Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
Maha Shivratri 2024: ஏழரை சனியால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப மகா சிவராத்திரி நாளில் இத செய்யுங்க..
Maha Shivratri 2024: இந்த ஆண்டின் மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவது வழக்கம். இந்து மதத்தில் மகா சிவராத்திரியின் முக்கியத்துவம் கொண்டாடும் பகுதி மற்றும் பாரம்பரியங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.
சிலர் இந்த மகா சிவராத்திரி நாளானது சிவபெருமானின் ருத்ர தாண்டவம் நிகழ்த்திய நாள் என நம்புகிறார்கள். இன்னும் சிலர் இந்நாளில் தான் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் நடைபெற்றதாக நம்புகிறார்கள்.

எதுவாயினும், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு செய்யப்படும் பூஜைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுமட்டுமின்றி இந்த நன்னாளில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் முலம், ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் சிவபெருமானின் தீவிர பக்தர் தான் சனி பகவான். எனவே சிவபெருமானை சரியான வழியில் வழிபடும் போது, சிவனின் ஆசியால் வாழ்வில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை. இப்போது மகா சிவராத்திரி நாளில் ஏழரை சனியின் மோசமான தாக்கத்தைக் குறைக்கவும், அதிலிருந்து விடுபடவும் செய்ய வேண்டியவைகள் குறித்து காண்போம்.
வன்னி இலை பூஜை
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடும் போது, சிவனின் அருளை எளிதில் பெற வேண்டுமானால், வன்னிமர இலைகளை படைத்து பூஜித்து, 108 முறை "மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை" பாராயணம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலும், ஏழரை சனியின் தாக்கம் அல்லது சனியின் தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
சிவ சாலிசாவை சொல்லவும்
ஏழரை சனி நடப்பவர்கள், சனி பகவானால் வாழ்வில் தாங்க முடியாத பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபட மகா சிவராத்திரி நாளில் சிவ சாலிசாவை பாராயம் செய்யுங்கள். இவ்வாறு சொல்வதன் மூலம், சனியின் தாக்கம் குறையும்.
தானம் செய்யவும்
சிவபெருமானை மகிழ்விக்கவும், அவரது ஆசியைப் பெறவும் நினைத்தால், மகா சிவராத்திரி நாளில் ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். அதுவும் வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் ஏழை எளியோருக்கு தானம் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
அபிஷேகம் செய்யவும்
மங்களகரமான மகா சிவராத்திரி நாளில் கங்கை நீரில் எள்ளு விதைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இப்படி செய்வதனால் சிவபெருமானின் ஆசியுடன், சனி பகவானின் ஆசீர்வாதமும் கிடைத்து, வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வரும் பெருகுவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications