Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
உலகில் நிலநடுக்கம் அடிக்கடி வரும் ஆபத்திலுள்ள நாடுகள் இதுதான்... இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த விளைவுகள் நேரடியாகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து மற்றும் பஞ்சத்தால் ஏற்படும் வறட்சி காரணமாகவோ ஏற்படுகின்றன. பூமியின் டெக்டோனிக் தகடுகள் நகர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் இடத்தில் பிளவு ஏற்பட்டு, தரையில் நகரும் அலைகளில் ஆற்றலை அதிக அளவில் வெளியிடும் போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கங்களின் வலிமையை விஞ்ஞானிகள் அளவிடுகிறார்கள். இது 6.4 அல்லது 7.0 போன்ற எண்களில் அளவை கொண்டு நிர்ணயிக்கிறது. 32 கிலோடன் வெடிப்புக்கு சமமானது 5.0 அளவிலான நிலநடுக்கம் ஆகும். இது நாகசாகியில் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டின் வெடிக்கும் சக்திக்கு ஏறத்தாழ சமமாகும்.

பூகம்பத்தால் பாதிக்கப்படும் நாடுகள்
ஒரு நாடு பூகம்பத்தால் பாதிக்கப்படுவதை நிர்ணயிப்பது அதன் புவியியல் அமைப்புதான். குறிப்பாக பல ஆசிய நாடுகள் பூகம்பங்களால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, சீனா மற்றும் இந்தோனேசியா நிலநடுக்கங்களை அடிக்கடி அனுபவிக்கின்றன, மேலும் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஜப்பான் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பூகம்பங்களை எதிர்கொள்கிறது. இதைத்தொடர்ந்து இந்தோனேசியா பூகம்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடு, மேலும் 2,212 பூகம்ப நிகழ்வுகளை அனுபவித்துள்ளது, இது மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸை விட மிகவும் அதிகமாகும்.
உலகளவில் மிகவும் அழிவுகரமான பூகம்பங்கள் பற்றிய ஆய்வில் , சீனா இந்தோனேசியாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் அதிக ஆபத்தான நிலநடுக்கத்தை சந்தித்துள்ள நாடுகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சீனா கடந்த 30 ஆண்டுகளில் 186 நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது, இந்தோனேசியா 166 ஆபத்தான நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது, ஈரான் 109 நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது, அதிக நிலநடுக்கத்தை சந்திக்கும் ஜப்பான் 98 ஆபத்தான நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது, இதைத்தொடர்ந்து அமெரிக்கா 78 நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளது, துருக்கி 62 நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது, இதைத்தொடர்ந்து இந்தியா 58 நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது, அதன்பின் பிலிப்பைன்ஸ் 55 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது.
உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
பல டெக்டோனிக் தகடுகள் ஒன்றிணையும் இடத்தில் அதன் புவியியல் நிலை, அதன் சிக்கலான புவியியல் அமைப்பு மற்றும் பரவலான கட்டுப்பாடற்ற கட்டுமான நடைமுறைகளுடன் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை ஆகியவற்றால் இந்தியாவின் பூகம்ப பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக, இந்தியா அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகிறது. உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் இந்திய ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை 58 நிலநடுக்கங்களை சந்தித்து இருந்தாலும் 2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குஜராத் பூகம்பத்தை பற்றி மட்டும்தான் தெரியும். ஆனால் இந்தியாவிலும் பல நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.
காங்க்ரா (1905)
ஏப்ரல் 4, 1905 அன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கில் 7.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள், இது பல கிராமங்களை தரைமட்டமாக்கியது மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.
பீகார் (1934)
ஜனவரி 15, 1934 அன்று, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் 8.7 ரிக்டர் அளவிலான பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தை பாதித்தது. இந்த நிலநடுக்கத்தில் 10,000 முதல் 30,000 வரையிலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டன, இதில் முக்கியமான பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது மற்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அசாம் (1950)
ஆகஸ்ட் 15, 1950 அன்று, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 8.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்தப் பகுதியில் பெரும் நிலச்சரிவுகள் மற்றும் சுனாமிகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் 1,500 க்கும் மேற்பட் மக்கள் இறந்தார்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
உத்தரகாசி (1991)
அக்டோபர் 20, 1991 அன்று, உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் விளைவாக 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டன.
புஜ் (2001)
ஜனவரி 26, 2001 அன்று, குஜராத் மாநிலத்தின் புஜ் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் எண்ணற்றோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் நகரம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது, பல கிராமங்கள் தரைமட்டமாகின, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. குஜராத் நிவாரண நிதியை 90'ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
காஷ்மீர் (2005)
அக்டோபர் 8, 2005 அன்று, காஷ்மீர் பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாட்டையுமே பாதித்தது. இந்த நிலநடுக்கம் 86,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது, பெரும்பாலான உயிரிழப்புகள் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நிகழ்ந்தன. உலகம் முழுவதும் நிகழ்ந்த வரலாற்றின் மிகவும் ஆபத்தான சில நிலநடுக்கங்களை பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.
பாகிஸ்தான்: அக்டோபர் 8, 2005
ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவின் அதிகமான பகுதிகளில் உணரப்பட்டது. 80,000-க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தில் இறந்தார்கள். கிட்டத்தட்ட 70,000 பேர் இதில் காயமடைந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான கட்டமைப்புகளையும் அழித்தது. நிலச்சரிவு, பாறைகள் சரிவு மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்கள் என சுமார் நான்கு மில்லியன் மக்களை இது வீடற்றவர்களாக மாற்றியது. மேலும் சில நாட்களுக்கு சில பகுதிகளில் மக்களை காப்பாற்ற கூடிய அணுகலையும் துண்டித்தது.
இந்தோனேசியா: டிசம்பர் 26, 2004
சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் 12 நாடுகளில் குறைந்தது 230,000 முதல் 290,000 பேர் இறந்தனர். இந்த சுனாமியில் 168,000 பேர் இந்தோனேசியாவில் மட்டும் இறந்தார்கள். இது ரிக்டர் அளவுகோளில் 9.1 ஆக பதிவானது. பேரழிவை ஏற்படுத்திய அலைகளுக்காக நீண்ட காலமாக நினைவில் இருக்கும் இந்த சுனாமி இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது நாம் மறக்க முடியாததே. இந்த நிலநடுக்கமானது மிகவும் வலுவாக ஏற்பட்டதால், அது பூமியின் அச்சில் அதன் சுழற்சியை கிட்டத்தட்ட ஒரு அங்குலம் அசைத்தது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஜப்பான்: ஜனவரி 17, 1995
ஜப்பானின் கோபெ பகுதியில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இதில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். மேலும் இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு $100 பில்லியனுக்கும் அதிகம். இது வரலாற்றில் மிகவும் அதிக அளவில் பொருள் இழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாக அமைந்தது. விலைவாசி அதிகமாக உள்ள பகுதியில் 200,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததது ம் மற்றும் சேதமடைந்ததால் இந்த அதிர்ச்சியூட்டும் பொருளாதார செலவு ஏற்பட்டது. தற்செயலான விஷயம் என்னெவென்றால் ஜப்பானில் பொதுவாக அறியப்படும் கிரேட் ஹான்ஷின் பூகம்பம் மற்றும் நார்த்ரிட்ஜ் நிலநடுக்கத்தின் முதல் ஆண்டு நினைவு நாளில் கோபெ நிலநடுக்கம் ஏற்பட்டது தான்.
தெற்கு கலிபோர்னியா: ஜனவரி 17, 1994
நார்த்ரிட்ஜ் நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானதோடு 60 பேர் இறந்தார்கள். மேலும் இதனால் ஏற்பட்ட சேதம் $44 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு கலிபோர்னியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் முக்கிய நான்கு மாவட்டங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், ஆரஞ்சு, வென்ச்சுரா மற்றும் சான் பெர்னார்டினோவில் 40,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை சேதப்படுத்தியது. உட்டா மற்றும் வடக்கு மெக்ஸிகோ வரை உணரப்பட்ட நிலநடுக்கம், அதிர்ஷ்டவசமாக அதிகாலை 4:30 மணிக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் நெரிசலான நெடுஞ்சாலைகள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டமைப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் அங்கு பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த போதும் உயிரிழப்புகள் குறைவாக இருந்தது.
மத்திய கலிபோர்னியா: அக்டோபர் 18, 1989
1989 உலகத் தொடரின் மூன்றாவது ஆட்டம் கேண்டில்ஸ்டிக் பார்க்கில் தொடங்கவிருந்தபோது சான் பிரான்சிஸ்கோ பகுதியைத் தாக்கிய லோமா பிரீட்டா நிலநடுக்கம் 63 பேரைக் கொன்றது மற்றும் தோராயமாக $6 பில்லியன் சொத்து சேதத்தை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக, இது 1906 க்குப் பிறகு விரிகுடா பகுதியில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாகும். இந்த ஆட்டத்திற்கான ABC அறிவிப்பாளரான அல் மைக்கேல்ஸ், பின்னர் தனது நேரடி பூகம்ப அறிக்கைகளுக்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
Credits: https://www.instagram.com/nritamil/
சீனா: ஜூலை 27, 1976
ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள கடுமையான நில அதிர்வுகளின் பெல்ட்டான "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட பல பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இது சீனாவின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான டாங்ஷானைத் தாக்கியது. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் படி இந்த நிலநடுக்கத்தில் 250,000 பேர் இறந்ததாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் உண்மையில் 655,000 வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அலாஸ்கா: மார்ச் 28, 1964
அமெரிக்க வரலாற்றின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றான இது மூன்று நிமிடங்கள் நீடித்தது மற்றும் ரிக்டர் அளவுகோலில் 9.2 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 15 பேர் மட்டுமே இறந்தனர், ஆனால் அதன் விளைவாக வால்டெஸ் நுழைவாயிலில் 200 அடிக்கு மேல் உயரம் எழுந்த சுனாமி, 110 பேரைக் கொன்றது மற்றும் $311 மில்லியன் சொத்து சேதத்தை ஏற்படுத்தியது.
தெற்கு சோவியத் யூனியன்: அக்டோபர் 5, 1948
துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 110,000 பேரைக் கொன்றது. இது நகரத்தின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான மக்கள் தொகையாகும். 7.3 ரிக்டர் அளவிலான இடிபாடுகள் நகரத்தின் பெரும்பகுதியை இடிபாடுகளாக மாற்றின, மேலும் மத்திய ஆசியாவைத் தாக்கிய மிகவும் பேரழிவு தரும் நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
மிசோரி: டிசம்பர் 16, 1811
இது உலகின் மிகவும் பழமையான நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இந்த பகுதி கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கத்தைக் கண்டது. இந்த நிலநடுக்கம் 1,500 மைல்களுக்கு மேல் தொலைவில் உள்ள பாஸ்டனில் உள்ள தேவாலய மணிகள் ஒலிக்கும் அளவுக்கு பரவியது. இது அந்தப் பகுதியின் புவியியலில் நம்ப முடியாத விளைவுகளை ஏற்படுத்தியது, மிசிப்பி நதி மேல்நோக்கிப் பாய்வது போல் தோன்றும் அளவுக்கு நிலத்தை உயர்த்தியது. அதிர்ஷ்டவசமாக, இந்த பூகம்பத்தில் ஒருவர் மட்டுமே இறந்தனர்.
வருங்காலத்தில் வரக்கூடிய நிலநடுக்கங்கள்
நிலநடுக்கங்களை முன்கூட்டியே கண்டறிய தற்போது பல தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவை அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. அதேசமயம் சில தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் வரப்போகும் நிலநடுக்கங்களைப் பற்றி கணித்துள்ளனர். அதில் முக்கியமாக ஜப்பானின் பாபா வாங்கா என்று அழைக்கப்படும் ரியோ தாட்சுகி ஜூலை 5ஆம் தேதியில் ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்று கணித்துள்ளார். அதுமட்டுமின்றி பல ஆராய்ச்சியாளர்கள் பூமியை அளிப்பதில் நிலநடுக்கம் முக்கியப்பங்கு வகிக்கும் என்று கணித்துள்ளார்கள்.
பூகம்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- நீங்கள் வீடு, அலுவலகங்கள் அல்லது வேறு ஏதேனும் கட்டிடத்தில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். முக்கியமாக பீதியடையாமல் அமைதி காக்க வேண்டும்.
- வீட்டிலுள்ள மின் சாதனங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகளை அணைக்க வேண்டும். மெயின் சுவிட்சை அணைப்பது சிறந்தது.
- கட்டிடத்தை விட்டு வெளியே வர முடியாவிட்டால், ஒரு உறுதியான மேஜை அல்லது உறுதியான படுக்கையின் கீழ் படுத்துக் கொள்வது நல்லது. மேலும் உங்கள் கைகளால் உங்கள் முகத்தையும் தலையையும் மூடிக் கொள்ளுங்கள்.
- மேலும் உயரமான பர்னிச்சர்கள் மற்றும் புத்தக அலமாரிகளைத் தவிர்க்கவும். அவை உங்களின் ஆபத்துகளை அதிகரிக்கலாம்.
- நீங்கள் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், உடனடியாக நிறுத்தி, நடுக்கம் நிற்கும் வரை உங்கள் காரில் இருக்க வேண்டும். ஆனால் மரங்கள், கட்டிடங்கள் அல்லது சுவர்களுக்கு அருகில் நிறுத்த வேண்டாம்.



Click it and Unblock the Notifications



