Latest Updates
-
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா
முகாலய அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவிகளின் கதி என்னவானது? அவர்கள் எங்கு தங்கவைக்கப்பட்டார்கள் தெரியுமா?
Mughal Empire: இந்தியாவை ஆண்ட பல்வேறு வம்சங்களில் முகலாய வம்சம் மிகவும் முக்கியமான வம்சமாகும். பாபரால் உருவாக்கப்பட்ட முகலாய வம்சம், 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை சுமார் மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவை ஆண்டது. டெல்லி, லாகூர் மற்றும் ஆக்ரா போன்ற இந்திய துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதி முதல் தென்னிந்தியா வரை மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட முகலாய வம்சம் இந்திய வரலாற்றின் பணக்கார வம்சங்களில் ஒன்றாகும்.
இந்தியா மட்டுமின்றி உலக வரலாற்றிலேயே மிகவும் பணக்கார சாம்ராஜ்யங்களில் ஒன்றாக இருந்த இந்த வம்சம் உலகில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. முகலாய அரசர்கள் மட்டுமின்றி அவர்களின் மனைவிகளும், குழந்தைகளும் கூட ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தனர். ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் முதல் அக்பரின் மனைவி மரியம்-உஸ்-ஜமானி வரை, அனைத்து முகலாய வம்ச ராணிகளும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தனர். முகலாயர்களின் ஆட்சியின் போது அரசியல், பொருளாதார மற்றும் மத நடவடிக்கைகளில் மகாராணிகள் பெரிதும் பங்களித்துள்ளார்.

முகலாயப் பேரரசர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்தனர், பெரும்பாலும் அரசியல் ஆதாயங்களுக்காக முகலாயர்கள் பல்வேறு இராஜ்ஜியங்களை சேர்ந்த இளவரசிகளை மணந்து கொண்டனர். முகலாயப் பேரரசர்களின் மனைவிகள் ஆடம்பரமான அரண்மனையில் ஆடம்பர வசதிகளுடன் வசித்து வந்தனர்.
முகலாய அரசர்களின் ஒவ்வொரு மனைவியும் 'ஹரேம்கள்' என்று அழைக்கப்படும் அவர்களின் சொந்த ஆடம்பர படுக்கையறைகளைக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை வைத்திருந்தனர். ஒவ்வொரு ராணியும் அவர்களுக்கு சேவை செய்ய 'தாசிகள்' குழுவைக் கொண்டிருந்தனர். ராணிகள் அவர்களின் ஆடம்பர அரண்மனைகளின் சுவர்களுக்குள் அடைக்கப்படவில்லை, அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்றனர், இது அரசவையில் அவர்களின் செல்வாக்கை உயர்த்தியது. ஆனால், முகலாயப் பேரரசர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகலாயப் பேரரசர்களின் மறைவுக்குப் பிறகு, அடுத்த அரசர் பதவியேற்பதால் அடுத்த ராணிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது, பெரும்பாலான ராணிகளின் செல்வாக்கு குறைந்தது. ஜஹாங்கிரின் மனைவி நூர்ஜஹானின் அதிகாரம், அவரது மரணத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது, மேலும் அவர் அரச விவகாரங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
அதிகாரம் பறிக்கப்பட்டாலும், முகலாயப் பேரரசர்களின் ராணிகள் மற்றும் பேரரசிகள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டனர், மேலும் 'பேகம்' என்று அழைக்கப்பட்டனர் மற்றும் ஆடம்பரமான அரண்மனையில் வாழ அனுமதிக்கப்பட்டனர். முகலாயப் பேரரசர்களின் ராணிகளுக்குரிய அனைத்து ஆடம்பரங்களையும் வசதிகளையும் அவர்கள் அனுபவித்தனர். 'ஷாஹி தர்பார்' மூலம் அவர்களுக்கு நிதி உதவி, ஓய்வூதியம் மற்றும் பிற உதவிகள் வழங்கப்பட்டன. பல முகலாய அரசர்கள்மணந்த இந்து ராணிகளும் 'ஹரேம்களில்' வசித்து வந்தனர்.
முகலாய ராணிகள் மறுமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்ததில்லை. பெரும்பாலான ராணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆடம்பர ஹரேம்களில் வசித்து, தங்கள் வாழ்நாளை அங்கேயே கழித்தனர். அவர்கள் புதிய மசூதிகள் கட்டுதல், ஹஜ் போன்ற புனித யாத்திரைகள் மேற்கொள்ளுதல் போன்ற மத மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
முகலாய அரசவையில் சிறப்புப் பதவிகள் வழங்கப்பட்டதால், ராஜ்ஜியத்தின் முக்கிய அரசியல் முடிவெடுப்பதில் ராணிகளுக்கும் ஒரு பங்கு இருந்தது. அவர்களின் குழந்தைகள் முடிவுகளை எடுக்கத் தகுதியானவர்களாக மாறும் வரை, ராணிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஆலோசகர்களாகச் செயல்பட்டார்கள். பெரும்பாலான ராணிகள் அரசியல் முடிவுகளை எடுப்பதை விட்டுவிட்டு கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டில் ஈடுபட்டனர். அரசர்கள் இறந்தாலும் அவரின் மனைவிகள் மரியாதையுடன் நடத்தப்படுவதை முகலாயர்கள் உறுதி செய்தனர்.



Click it and Unblock the Notifications
