Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Maha Shivratri 2024: மகா சிவராத்திரி அன்று இதெல்லாம் செஞ்சுடாதீங்க.. இல்ல சிவனின் கோபத்துக்கு ஆளாவீங்க...
Maha Shivratri 2024: சிவ பக்தர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் மகா சிவராத்திரியும் ஒன்று. இந்த மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாகும். இந்நாளில் சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து விரதமிருப்பார்கள்.
இந்த மகா சிவராத்திரி நாளில் தான் பார்வதி தேவியும், தேவர்களும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வேண்டிய வரங்களைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்நாளிள் சிவபெருமானை மனதார வழிபட்டால், சிவன் நமது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பார்.

இப்படிப்பட்ட மகா சிவராத்திரி நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று ஒருசில விஷயங்கள் உள்ளன. ஆனால் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இப்படி தெரியாமல் மகா சிவராத்திரி நாளில் செய்யும் சில தவறுகளால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். இப்போது மகா சிவராத்திரி நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் என்னென்ன என்பதைக் காண்போம்.
மகா சிவராத்திரி நாளில் செய்ய வேண்டியவைகள்:
* மகா சிவராத்திரி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, நல்ல சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
* இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து கொண்டாடுவார்கள். அதில் சிலர் நீரை சிறிதும் அருந்தமாட்டார்கள். ஆனால் விரதத்தின் போது குறிப்பிட்ட பொருட்களை சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. அதில் பால் பொருட்கள், ஜவ்வரிசி, பாயாசம் போன்றவற்றை சாப்பிடலாம். மேலும் பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தையும் பகல் வேளையில் சாப்பிடலாம். சூரிய அஸ்தமனத்திற்கு பின் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.
* மகா சிவராத்திரி நாளில் சிவனை வழிபட அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லவும். இல்லாவிட்டால் வீட்டில் சிவலிங்கம் இருந்தால், அதை வழிபடலாம். சிவபெருமானுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சிவராத்திரி நாள் இரவில் சிவலிங்கத்திற்கு பால் அல்லது தயிர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தேன் கொண்டும் அபிஷேகம் செய்யலாம்.
* முக்கியமாக மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போர் சிவபெருமானின் மந்திரங்களை நாள் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும். சிவ மந்திரங்களுக்கு குறிப்பிட்ட சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சிவபெருமானுக்குரிய மந்திரங்களை கூறுங்கள். சிவ மந்திரங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரம் தான் "ஓம் நம சிவாய" என்னும் மந்திரம்.
* சிவபெருமானுக்கு பால் பொருட்கள், பழங்கள், பால் பொருட்களான இனிப்புக்களை படைத்து வழிபடுவது நல்லது. முக்கியமாக மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு கண் விழித்திருந்து, சிவனை வழிபட வேண்டும்.
மகா சிவராத்திரி நாளில் செய்யக்கூடாதவைகள்:
* மகா சிவராத்திரி நாளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிவபெருமானுக்கு கருப்பு நிறம் பிடிக்காது.
* சிவபெருமானுக்கு சிவப்பு நிற பூக்கள் பிடிக்காது. எனவே மகா சிவராத்திரி நாளில் சிவப்பு நிற பூக்களை படைத்து வழிபடுவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு தாழம்பூவை படைத்து வழிபடுவதையும் தவிர்க்க வேண்டும்.
* துளசி இலைகளை சிவபெருமானுக்கு படைத்து வழிபடுவதைத் தவிர்க்க வேண்டும். சிவ பூஜைக்கு துளசி இலைகளைப் படைத்தால், அந்த பூஜை முழுமையடையாது.
* புராணங்களின் படி, சிவலிங்கத்தை எப்போதும் முழுமையாக சுற்றக்கூடாது. அரை வட்டமாகத் தான் சுற்ற வேண்டும்.
* சிவபெருமானுக்கு வில்வ இலைகளை படைத்து வழிபடுவதாக இருந்தால், அந்த இலைகள் சேதமடைந்திருக்கக்கூடாது. சேதமடைந்த இலைகள் தெய்வத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது.
* சிவபெருமானுக்கு எப்போதும் வெண்கல பாத்திரத்தில் பாலை வழங்கக்கூடாது. எப்போதும் செம்பு பாத்திரத்தில் தான் வழங்க வேண்டும்.
* சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு இளநீரை வழங்குவதை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications