Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் நிகழும் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண ஆதாயம் கிடைக்கும்!
Mercury Venus Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களுள் சில ஒரே நாளில் ராசியை மாற்றும். அப்படி ஒன்றாக கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மார்ச் 07 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதே நாளில் அசுரர்களின் குருவான சுக்கிரன் சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி இவ்விரு கிரங்களும் 100 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ராசியை மாற்றுகின்றன. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவதோடு, நல்ல நிதி நன்மைகளையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்
புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நாளில் ராசியை மாற்றுவதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
மார்ச் 07 ஆம் தேதி புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நாளில் ராசியை மாற்றுவதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களை வழங்குவதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதனின் பெயர்ச்சிகளானது நன்மை பயக்கும். முக்கியமாக மார்ச் 07 முதல் எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சம்பளத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலர் பதவி உயர்வைப் பெறலாம். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications