Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்தியாவிலேயே முதல் முறையாக விமானம் சொந்தமாக வாங்கிய இந்திய மன்னர் யார் தெரியுமா? இவர் அவராச்சே...!
இந்திய வரலாற்றில் பல ராஜாக்கள் தங்களின் வீரத்தால் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர், அதேசமயம் சில இந்திய ராஜாக்கள் அவர்களின் வினோதமான செயல்களாலும், ஆடம்பர வாழ்க்கை முறையாலும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.
பண்டைய இந்திய மகாராஜாக்கள், மகாராணிகள், நவாப்கள் மற்றும் நிஜாம்கள் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக அறியப்பட்டனர். இந்த மன்னர்கள் தங்களுடைய பளபளக்கும் அரண்மனைகள், இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த நகைகள் மூலம் 'live life king size' என்ற வார்த்தைக்கு அர்த்தமாக வாழ்ந்து காட்டினர். அவர்களில் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் ஒரு தனித்துவமான மன்னராக வாழ்ந்தார்.

மகாராஜா பூபிந்தர் சிங்கின் அதிசய நெக்லெஸ்
1928 ஆம் ஆண்டில், மகாராஜா பூபிந்தர் சிங் 40 வேலைக்காரர்கள் மற்றும் மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்கள் மற்றும் வைரங்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளுடன் பாரிஸ் வந்தார். அவரது பயணத்தின் நோக்கம் அதுவரை யாரும் செய்திராத விலையுயர்ந்த ஆடம்பரமான நகையை செய்ய ஆர்டர் செய்வதாகும். அவர் வரலாற்று சிறப்புமிக்க பௌச்செரான் மைசனை தேர்ந்தெடுத்தார், 149 துண்டுகள் கொண்ட தலைசிறந்த படைப்பை உருவாக்க 7,571 வைரங்கள், 1,432 மரகதங்கள் மற்றும் பிற ரத்தினக் கற்களைத் தேர்ந்தெடுத்தார். இருப்பினும், rench luxury house Cartier-உடன் அவர் செய்த இணைப்பு புகழ்பெற்றது. லூயிஸ் கார்டியர் மகாராஜாவின் நகைகளை பாட்டியாலா நெக்லஸாக மாற்றினார், அதில் டி பீர்ஸ் மஞ்சள் வைரம் (உலகின் ஏழாவது பெரிய பளபளப்பான வைரம்) மற்றும் 2,900 பிற வைரங்கள் ஐந்து வரிசை பிளாட்டினம் சங்கிலிகளில் அமைக்கப்பட்டன.
இந்த நெக்லஸ் கடைசியாக 1948 ஆம் ஆண்டு பூபிந்தர் சிங்கின் மகன் யாதவிந்திர சிங் அணிந்திருந்தபோது, அது அரச கருவூலத்தில் இருந்து காணாமல் போனது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, அது பல கற்கள் மற்றும் முக்கிய வைரங்கள் காணாமல் போன நிலையில் மீண்டும் தோன்றியது. கார்டியர் அதை மீண்டும் பெற்று, காணாமல் போன பாகங்களை மாற்றுக் கற்களால் மாற்றியுள்ளார். இன்று இந்த பாட்டியாலா நெக்லஸின் மதிப்பு தோராயமாக $30 மில்லியன் (ரூ. 248 கோடி) இருக்கும்.
மகாராஜா பூபிந்தர் சிங் சொகுசு கார்கள் மீதும் அதிக நாட்டம் இருந்தது மற்றும் அவரது கேரேஜில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமே 27 முதல் 44 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சொந்த விமானங்கள்
தனக்கென சொந்த விமானம் வைத்திருந்த முதல் இந்தியர் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த நபரும் மகாராஜா பூபிந்தர் சிங்தான். 1909 இல் பிரெஞ்சு விமானப் பயண முன்னோடி லூயிஸ் பிளெரியட் ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாகக் கடந்த பிறகு, பூபிந்தர் சிங் தனது தலைமைப் பொறியாளரை ஐரோப்பாவிற்கு அனுப்பினார். அவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இரண்டு ஹென்றி ஃபார்மன் பைப்ளேன் மற்றும் ஒரு பிளெரியட் XI மோனோபிளேன் என மொத்தம் மூன்று விமானங்களை வாங்கினார்.
கிரிக்கெட் ஆர்வம்
மகாராஜா 1911 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த ஒரு Professional கிரிக்கெட் வீரராகவும் இருந்தார். அவரது ஆதரவின் கீழ், பாட்டியாலா XI (கிரிக்கெட்) மற்றும் பாட்டியாலா டைகர்ஸ் (போலோ) ஆகியவை இந்தியாவின் முதன்மையான விளையாட்டு அணிகளில் இரண்டாக மாறியது. உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானமான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சைல் கிரிக்கெட் மைதானத்தையும் அவர்தான் கட்டி முடித்தார். இன்றைய காலகட்டத்தில் அவருடைய சொத்து மதிப்பீட்டின்படி பார்த்தால், அவர் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடாவை விட பணக்காரராக இருந்திருப்பார்.
மகாராஜாவின் அந்தரங்க வாழ்க்கை
மகாராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது பொதுவாழ்க்கையை விட மிக ஆடம்பரமாக இருந்தது. அவர் பத்து மனைவிகளை மணந்தார் மற்றும் 350 அழகிகளைக் கொண்ட ஒரு அந்தபுரத்தைத் தனக்கென வைத்திருந்தார். இந்த மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து, அவர் 88 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.



Click it and Unblock the Notifications
