Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
மேஷ ராசியில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாத தொடக்கம் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Mercury Retrograde In Aries On April 2024: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் அடிக்கடி வக்ர நிலையில் பயணிப்பார்.
அந்த வகையில் புதன் மார்ச் மாத இறுதியில் செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் புதன் வக்ரமாகி பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் மேஷ ராசியில் புதன் வக்ரமாவதால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, எதிர்பாராத பண வரவையும் பெறக்கூடும். இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் புதனால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் பெரிய வெற்றியைக் காண்பார்கள். உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். முதலீடுகளை செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடிக்கப்படும். உறவுகள் மேம்படும். சிலருக்கு புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
