Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வக்ர புதனால் உருவாகும் தன சாம்ராஜ்ய யோகம்: மே 15 வரை இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
Dhan Samrajya Yoga On April 2023: புத்திகாரகனான புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். இந்த வக்ர நிலையில் புதன் மே 15 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார். முக்கியமாக புதன் வக்ரமாகும் போது தன சாம்ராஜ்ய யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் இது மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.
புதன் வக்ரமாக இருக்கும் காலத்தில், அவரால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களை தடைபடும். ஆனால் இந்த யோகம் உருவாவதால் சில ராசிக்காரர்கள், இக்காலத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது வக்ரமாகும் புதனால் உருவாகும் தன சாம்ராஜ்ய யோகத்தால் நல்ல நிதி பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் நட்பு வட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் திட்டங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த யோக காலம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது அற்புத பலன்களைத் தரவுள்ளது. ஏனெனில் இந்த யோகமானது 4 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் ஆளுமை மேம்படும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், பெட்ரோலியம், எண்ணெய் போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் தன சாம்ராஜ்ய யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


