Latest Updates
-
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
முகலாய அரசர் ஔரங்கசீப்பின் கப்பலையே கொள்ளையடித்த கடற்கொள்ளையன் யார் தெரியுமா? இதனால் என்ன நடந்துச்சு தெரியுமா?
இந்திய வரலாற்றில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் என்பது மிகவும் முக்கியமானது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே கிட்டதட்ட 300 ஆண்டுகள் இந்தியாவின் பெரும் பகுதியை முகலாயர்கள் ஆண்டனர். பாபர் தொடங்கி ஷாஜஹான் வரை பல முகலாய அரசர்கள் இந்திய வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளனர், முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி வலிமையான அரசர் என்றால் அது பேரரசர் ஷாஜஹானின் மகன் ஔரங்கசீப்தான்.
முகலாய வம்சத்தின் மிகவும் கொடூரமான ஆட்சியாளராக ஔரங்கசீப் கருதப்படுகிறார். தனது தந்தையை சிறையில் அடைத்து விட்டு, சகோதரரை கொன்றுவிட்டு அரியணை ஏறிய அவர் பல கொடூர சம்பவங்களை நிகழ்த்தினார். இஸ்லாத்தைப் பரப்பும் முயற்சியில், வன்முறையால் அவர் இந்தியாவின் மில்லியன் கணக்கான இந்துக்களை மதம் மாற்றும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் பல போர்கள் நடைபெற்றன மற்றும் முகலாயர்களின் அதிகாரம் தென்னிந்தியா வரை விரிவுபடுத்தப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி மூலம் இந்தியாவிற்கு வர்த்தகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள், ஔரங்கசீப்பின் அனுமதியுடன் மட்டுமே வணிகத்தை நடத்த முடியும் சூழல் இருந்தது. இந்தியா முழுவதும் அதிகாரம் இருந்த போதிலும், ஒரு பிரிட்டிஷ் கடற்கொள்ளையர் அவரது தங்கம் நிறைந்த கப்பல்களில் ஒன்றை எளிதாகக் கொள்ளையடிக்க முடிந்தது. மிகவும் சுவாரஸ்யமாக, அவர் தனது வாழ்நாள் முழுவதும் முகலாயப் படைகளின் அணுகலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்.
ஔரங்கசீப்பின் கஞ்ச்-இ-சவாய் கப்பல்
ஔரங்கசீப்பின் கப்பலான கஞ்ச்-இ-சவாய், ஹஜ் யாத்திரைக்காக சூரத்திலிருந்து மெக்காவிற்கு ஆண்டுதோறும் பயணங்களை மேற்கொண்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் கப்பல் மதிப்புமிக்க தங்கம் மற்றும் வைரங்களை மட்டுமல்ல, முகலாய குடும்பத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்களையும் சுமந்து சென்றது. அதன் உறுதியான கட்டுமானத்திற்குப் பெயர் பெற்ற கஞ்ச்-இ-சவாய், பாதுகாப்புக்காக 80 துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டிருந்தது, இது அந்த கப்பலை வெளிப்புற தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தது. முகலாய ஆட்சிக்காலத்தின் மிகவும் வலிமையான கப்பலாக இது கருதப்பட்டது.
ஔரங்கசீப்பின் ரூ.900 கோடி செல்வம் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது?
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கொள்ளையடிக்கப்பட்ட கஞ்ச்-இ-சவாய் கப்பலின் மதிப்பு ரூ.900 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து எட்டு நாட்கள் மட்டுமே தொலைவில் இருந்தபோது ஹென்றி அவேரி கப்பலை கைப்பற்றினார். கஞ்ச்-இ-சவாய் ஹென்றியின் படையைக் கையாளும் அளவுக்குத் தயாராக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, ஹென்றியின் கப்பல் நெருங்கும்போது ஒரு பீரங்கி தற்செயலாக வெடித்து, பல பணியாளர்களைக் கொன்றது மற்றும் கப்பலின் ஒரு பகுதிக்கு தீ வைத்தது. தீயை அணைக்க குழு உறுப்பினர்கள் விரைந்ததால் ஏற்பட்ட குழப்பத்தை ஹென்றி பயன்படுத்திக் கொண்டு, ஒளவுரங்கசீப்பின் கப்பலைக் கைப்பற்றினார்.
கப்பலை கைப்பற்றிய கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்த பொருட்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர், ஆனால் கப்பல் வைத்திருந்ததாகக் கூறப்படும் வெள்ளி மற்றும் தங்கப் புதையலைக் கவனிக்கத் தவறிவிட்டனர். புதையல் கப்பலில் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதி, ஹென்றி மற்றும் அவரது குழுவினர் உயிர் பிழைத்த பணியாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மீது மூன்று நாட்கள் சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகியவற்றைக் கட்டவிழ்த்துவிட்டனர், இறுதியாக அவர்கள் தேடும் புதையலைக் கைப்பற்றும் வரை இந்த சித்திரவதைகள் தொடர்ந்தது.
பின்விளைவுகள்
தனது கப்பல் கொள்ளையடிக்கப்பட் செய்தி கேட்டு கோபமுற்ற ஔரங்கசீப் சூரத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளையும் ஔரங்கசீப் உடனடியாகக் கைது செய்தார், இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறிய போதிலும் அவர் அதை ஏற்க மறுத்தார். பம்பாயின் ஆங்கிலேய ஆளுநர் நிறுவனத்தின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்க வந்தபோது, ஔரங்கசீப் அவரையும் சிறையில் அடைத்தார்.
பின்னர் ஐரோப்பிய வர்த்தகர்கள் அனைத்து இந்திய வர்த்தகக் கப்பல்களுக்கும் ஆயுதமேந்திய பாதுகாவலர்களை வழங்க ஒப்புக் கொள்ளும் வரை அவர் அனைத்து வெளிநாட்டு வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்தார். ஹென்றி அவெரியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வில்லியம் கிட் தலைமையிலான ஒரு கப்பலை அனுப்பினர், ஆனால் கிட் அவரே ஒரு கடற்கொள்ளையராக மாறி, டச்சு கடற்கொள்ளையர் கேப்டன் டிர்க் ஷிவர்ஸுடன் சேர்ந்து பல இந்தியக் கப்பல்களைத் தாக்கினார்.
இதனால் மேலும் கோபமடைந்த ஔரங்கசீப், ஐரோப்பியர்கள் தன்னுடைய இழப்புகளுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்திய கப்பல்கள் மீது இனிமேல் ஏதேனும் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பொறுப்பேற்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கோரினார். அவர் கேட்ட அனைத்தையும் பெற்ற போதிலும், அவரால் இந்த பேரழிவுகளை தொடக்கி வைத்த ஹென்றியை கைது செய்ய முடியவில்லை.



Click it and Unblock the Notifications












