருக்கு வழங்கினார்.
நீராவின் மரணம்
அவரது கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள் கூறும் செய்தி என்னவெனில் "என்னுடன் சரஸ்வதி ராஜாமணி என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் என்னை விட இளையவள், பர்மாவைச் சேர்ந்தவள். பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு எனக்கும் அவளுக்கும் வழங்கப்பட்டது. நாங்கள் சிறுவர்களின் உடையை அணிந்துகொண்டோம். பிரிட்டிஷ் அதிகாரிகளின் வீடுகளையும் ராணுவ முகாம்களையும் நாங்கள் உளவு பார்த்தோம். அங்கிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்களை நேதாஜியுடன் பகிர்ந்துகொள்வோம்." இவ்வாறு, நீரா தனது முயற்சிகள் மூலம் இந்திய தேசிய இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவினார்.
ஆனால் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அவருக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கவில்லை. அவர் தனது இறுதி காலத்தில் பூக்கள் விற்றதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஃபாலக்னுமா பகுதியில் ஒரு குடிசையில் தனது வாழ்நாளைக் கழித்த அவர், 1998 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி, சார்மினாருக்கு அருகிலுள்ள உஸ்மானியா மருத்துவமனையில் மரணமடைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு ரூபா ஐயர் என்ற இயக்குனரால் திரைப்படமாக தயாராகி வருகிறது.



Click it and Unblock the Notifications
