Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மகா சிவராத்திரி அன்று உங்க ராசிக்கேற்ற ருத்ராட்சத்தை அணிந்தால்.. சிவனின் ஆசி எப்பவும் இருக்குமாம்...
Maha Shivratri 2024: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ சதுத்தசியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் பலரும் சிவனின் ஆசியைப் பெற விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள்.
சிவபெருமானின் தெய்வீக ஆற்றலை உள்ளடக்கியதாக நம்பப்படும் ஒரு புனிதமான மணி தான் ருத்ராட்ச மணிகள். இந்த மணிகள் வெறும் அலங்கார பொருள் மட்டுமல்ல. இந்த மணிகள் தூய்மையானவை, ஒருவரது வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், பாதுகாப்பை அளிக்கும் மற்றும் ஆன்மீக ஆற்றலைக் கொண்டவை.

இந்த ருத்ராட்ச மணிகளில் பல முகங்கள் உள்ளன. சிவ பக்தர்கள் பலர் சிவனின் ஆசி எப்போதும் கிடைக்க வேண்டுமென்று ருத்ராட்ச மணிகளை அணிந்திருப்பார்கள். நீங்களும் ருட்ராட்சத்தை அணிய விரும்பினால், அதற்கு உகந்த நாள் இந்த மகா சிவராத்திரி தான். இந்த மகா சிவராத்திரி நாளில் ஒருவர் தங்களது ராசிக்கேற்ற ருத்ராட்சத்தை அணிவது மிகவும் நல்லது. இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த முக ருத்ராட்சத்தை அணியலாம் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்ச மணியை அணிவது சிபெருமானின் ஆசியைப் பெற உதவுவதோடு, தைரியம், வலிமை மற்றும் செழிப்பைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று 6 முகம் கொண்ட ருத்ராட்ச மணியை அணிவது நல்லது. இந்த முக ருத்ராட்சம் முயற்சிகளில் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த மிதுன ராசிக்காரர்கள் 4 முக ருத்ராட்சத்தை மகா சிவராத்திரி நாளில் அணிந்தால், சிவனின் அருயைப் பெறலாம். இந்த முக ருத்ராட்சமானது வெற்றி, புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் 2 முக ருத்ராட்சத்தை அணிவது அதிர்ஷ்டத்தையும், சிவபெருமானின் பரிபூர்ண அருளைப் பெற உதவும். மேலும் இந்த முக ருத்ராட்சம் உள்ளுணர்வையும் உள் அமைதியையும் பலப்படுத்துகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். எனவே இந்த சிம்ம ராசியைக் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் 12 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவது நல்லது. இந்த முக ருத்ராட்சம் தலைமைப்பண்பு, செழிப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் 4 முக ருத்ராட்ச மணியை மகா சிவராத்திரி நாளில் அணிவது நல்லது. இந்த ருத்ராட்சம் தெளிவான சிந்தனை மற்றும் இலக்கை வெற்றி அடையத் தேவையான பாதையை அமைத்து தரும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசிக்காரர்கள் 6 முக ருத்ராட்சத்தை மகா சிவராத்திரி நாளில் அணிவது நல்லது. இது காதல், நல்லிணக்ககம் மற்றும் உறவில் சமநிலையைப் பராமரிக்கும் பண்பை மேம்படுத்துகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் 3 முகம் கொண்ட ருத்ராட்ச மாலையை மகா சிவராத்திரி நாளில் அணிவது நல்லது. இந்த முக ருத்ராட்சம் தைரியம், பாதுகாப்பைத் தருவதோடு, வாழ்வில் செழிப்பைக் கொண்டு வருகிறது.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று 5 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம். இந்த ருத்ராட்சம் ஞானத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும், தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியையும் தருகிறது.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசியைச் சேர்ந்தவர்கள் 7 முகம் கொண்ட ருத்ராட்சத்தை மகா சிவராத்திரி நாளில் அணிவது நல்லது. இந்த ருத்ராட்சம் வாழ்வில் உள்ள தடைகளை நீக்குகிறது, வெற்றியை ஊக்குவிக்கிறது மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க உதவுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். இந்த ராசியைச் சேர்ந்தவர்களும் மகா சிவராத்திரி நாளில் 7 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவதே நல்லது. இப்படி அணிவதால், இந்த ருத்ராட்சம் எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது மற்றும் ஆன்மிக வளர்ச்சியை அதிகரிக்குகிறது.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் 5 முகம் கொண்ட ருத்ராட்ச மணிகளை மகா சிவராத்திரி நாளில் அணிய வேண்டும். இப்படி அணிவதால் சிவனின் ஆசி கிடைப்பதோடு, இந்த ருத்ராட்சம் உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக அறிவொளியை மேம்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications