Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
புதன், சனி உருவாக்கிய தன ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைய பொழியப் போகுது...
Mercury Saturn Make Dhan Rajyoga: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்கள் ராசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றும். அப்படி மாற்றும் போது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குவதுண்டு. அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் வியாபாரத்தின் காரணியான புதன் மற்றும் கர்ம பலனை அளிப்பவரான சனி பகவானாலும் தன ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது நல்ல பண பலன்களைத் தருவதோடு, சிலரை பணக்காரராக்கும் சக்தி கொண்டது.

சனி மற்றும் புதனால் உருவான தன ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தன ராஜயோகத்தால் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பாருங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது அற்புதமான பலனைத் தரும். சிலர் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தாயாரின் ஆரோக்கியம் மோசாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், இன்பமும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி புதன் உருவாக்கிய தன ராயோகமானது நல்ல பண வரவைத் தரும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். செல்வம் பெருக வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இக்காலமானது நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்துடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது தொழில் மற்றும் வியாபார ரீதியாக சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் திட்டமிடும் விஷயங்கள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications