Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
தியாகிகள் தினம் 2023: பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட மற்ற இரண்டு தியாகிகள் இளம் தியாகிகள் யார் தெரியுமா?
ஷஹீத் திவாஸ் அல்லது தியாகிகள் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று இந்திய சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜ்குரு ஆகிய மூன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் 1931 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தூக்கிலிடப்பட்ட அந்த மூன்று தியாகிகளுடன் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியப் பிரதமர் போன்ற நாட்டின் முக்கியமான தலைவர்கள் இந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு டெல்லியில் உள்ள அவரவர் நினைவுச் சின்னங்களில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள், அணிவகுப்பு மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்யும் வழக்கம் உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த நிகழ்வை நினைவுகூரவும், தியாகிகளின் தியாகங்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கவும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நாள் இந்திய மக்களுக்கு சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் நாட்டிற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டுகிறது.
1948, ஜனவரி 30 மகாத்மா காந்தி டெல்லியில் உள்ள பிர்லா இல்லத்தில் கோட்செவால் சுடப்பட்டார். எனவே மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனவரி 30 மற்றொரு தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தியாகிகள் தின வரலாறு
பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜ்குரு ஆகிய மூவரும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த அமைப்பு ஆங்கிலேர்களுக்கு எதிரான ஆயதப்போராட்டத்தை வழிநடத்தும் புரட்சிகர அமைப்பாக இருந்தது. அவர்களின் தியாகம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக இலட்சக்கணக்கான மக்களை கிளர்த்தெழ செய்தது.
அக்டோபர் 30, 1928 அன்று சர் ஜான் சைமனின் லாகூர் பயணத்திற்கு எதிராக 'சைமன், திரும்பிச் செல்' என்று லாலா லாஜ்பத் ராய் அமைதியான போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆர்ப்பாட்டம் அகிம்சையாக நடைபெற்றப்போதிலும், காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ ஸ்காட், ஆர்பாட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
லாலா லாஜ்பதி ராயின் மரணத்திற்குப் பிறகு, இளம் புரட்சிகர சுதந்திர போராளிகளாக இருந்த பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் ஜேம்ஸ் ஸ்காட்டை படுகொலை செய்ய முடிவு செய்தனர். இருப்பினும், அவர்கள் மற்றொரு காவல்துறை கண்காணிப்பாளரான ஜான் பி. சாண்டர்ஸை தவறாக தவறாக அடையாளம் கண்டு அவரைக் கொன்றனர்.
லாலா லஜ்பதி ராயின் மரணத்திற்கு பழிவாங்கும் முயற்சியில், பகத் சிங், சிவராம் ராஜ்குரு, மற்றும் சுக்தேவ் ஆகியோர் மத்திய சட்டமன்றத்தைத் தாக்கி, பொது பாதுகாப்பு மசோதா மற்றும் வர்த்தக தகராறு சட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்க திட்டமிட்டனர்.
ஏப்ரல் 8, 1929 அன்று, அவர்கள் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீச முயன்றனர், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பிடிபட்டனர். இதன் விளைவாக, மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மார்ச் 23, 1931 அன்று, அவை முறையே 23, 24, மற்றும் 22 வயதில் தூக்கிலிடப்பட்டனர். அந்த இளம் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவே இந்த நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications

