Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஒரு வருடம் கழித்து சிம்மம் செல்லும் புதன்: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் சிறப்பா இருக்கப்போகுது..
Mercury Transit In Leo In 25 July 2023: வேத ஜோதிடத்தில், புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, நட்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதனின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஒருவரது பேச்சு, வியாபாரம், படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் புதன் சிம்ம ராசிக்குள் ஜூலை 25 ஆம் தேதி, அதாவது இன்று நுழையவுள்ளார். சிம்ம ராசியானது சூரியன் ஆளும் ராசி. மேலும் சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள் ஆகும்.

நண்பனின் ராசிக்கு புதன் நுழைவதால், அதுவும் ஒரு வருடத்திற்கு பின் நுழைவதால், அதன் தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளிலுமே சிறப்பாக காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் கெடுபலனையும் பெறலாம். இப்போது சிம்ம ராசிக்குள் நுழைந்த புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொழிலை தொடங்க வாய்ப்புக்களை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் சிறப்பான பலனைப் பெறலாம். தம்பதிகள் அல்லது காதலர்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை சந்திக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பணத்தை செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்ய நினைத்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்க இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆன்மீக காரியங்களுக்கு நிறைய பணத்தை செலவழிப்பார்கள். மேலும் புதிய தொழிலில் தங்கள் பணத்தை முதலீடு செய்வார்கள். அந்த முதலீடும் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும். காதலிப்பவர்கள் அல்லது தம்பதிகள் துணையுடன் நேரத்ரதை செலவிட வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பார்கள்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று அமைதியற்றவர்களாக இருப்பார்கள். மிகுந்த சோம்பேறியாக இருப்பார்கள். ஏதாவது முதலீடு செய்ய நினைத்திருந்தால், அதை இக்காலத்தில் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதானல் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திற்கும் இவர்கள் அச்சம் கொள்ளமாட்டார்கள். வேலையில் அதிகமாக மூழ்கிவிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. காதலிப்பவர்கள் அல்லது தம்பதிகள் இக்காலத்தில் சண்டையிட வாய்ப்புள்ளது. ஆனால் திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை கண்டறியக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதகால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். மனரீதியாக இவர்கள் வலுவாக இருக்கமாட்டார்கள். வேலையில் மும்முரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களுக்காக நேரத்தை செலவிடுவார்கள். அதற்கு அடிக்கடி கோவில்களுக்கு செல்வார்கள். குடும்பத்தினருடன் வெளியே சுற்றுலா செல்ல திட்டமிடலாம். திருமணமாகாதவர்கள் நண்பர்களின் உதவியால் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வேலையை மாற்ற நினைத்தால், சற்று காலம் காத்திருக்க அறிவறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்கள் எந்த ஒரு தவறான உறவிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்கால கட்டத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இக்காலத்தில் கண்டறிவதோடு, விரைவில் திருமணம் செய்யவும் திட்டமிடலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய தொழிவை தொடங்க முயற்சிக்கலாம். மேலும் இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க கடினமாக உழைப்பார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்தித்து, அவருடன் பேசவும் தொடங்கலாம்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். இக்காலத்தின் மனநிலையானது ஏற்றஇறக்கமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேடி கண்டுபிடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications