Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
Mercury Transit In Aries Made Kendra Trikon Rajyog: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்டும்.
அந்த வகையில் புத்திகாரகன் புதன் மார்ச் 26 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேலும் ஏப்ரல் 02 ஆம் தேதி இவர் மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். அதோடு இந்த மேஷ ராசியில் ஏப்ரல் 09 ஆம் தேதி வரை இருப்பார். இப்படி மேஷ ராசியில் புதன் பயணிக்கும் போது, அவரால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தால் ஒருவருக்கு இருமடங்கு நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இப்போது புதனால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். குறைவான மன அழுத்தத்தை உணர்வீர்கள். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். வணிகத்திற்காக எதிர்பார்த்த கடன் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தலைமைப்பண்பும் அதிகரிக்கும். வேலையை மாற்ற முடிவெடுத்து முயற்சித்தால், இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம்.
குடும்பத்தினருடன் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆனால் பணம் தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதேப்போல் முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications