Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
சொர்க்கத்தின் நிலத்தை ஒரு சதுர அடி 8000 ரூபாய் என விற்கும் சர்ச்... இவங்ககிட்ட ஏமாறவும் ஒரு கூட்டம் இருக்கு...
கடவுளின் பெயரால் மக்களை முட்டாளாக்குவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் மோசடியாகும். இதற்கு எந்த மதமும், கடவுளும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு முறை காலங்கள் மாறும்போதும் இந்த ஏமாற்றும் முறைகள் மட்டுமே மாறுபடும். அதன் சமீபத்திய வடிவம்தான் சொர்க்கத்தின் நிலத்தை விற்பது.

மெக்ஸிகோவில் உள்ள ஒரு தேவாலயம் அவர்களின் அசாதாரண அறிவிப்புக்காக உலகம் முமுழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளது. அதுதான் சொர்க்கத்தில் உள்ள நிலங்களை விற்பது. சர்ச் ஆஃப் தி எண்ட் ஆஃப் டைம்ஸ் என்று அழைக்கப்படும் The Iglesia del Final de los Tiempos தேவாலயம், 2017 இல் கடவுளுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது அதன் போதகர் தெய்வீக அங்கீகாரத்தைப் பெற்றதாகக் கூறுகிறார். பாதிரியாரின் கூற்றுப்படி, சொர்க்கத்தின் நிலத்தை ஒரு சதுர மீட்டருக்கு நீங்கள் $100 டாலர் செலுத்தி(தோராயமாக 8000)செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கடவுளின் அரண்மனைக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களையும், பரலோகத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இடத்தையும் கூட முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போதகர் உறுதியளிக்கிறார். மேகங்களுக்கு இடையே இருக்கும் இந்த புனித இல்லத்தின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சுவாரஸ்யமாக, பேபால், கூகுள் பே, விசா, மாஸ்டர்கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டண முறைகளையும் தேவாலயம் ஏற்றுக்கொள்கிறது, மேலும் கட்டணத்தைச் செலுத்த பல எளிய வழிமுறைகளை தேவாலயம் அறிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட மகிழ்ச்சியான குடும்பத்துடன் தங்கக் கதிர்களால் சூழப்பட்ட ஒரு ஆடம்பரமான மாளிகையை இணையத்தில் சுற்றி வரும் ஒரு வீடியோ காட்டுகிறது. தேவாலயம் 2017 முதல் இந்த சொர்க்கத்தின் நிலங்களை விற்றதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்ததாகவும் அது குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த வீடியோ உண்மையில்லை ஒரு கேலியான செய்தி என்று மக்கள் இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
இது முதலில் நகைச்சுவையான செய்திகளைப் பகிர்வதற்காக அறியப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. வீடியோவைப் பகிர்ந்த X பக்கத்தில், "தயவுசெய்து எனக்கு 100 டாலரை யாரவது கடனாகக் கொடுங்கள்? எனது பரலோகக் இடத்தை பாதுகாக்க விரும்புகிறேன்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
உலகம் முழுக்க பல டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோ உருவாக்குபவர்கள் இந்த தேவாலயம் பற்றியும், இதன் வினோதமான சலுகைப் பற்றியும் வீடியோ பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த செய்தி குறித்த பல் வேடிக்கையான கமெண்ட்டுகள் இணையத்தில் உலாவி வருகின்றன.
இதற்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு போதகர், கிரிப்டோகரன்சியை விற்க கடவுள் தனக்கு அறிவுறுத்தியதாகக் கூறி சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டார். வக்கீல்கள் பாஸ்டர் எலிஜியோ ரெகலாடோ மற்றும் அவரது மனைவி கைட்லின் மீது மோசடி செய்ததாக குற்றம் சாட்டி, நாணயம் மதிப்பற்றது என்று கூறினர்.
ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை, கிரிப்டோகரன்சியில் எந்தப் பின்னணியும் இல்லாவிட்டாலும், 300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட $3.2 மில்லியனை இந்த ஜோடி திரட்டியது. தம்பதியினர் இந்த நிதியை தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
