Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..

Mahalaya Amavasya 2026: முன்னோர்களை வழிபட உகந்த நாள் தான் மகாளய அமாவாசை. வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் மகாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. நம்மை இவ்வுலகிற்கு கொண்டு வந்து மறைந்த முன்னோர்களின் இறந்த திதி மற்றும் இறந்த தேதி தெரியாதவர்கள், மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற சடங்குகளை செய்தால், அது அவர்களை அடைந்து, முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களின் ஆசீர்வாதம் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்க வழிவகுக்கின்றன.

Mahalaya Amavasya 2026 5 Items You Should Never Bring Home

முக்கியமாக இந்த மகாளய அமாவாசை நாளன்று குறிப்பிட்ட சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவேளை அந்த பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால், அது ஒருவரது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைப்பதாக கூறப்படுகிறது. இப்போது மகாளய அமாவாசை நாளில் எந்தெந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்பதைக் காண்போம்.

1. இரும்பு பொருட்கள்

மகாளய அமாவாசை நாளில் இரும்பையோ அல்லது இரும்பால் செய்யப்பட்ட பொருட்களையோ வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. அப்படி இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், அது வீட்டில் நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, சனி தோஷத்தையும் உண்டாக்குவதாக நம்பப்படுகிறது.

2. கூர்மையான பொருட்கள்

மகாளய அமாவாசை நாளன்று கூர்மையான பொருட்களான கத்தி, கத்திரிக்கோல், ஆணி போன்ற பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவது அசுபமாக கருதப்படுகிறது. ஒருவேளை இப்படியான பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், அது குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி, கருத்து வேறுபாடுகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஆகவே அமாவாசை நாட்களில் கூர்மையான பொருட்களை எந்த காரணத்திற்காகவும் வாங்காதீர்கள்.

3. கடுகு எண்ணெய்

மகாளய அமாவாசை நாளன்று கடுகு எண்ணெயை வீட்டிற்கு கொண்டு வருவது அசுபமானதாக கருதப்படுகிறது. ஒருவேளை இந்த எண்ணெயை வாங்கி வந்தால், அது வீட்டில் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் ஏற்கனவே இந்த எண்ணெய் வீட்டில் இருந்தால், அந்த எண்ணெயைக் கொண்டு ஒரு விளக்கேற்றுங்கள். இது முன்னோர்களையும், சனி பகவானையும் கௌரவிக்கும் வகையில் இருக்கும்.

4. புதிய ஆடைகள்

அமாவாசை நாளானது முன்னோர்களை வழிபட ஏற்ற நாளாகும். இந்நாளில் புதிய ஆடைகளை வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கினால், அது வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

5. காலணிகள்

மகாளய அமாவாசை முன்னோர்களை திருப்திப்படுத்தி, அவர்களின் ஆசியைப் பெற உகந்த நாளாகும். இந்த நாளன்று புதிய காலணிகளை வாங்காதீர்கள். இல்லாவிட்டால், அது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 9, 2026, 11:42 [IST]
Desktop Bottom Promotion