Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
மார்ச் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு ரொமான்டிக்கா இருக்கப்போகுது.. உங்க ராசிக்கு எப்படி-ன்னு பாருங்க..
Love Horoscope For March 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மார்ச் மாதத்தில் நிகழும் கிரகங்களின் நிலைகள் மற்றும் பெயர்ச்சிகளால் ஒருவரது நிதி நிலை, தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவற்றுடன் காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தென்படும். அதுவும் காதல் கிரகமாக கருதப்படும் சுக்கிரன், மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்து, சனி பகவானுடன் பயணிக்கவுள்ளார்.
இது தவிர மற்ற கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் தாக்கம் இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காகவும், சிலருக்கு காதலில் விரிசலும் ஏற்படலாம். இப்போது 2024 மார்ச் மாதத்திற்கான காதல் ராசிபலன்களைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் மார்ச் மாதத்தில் உங்கள் மனதைக் கவரும் வாழ்க்கைத் துணையை சந்திப்பீர்கள். காதலிப்பவர்கள் இம்மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதாவது, உங்கள் காதலன்/காதலி உங்கள் வாழ்க்கைத் துணையாக மாற தயாராக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கு இம்மாதம் ரொமான்டிக்காக இருக்கும். இம்மாதத்தில் மறக்க முடியாத அளவில் சில அனுபவங்களைப் பெறுவீர்கள். இதனால் தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மார்ச் மாதமானது காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் துணையுடன் நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். இம்மாதத்தில் உங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த நீண்ட காலமாக தயங்கிக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் அதை வெளிப்படுத்துவார். இது உங்கள் இருவருக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இம்மாதத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட மற்றும் அழகான ஒரு வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். காதலிப்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். அதே சமயம் திருமணமானவர்களுக்கு இம்மாதத்தில் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இதனால் இருவரிடையே பிணைப்பு இன்னும் ஆழமாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! காதலிப்பவர்களுக்கு இந்த மார்ச் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சில விஷயங்களால் உங்கள் அன்புக்குரியவர் உங்கள் மீது கோபப்படலாம் மற்றும் உங்களிடம் இருந்து விலகி இருக்கலாம். இம்மாதத்தில் உங்கள் இருவருக்கும் இடையே புரிதல் குறையும். நீங்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால், இந்த மாதத்தில் தங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரால் ஈர்க்கப்படலாம். திருமணமானவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள போதுமான நேரத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் இருவருக்கும் இடையேயான உறவு வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மார்ச் மாதம் காதலிப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் உங்கள் மீது அதீத காதலுடன் இருப்பார். சிலர் துணையுடன் வெளியே செல்லலாம். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், ஒருவரால் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்குவீர்கள். அதே வேளையில் திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் ரொமான்டிக்கான சைகைகள் மூலம் தங்கள் உறவை வலுபடுத்துவார்கள். மேலும் இந்த மாதம் உங்கள் துணை உங்களுக்கு சில நல்ல செய்திகளை வழங்குவார்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த மாதம் உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. உங்கள் உறவுகளைக் கெடுக்க சிலர் முயற்சிப்பார்கள். இதனால் உங்கள் துணை உங்களை விட்டு பிரிந்து செல்லும் சூழல் ஏற்படலாம். இம்மாதத்தில் எந்த ஒரு பெரிய முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் உறவு மோசமடைந்துவிடும். பின் அதை சரிசெய்யவே முடியாமல் போய்விடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து ஒரு பெரிய முடிவை எடுக்கலாம். அந்த முடிவுகள் உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் காதலிப்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். இம்மாதத்தில் உங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதல் குறையும். இதனால் தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதம் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க விரும்பினால், துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! காதலிப்பவர்களுக்கு மார்ச் மாதம் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இதுவரை ஒருதலையாக காதலித்து வந்தால், இம்மாதத்தில் உங்கள் காதலி/காதலன் தனது கருத்துக்களை உங்களிடம் தெரிவிப்பார். அதாவது, உங்கள் காதலை அவர் ஏற்றுக் கொள்ளலாம். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மார்ச் மாதம் காதலிப்பவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் காதலன்/காதலி உங்கள் மீது கோபமாக இருக்கலாம். உங்கள் காதலுக்கு குடும்பத்தாரும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். இதனால் இம்மாதம் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களைப் புரிந்து நடந்து கொள்வது நல்லது. அதற்கு அவருடன் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். இதனால் அவர்கள் தனது உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்த முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த மார்ச் மாதத்தில் காதலிப்பவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இருவரும் மனம் விட்டு பேசினால் பிரச்சனைகள் தீரும். இருப்பினும் பேசும் போது கட்டுப்பாட்டுடன் இருங்கள். தவறுகளை ஏற்றுக்கொள்வது உறவுகளை மேம்படுத்தும் என்றால், அந்த தவறுகளை ஏற்று பிரச்சனையை சரிசெய்ய பாருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மார்ச் மாதமானது காதலிப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஒருதலையாக காதலித்து வருபவர்கள், இதுவரை தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் இருந்தால், இம்மாதத்தில் வெளிப்படுத்தினால் நல்ல பதிலைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications