Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
அமெரிக்கர்கள் விரும்பி சாப்பிடும் டாப் 10 இந்திய உணவுகள்... முதலிடத்தில் இருப்பது எந்த உணவு தெரியுமா?
வெளிநாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், ப்ரைடு சிக்கன் என பல உணவுகள் நம் மக்களால் விரும்பப்பட்டு மெல்ல இந்தியாவில் நுழைந்து பெற்று நமது உணவு பழக்கங்களில் தற்போது தவிர்க்க முடியாத இடம் பெற்றிருக்கின்றன. அவற்றின் சுவைக்கு நாம் அடிமையாகி மீண்டும் மீண்டும் சாப்பிடவும் துவங்கி இருப்போம்.
நம்மை போலவே வெளிநாட்டினரும் நமது உணவுகளை விரும்புவார்களா என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம். அமெரிக்கர்களும் நமது இந்திய உணவில் சிலவற்றை விரும்புவதோடும் தொடர்ந்து விரும்பி சாப்பிடவும் செய்கிறார்கள். அமெரிக்கர்களால் அதிகமாக விரும்பி சாப்பிடப்படும் சிறந்த இந்திய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பட்டர் சிக்கன்
தன்னுடைய க்ரீம் போன்ற அமைப்பால் அதன் சுவைக்கு நம்மை அடிமையாக்கி இந்திய உணவுகளின் ராஜா என அழைக்கப்படும் பட்டர் சிக்கன் இதில் முதல் இடத்தை பிடிக்கிறது. சுவையான தக்காளி-பட்டர்-கிரீம் சாஸுடன் மென்மையான சிக்கன் சமைக்கப்பட்ட தயாரிக்கப்படும் இது, முதல் முறை இந்திய உணவுகளை சாப்பிடுவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மிதமான புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையுடன் இது நாண் மற்றும் அரிசி சாதத்துடன் அருமையான சுவையை தருவதால் இது அவர்களின் விருப்ப பட்டியலை பிடிக்கிறது. ஒரு முறை சாப்பிட்டவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சாப்பிட வைக்கிறது.
சிக்கன் டிக்கா மசாலா
பிரிட்டிஷ்-இந்திய சுவையை அடிப்படையாக கொண்ட சிக்கன் டிக்கா மசாலா அமெரிக்க இந்திய மெனுவில் முக்கிய இடம் பெறுகிறது. இது கிரீம் மற்றும் தக்காளி சாஸ் மசாலாவில் சிக்கன் துண்டுகளை ஊறவைத்து மெரினெட் செய்து சமைப்பதால் இதை பட்டர் சிக்கன் என சில அமெரிக்கர்கள் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் இதன் சுவையில் கொஞ்சம் புகை கலந்தது போல் இருக்கும். சிலர் இதை "பிரிட்டனின் தேசிய உணவு" என குறிப்பிடபடுவதோடு அமெரிக்க மக்களில் விருப்ப உணவு பட்டியலிலும் இடம் பெறுகிறது.
சமோசா
உருளைக்கிழங்கு, பட்டாணி, காய்கறிகள் அல்லது இறைச்சி வகைகளுடன் காரம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் அருமையான உணவு சமோசா இந்தியர்களுக்கு மிகவும் பிடித்ததாகும். இது புளிப்பான தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறப்படுகிறது. இவை அமெரிக்காவில் விருந்துகள், ஃபுட் ட்ரக்குகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கடைகளில் கூட கிடைக்கும் அளவிற்கு அமெரிக்கர்களின் விருப்ப உணவுகளின் வரிசையில் இடம்பெறுகின்றன.
பன்னீர் டிக்கா
பன்னீருடன் மசாலா பொருட்கள் மற்றும் தயிர் சேர்த்து மெரினேட் செய்து க்ரில் செய்யப்படும் பன்னீர் டிக்கா நம் ஊரில் சைவ உணவு பிரியர்களை மகிழ்விப்பதை போல் அமெரிக்காவிலும் சைவ உணவு பிரியர்கள் மற்றும் சீஸ் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குடைமிளகாய் மற்றும் வெங்காயத்துடன் க்ரில் செய்யப்பட்டு பரிமாறப்படும் இது அதிக அளவில் புரதத்தை கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தை விரும்பும் அமெரிக்கர்களுக்கு சிறந்த விருப்ப உணவாக அமைகிறது.
சோலே பத்தூரா
சிறந்த வட இந்திய உணவு என்று யோசித்தால் அந்த வரிசையில் முதலில் வருவது சோளே பட்டூரா எனப்படும் காரமான சுண்டல் குழம்புடன் எண்ணெயில் பொரிக்கப்படும் மைதா பூரி தான் சோலே பத்தூரா. வட இந்தியர்களின் உணவான இது அமெரிக்காவில் ஃப்ரஞ்ச்சு எனப்படும் இடை உணவில் இடம் பெறுவதோடும் அமெரிக்கர்களின் விருப்ப உணவாகவும் இருக்கிறது.
பிரியாணி
இந்தியர்களுக்கு பிரியாணி என்பது வெறும் உணவு என்பதையும் தாண்டி அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு மந்திர உணவாகும். பிரியாணி என்பது சாதாரண அரிசி உணவு அல்ல. நறுமணம் மிக்க மசாலா பொருட்களுடன் மேரினெட் செய்யப்பட்ட இறைச்சி மற்றும் பாசுமதி அரிசி அல்லது சீரகச்சம்பா அல்லது வேறு ஏதேனும் பிரியாணி அரிசி சேர்த்து செய்யப்படும் பிரதான உணவு. இது அமெரிக்கர்களின் விருந்துகள் மற்றும் இரவு உணவுகளில் தனி இடத்தைப் பெறுகிறது.
நாண்
நாண் மைதாவுடன் ஈஸ்ட் சேர்த்து செய்யப்படும் மென்மையான ரொட்டி. இது அனைத்து வகையான கிரேவிகளுடன் ஒத்து போகிறது. இது ஒரு துணை உணவாக இருந்தாலும், அமெரிக்க இந்திய உணவு வகைகளில் நாண் ஒரு சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுகிறது. அது கிளாசிக் பட்டர் நாண், கார்லிக் நாண் அல்லது சீஸ்-ஸ்டஃப்டு என எந்த வகையாக இருந்தாலும், ரோல்கள் முதல் பீட்சா பேஸ்கள் வரை அனைத்திலும் இது இடம் பெற்றுகின்றன. இதனால் இவை அமெரிக்கர்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாகிறது.
தந்தூரி சிக்கன்
தயிர், எலுமிச்சை சாறு மற்றும் காரமான மசாலா கலவையில் ஊறவைக்கப்பட்டு நேரடியாக நெருப்பில் வறுக்கப்பட்ட புகையின் மணம் கலந்து இருக்கும் தந்தூரி சிக்கனும் அமெரிக்கரின் விருப்ப உணவு பட்டியலில் இடம் பெறுகிறது. இது வெங்காயம் மற்றும் புதினா சட்டினியுடன் பரிமாறப்படுகிறது. இது ஆரோக்கியமானதாகவும், சுவை நிறைந்ததாகவும் இருப்பதால் அமெரிக்கர்கள் இதை விரும்புகிறார்கள்.
தோசை
மெல்லிய, மொறுமொறுப்பான மற்றும் தங்க நிற தோசை தென்னிந்தியாவின் பிரதான உணவு. ஆனால் இது அமெரிக்காவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையேக் கொண்டிருக்கிறது. புளித்த அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் தோசை சட்டினி மற்றும் சாம்பாருடன் கொடுக்கும் சுவைக்கு இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்கர்களும் மெய் மறக்கிறார்கள். தோசை நம்ம ஊர் ரோட்டு கடைகள் மட்டும் இன்றி அமெரிக்காவிலும் தனி இடம் பெற்றுவிட்டது.
டீ
டீ உணவு வகை இல்லைதான். ஆனால் பால், சர்க்கரை, ஏலக்காய், இஞ்சி மற்றும் கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து இனிப்பு மற்றும் காரமான சுவையில் செய்யப்படும் இந்திய மசாலா தேநீர் உலக மக்களிடையே தனி இடத்தை பெற்றிருக்கிறது. இதற்கு அமெரிக்கர்களும் அடிமையாகிவிட்டனர். இப்போது நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை தேநீர் கஃபேக்கள் உருவாகி வருகின்றன.



Click it and Unblock the Notifications
