Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
2 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய தேங்காய்... இந்த தேங்காயில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்திய உணவுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து வகை உணவுகளிலும் தேங்காய் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. தேங்காய் சுவைக்காக மட்டுமின்றி அது வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் பொதுவாக 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை செலவழித்து ஒரு தேங்காயை வாங்கியிருப்போம்.
ஆனால் பல லட்சங்களுக்கு விற்கப்படும் அதிசய தேங்காய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த தேங்காயை பார்ப்பவர்கள் மட்டுமல்ல அதைப்பற்றி கேள்விப்படுபவர்கள் முதற்கொண்டு அனைவரும் ஆச்சரியப்படுவது மட்டும் உறுதி. இந்த அரிய வகை தேங்காய் கோகோ டி மெர் அல்லது "இரட்டை தேங்காய்" என்று அழைக்கப்படுகிறது.

இந்த தேங்காய் எங்கு விளைகிறது?
இந்தியப் பெருங்கடலில் உள்ள அழகிய சீஷெல்ஸ் தீவுகளில் வளரும் இந்த பனை மரம், உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான தேங்காயை உற்பத்தி செய்கிறது. ஒரு சராசரி தேங்காய் சுமார் 25 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும். இருப்பினும், சில தேங்காய்கள் 40 கிலோகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையைக் கூட கொண்டிருக்கும். மேலும் தேங்காய் அரை மீட்டர் நீளம் வரை வளரக்கூடும்.
இந்த அதிசய தேங்காயின் விலை என்ன?
கோகோ டி மெர் அதன் எடையைப் போலவே அதிசய விலையைக் கொண்டுள்ளது. தற்போது, ஒரு தேங்காயின் மதிப்பு ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை விற்கப்படுகிறது. சீஷெல்ஸில் உள்ள சில தீவுகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட இந்த தேங்காய் மிகவும் விலை உயர்ந்தது. அதே காரணத்திற்காக இது IUCN பட்டியலில் அழிந்து வரும் இனமாகவும் உள்ளது.
இந்த தேங்காயை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள் என்ன?
15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மாலுமிகள் இந்த தேங்காயை முதன்முதலில் கண்டபோது, அது கடலின் அடிப்பகுதியில் இருந்து வந்ததாக நினைத்தார்கள். பல நூற்றாண்டுகளாக, இந்த தேங்காய் சீஷெல்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய ஒரு புதையல் என்று மக்கள் நினைத்தார்கள். போர்த்துகீசிய ஆய்வாளர்கள் இதை "மாலத்தீவு தேங்காய்" என்று குறிப்பிட்டனர்.
கிட்டத்தட்ட 100 வருடத்துக்கு பிறகு 1700-களில், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தேங்காயின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்தினர், அது சீஷெல்ஸின் ஒரு அதிசய தேங்காய். கோகோ டி மெர் பல கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகளால் சூழப்பட்டிருந்தது. குறிப்பிட்ட காலம் வரை, கோகோ டி மெர் ஒரு வகையான மந்திர மருந்து என்று நம்பப்பட்டது, சிலர் இதை சொர்க்கத்திலிருந்து கிடைத்த பழமாகக் கருதினார்கள். இந்த தேங்காயின் பொடி காய்ச்சல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்று நம்பப்பட்டது, பிரிட்டிஷ் நிர்வாகி சார்லஸ் கார்டன் கோகோ டி மெரை பைபிளில் இருந்து தடைசெய்யப்பட்ட பழம் என்று கூட குறிப்பிட்டார்.
இந்த மிகப்பெரிய தேங்காய் சீஷெல்ஸின் தேசிய சின்னமாக உள்ளது. தற்போது இந்த தேங்காய் காய்க்கும் தென்னை மரங்கள் சுமார் 8,000 மரங்களாகக் குறைந்துவிட்டன, இவை அனைத்தும் அரசாங்கத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழ் உள்ளன. இதன் விதைகள் கடுமையாகபாதுகாக்கப்படுகின்றன. பெரும்பாலும், எந்தவொரு திருட்டையும் தடுக்க, விதைகளைச் சுற்றி இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications












