Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இந்த பொருட்களை இன்றே வீட்டில் இருந்து தூக்கி போடுங்க.. இல்ல துர்கா தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Navratri 2023: ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் இந்த நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாளில் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமியில் முடிவடைகிறது.
நவராத்திரி பண்டிகையின் போது பெரும்பாலான வீடுகளில் 9 நாட்களும் கலசம் அல்லது கொலு அமைத்து, மூப்பெருந்தேவியரையும் வழிபடுவது வழக்கம். அதில் முதன் மூன்று நாட்கள் துர்கையின் வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியின் வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் வழிபாடும் நடப்படுகிறது. இப்படிப்பட்ட பண்டிகையில் அன்னையரின் அருளைப் பெற வேண்டுமானால், நாம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வாஸ்துப்படி, நவராத்திரி பூஜையை தொடங்குவதன் முன் வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்களை வீட்டில் இருந்து அகற்ற வேண்டும். இந்த பொருட்களை அகற்றாமல் வைத்திருந்தால், அது வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைப்பதோடு, துர்கா தேவியின் கோபத்திற்கும் ஆளாக்கும். இப்போது எந்த பொருட்களை நவராத்திரிக்கு முன் அகற்ற வேண்டும் என்பதைக் காண்போம்.
உடைந்த சிலைகள்
பொதுவாக வீட்டில் எப்போதும் உடைந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது. அதுவும் வீட்டில் தெய்வங்களின் சிலைகள் உடைந்திருந்தால், அதை அப்புறப்படுத்தாமல் வைத்திருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளைத் தான் கொண்டு வரும். எனவே உங்கள் வீட்டில் ஏதேனும் உடைந்த கடவுள் சிலைகள் இருந்தால், அதை இன்றே அப்புறப்படுத்துங்கள்.
பழைய செருப்புகள்
உங்கள் வீட்டில் மிகவும் அறுந்து போன அல்லது அணியாத செருப்புகள் இருந்தால், அவற்றை தேவையில்லாமல் வீட்டில் வைத்திருக்காமல் தூக்கி எறியுங்கள். பயன்படுத்தாத காலணிகளை வீட்டில் வைத்திருந்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதோடு துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். நீங்கள் பயன்படுத்தாத காலணிகள் நன்றாக இருந்தால், அவற்றை தானம் வழங்கலாம்.
உடைந்த கண்ணாடிகள்
உங்கள் வீட்டில் ஏதேனும் கண்ணாடிகள் உடைந்திருந்தால், அதை சரிசெய்கிறேன் என்று பத்திரப்படுத்தாமல், உடனே தூக்கி எறியுங்கள். உடைந்த கண்ணாடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, பலவிதமான சிக்கல்களை சந்திக்க வைக்கும். எனவே நவராத்திரி பூஜையின் பலன் கிடைக்க வேண்டுமானால், நவராத்திரிக்கு முன் அதை தூக்கி எறியுங்கள்.
ஓடாத கடிகாரம்
நிறைய பேரின் வீட்டில் ஓடாத கடிகாரத்தை பார்க்கலாம். ஏனெனில் அந்த கடிகாரங்கள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் ஓடாத கடிகாரத்தை வீட்டில் வைத்திருப்பது, வீட்டில் தீய சக்தியை ஈர்க்கும். எனவே நவராத்திரிக்கு முன் வீட்டில் இருக்கும் ஓடாத கடிகாரத்தை அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால் துர்கா தேவியின் கோபத்திற்கு ஆளாகி, முன்னேற்றத்தில் தடைகளை சந்திக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications