Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Mercury Made Vipreet Rajyoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனான புதன் நவம்பர் 06 ஆம் தேதி செவ்வாயின் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். விருச்சிக ராசியில் புதன் நுழைந்ததால், விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலனைப் பெறுவார்கள். குறிப்பாக இந்த ராஜயோகத்தால் திடீர் பண ஆதாயத்தைப் பெறுவார்கள், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும், முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும். இப்போது இவ்வளவு நன்மைகளைப் பெறும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உள்ளார். மேலும் புதனின் நண்பர்களான சனி மற்றும் ராகுவின் பார்வையும் உள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் பெரிய லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறக்கூடும். வருமானத்தில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது பல அற்புதமான நன்மைகளை வாரி வழங்கும். முக்கியமாக வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதே வேளையில் இந்த காலகட்டத்தில் போடும் உங்களின் திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் எதிரிகளுக்கு நல்ல போட்டியைத் தருவீர்கள். முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது நன்மை பயக்கும். சிலருக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்கள் பணம் சிக்கியிருந்தால், அந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். சிலர் நல்ல ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரியில் பணத்தை முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
