Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
18 டன் தங்கத்துடன் மெக்காவிற்கு பயணம் செய்த உலகின் பணக்கார மனிதர்... அந்த பயணத்தில் என்ன நடந்தது தெரியுமா?
சமீபத்தில் சவூதி அரசாங்கம் ஹஜ் புனித யாத்திரையின் போது யாத்ரீகர்களுடன் குழந்தைகள் செல்வதைத் தடை செய்துள்ளது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த புனித தளத்திற்கு வருகைதருவதால் கூட்ட நெரிசலால் ஏற்படும் அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரு அரசரின் ஹஜ் பயணம் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவரின் பயணத்தின் போது 100 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் மீது தங்கம் ஏற்றப்பட்டது, 12,000 உதவியாளர்கள் மற்றும் 60,000 அடிமைப்படுத்தப்பட்ட நபர்களின் பரிவாரங்களுடன் மெக்காவிற்குச் சென்ற கதையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வரலாற்று குறிப்புகளின் படி அவர் தோராயமாக 18 டன் தங்கத்தை கொண்டு சென்றதாகக் கூறுகின்றன, இதன் மதிப்பு கிட்டத்தட்ட $957 மில்லியனுக்கு அதிகமானதாகும். வரலாற்றின் மிகவும் ஆடம்பரமான இந்த பயணத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மான்சா மூசா
உலக வரலாற்றின் மிகப்பெரிய பணக்கார அரசராக அறியப்படுபவர் மான்சா மூசா. மான்சா மூசா ஆப்பிரிக்காவில் மாலி பேரரசின் சக்திவாய்ந்த ஆட்சியாளராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில், பேரரசு இன்றைய மாலி, கினியா, செனகல், நைஜர் மற்றும் மவுரித்தேனியா முழுவதும் விரிவடைந்தது. கி.பி 1280 இல் பிறந்து கி.பி 1312 இல் அரியணை ஏறிய மான்சா மூசா, வரலாற்றின் மிகப்பெரிய பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். பேரரசின் ஒன்பதாவது ஆட்சியாளராக, அவர் தனது மகத்தான செல்வம் மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்காக பிரபலமானார். இவரிடமிருந்த செல்வம் இப்போதிருக்கும் பல பில்லினியர்களை விட மிகவும் அதிகமாகும்.
பொருளாதார உத்திகள்
நவீன பொருளாதார உத்திகளைப் பயன்படுத்தி மான்சா மூசா தனது பேரரசை வலுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் தங்கமும், உப்பும் மிகவும் மதிப்புமிக்க வர்த்தகப் பொருட்களாக இருந்தன, மேலும் ஒரு முக்கியமான வர்த்தகப் பாதை மாலி பேரரசு வழியாகச் சென்றது.
இந்த பாதை மத்தியதரைக் கடல், அரபு உலகம் மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்பட்டது. இந்த முக்கியமான பாதையின் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதன் மூலம், மாலி பேரரசு பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டது. வர்த்தக வரிகளை விதித்தது மற்றும் ராஜ்ஜியத்தின் செல்வத்தை கணிசமாக உயர்த்தியது.
மெக்கா பயணம்
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் மாலி சாம்ராஜ்யத்தை ஆண்ட பிறகு, மான்சா மூசா மெக்காவிற்கு பயணம் செய்ய முடிவு செய்தார். வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அவர் 12,000 உதவியாளர்கள் உட்பட 60,000 க்கும் மேற்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட நபர்களின் பெரும் பரிவாரங்களுடன் பயணம் செய்தார். அவர்களுடன், தங்கம் ஏற்றிய நூற்றுக்கணக்கான ஒட்டகங்களும் இந்த ஆடம்பரமான ஊர்வலத்தில் பங்கேற்றன.
இந்த பயணத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் தங்கக் கட்டிகளை சுமந்து வந்த 500 அடிமைகள். கூடுதலாக, ஒட்டகங்கள் மீதும் ஏராளமான தங்கம் நிரப்பப்பட்டிருந்தது. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் குறிப்புகளின் படி, மான்சா மூசா தனது ஹஜ் யாத்திரையில் கொண்டு வந்த தங்கத்தின் அளவு 18 டன்களை தாண்டியதாகக் கூறுகிறது. அவர் தான் சென்ற வழியில் இருந்த அனைத்து ஊர் மக்களுக்கும் தங்கத்தை பகிர்ந்தளித்தார். அவரது பயணம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே மாற்றியது. அதனால்தான் அவரது மெக்கா பயணம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் வராலற்றில் நிலைத்து நிற்கிறது.



Click it and Unblock the Notifications
