Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
இந்தியாவை பேரழிவை நோக்கி நகர்த்திய முட்டாள்தனமான முகலாய அரசர் இவர்தான்... இவர் எடுத்த தவறான முடிவு என்ன?
இந்தியாவை ஆண்ட முக்கியமான பேரரசுகளில் முகலாயப் பேரரசு மிகவும் முக்கியமானது. இந்தியாவில், முகலாயர்களின் அதிகார உயர்வு மற்றும் வீழ்ச்சி விரைவில் நிகழ்ந்தது. முகலாயப் பேரரசு பாபரின் கீழ் விரைவாக வளர்ந்து ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலம் வரை வலிமையானதாக இருந்தது. இந்தியாவின் உணவுமுறை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் முகலாயர்களின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.
குறிப்பாக இந்தியாவின் கட்டிடக்கலையில் முகலாயர்களின் ஆதிக்கம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் பல கண்கவரும் மற்றும் தனித்துவமான கட்டிடங்களை உருவாக்குவதன் மூலம் அவர்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றனர். விரிவான வரி விதிப்பின் மூலம் அவர்களின் கருவூலம் விரைவாக விரிவடைந்தது.

எவ்வளவு வலிமையான அரசாக இருந்தாலும் அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது, அதற்கு முகலாயப் பேரரசும் விதிவிலக்கல்ல. முகலாயர்கள் எவ்வளவு விரைவாக அதிகாரத்தில் அமர்ந்தார்களோ அதேவேகத்தில் வீழ்ச்சியடைந்தனர். ஔரங்கசீப்பிற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் பரந்து விரிந்த நிலப்பரப்பை மேற்பார்வையிடவும் மேலும் வளர்க்கவும் முடியவில்லை. இறுதியில் முகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த தவறான முடிவுகளை அவர்கள் எடுத்தார்கள்.
ஔரங்கசீப்பின் பேரனான ஃபருக்சியார், முகலாய பேரரசர்களில் ஒருவராக இருந்தார், அவருடைய மோசமான தேர்வுகள் இந்தியாவை முன்னேற்றுவதைத் தடுத்தது மட்டுமல்லாமல் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்தது. இதனால் முகலாயப் பேரரசு அழிவின் விளிம்பில் இருந்தது.
இந்தியாவை அழிவை நோக்கித் திருப்ப முடிவு செய்தபோது ஃபரூக்சியார் ஒரு முக்கியமான தேர்வை எடுத்தார். முகலாய சுல்தானகத்தின் அரியணையை கைப்பற்ற அவர் தனது சகோதரர் ஜஹந்தர் ஷாவை கொன்றார். 1713 முதல் 1719 வரை ஆட்சி செய்த ஃபாருக்சியார் பெயரளவு பேரரசராக மட்டுமே இருந்தார். உண்மையில் சயீத் சகோதரர்கள் முகலாய அரசவையில் அதிகாரத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
1707 இல், சயீத் சகோதரர்கள் ஒளரங்கசீப்பின் அரசவையில் பணியாற்றினார்கள். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது, சகோதரர்களான சையத் ஹசன் அலி கான் மற்றும் சையத் ஹுசைன் அலி கான் ஆகியோர் அதிக அதிகாரம் பெற்றனர். ஔரங்கசீப்பின் மரணத்தைத் தொடர்ந்து சகோதரர்கள் முகலாய அரசவையில் அதிக அதிகாரத்தைப் பெற்றனர், அவர்கள் பேரரசர்களின் இடத்திலிருந்து அவர்களின் முடிவுகளை எடுக்கத் தொடங்கினர். அவர்கள் விரும்பியவரை முகலாயப் பேரரசராக நியமித்தனர்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு 1717 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் ஃபரூக்சியரால் இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. வரியின்றி வணிகம் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கினார். கிழக்கிந்திய கம்பெனி இந்த முட்டாள்தனமான உத்தரவால் பெரும் நன்மைகளைப் பெற்றனர். வரி செலுத்தாமல் வங்காளம், ஒடிசா மற்றும் பீகார் போன்ற முக்கிய இடங்களில் தனது வணிகத்தை வளர்க்க முடிந்தது. அதன் பிறகு, இந்த வணிகம் முகலாய பேரரசருக்கு ஆண்டுக்கு வெறும் 3,000 ரூபாய் மட்டுமே கொடுத்தது.
முகலாய அரசவையில் நிகழ்ந்த இந்த அதிகாரப் போட்டியால் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக பயனடைந்தது. இதனை ஆரம்பப் புள்ளியாக வைத்து படிப்படியாக இந்தியா முழுவதையும் கைப்பற்றத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள். பின்னாளில் ஆங்கிலேயர்களால் முகலாய ஆட்சியே கவிழ்க்கப்பட்டது. முகலாய அரசரின் இந்த முட்டாள்தனமான முடிவு முகாலய ஆட்சிக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பேரழிவை ஏற்படுத்தியது.



Click it and Unblock the Notifications












