Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
செவ்வாயால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜனவரி 2024 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Mars Made Kendra Trikona Rajyoga: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அதன் நிலைகள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட கிரக சேர்க்கைகளால் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2024 ஜனவரி மாதம் வரை இருப்பார்.

விருச்சிக ராசியில் செவ்வாய் பயணிப்பதால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் திடீர் செல்வமும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையை புத்திசாலித்தனமாக செய்து முடிப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மேலம் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த யோக காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலர் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி இக்காலத்தில் கிடைக்கலாம். மருத்துவம், ஹோட்டல் போன்றவற்றில் வேலை செய்பவராக இருந்தால், இக்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உள்ளார் மற்றும் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை மீண்டும் தொடங்கி வெற்றி காணலாம். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications