Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செவ்வாய் கேது சேர்க்கை: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகுது...
Mars Ketu Conjunction In Libra On October 2023: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அவ்வாறு பயணிக்கும் போது அந்த கிரக சேர்க்கைகளின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2023 அக்டோபர் 03 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த துலாம் ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இதனால் அக்டோபர் 03 முதல் துலாம் ராசியில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்தது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் அற்புதமான பலனைப் பெறவுள்ளார்கள்.

முக்கியமாக இந்த செவ்வாய் கேது சேர்க்கையானது அக்டோபர் 29 வரை இருக்கும். ஏனெனில் அக்டோபர் 30 ஆம் தேதி கேது கன்னி ராசிக்கு செல்கிறார். துலாம் ராசியில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், 5 ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியையும், நல்ல பண வரவையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய், கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தைரியம் அதிகம் கொண்டிருப்பார்கள் மற்றும் சில முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள். இந்த முடிவுகளால் எதிர்பாராத நன்மைகளையும் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு அபதிமிதமான லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வரமான உயர்வு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். திடீரென்று பணம் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தமான துறையில் வேலை செய்பவர்களுக்கு, இக்காலம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்காக சிலர் நிறைய பணத்தை செலவழிப்பார்கள். அதே சமயம் இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். பேச்சு தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு இக்காலத்தில் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். இக்காலத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலகட்டம் மிகவும் அற்புதமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருந்தாலும், வருமானமும் அதே அளவில் அதிகரிக்கம். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications