Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
Maha Shivratri 2024: மகா சிவராத்திரி அன்று இந்த பொருட்களை தானம் செய்யுங்க.. சிவனின் அருளால் செல்வம் பெருகும்..
Maha Shivratri 2024: ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைப்பர். இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய ஒரு விரதம் தான் மகா சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வரும். மற்ற அனைத்து சிவராத்திரிகளை விடவும், இந்த சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2024 மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வதும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. சிவ பக்தர்கள் இந்நாளில் சிவபெருமானின் ஆசியை பெற கடுமையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழிந்து, சிவனுக்கு மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வர்.

இது தவிர இந்நாளில் சிவனின் ஆசியைப் பெற ஒருசில பொருட்களை தானம் செய்வார்கள். இப்போது சிவனின் அருளால் பண பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருக மகா சிவராத்திரி நாளில் எந்த பொருட்களை தானம் செய்யலாம் என்பதைக் காண்போம்.
1. நெய்
மகா சிவராத்திரி நாளில் நெய் வாங்கி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய கொடுப்பதுடன், நெய்யை தானம் செய்தால், வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் மற்றும் பணப் பற்றாக்குறை நீங்கி, வீட்டில் நேர்மறையான சூழல் உருவாகி, சிவனின் அருளால் செல்வம் பெருகும்.
2. பால்
மகா சிவராத்திரி நாளன்று சிவ லிங்கத்திற்கு பாலை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுப்பது, மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. இது தவிர, ஏழை எளியோருக்கு பால் பொருட்களை தானம் செய்தால், மன நிம்மதி கிடைக்கும். மேலும் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் போது, ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அவர் வலுவடைவதாக கூறப்படுகிறது.
3. கருப்பு எள்ளு விதைகள்
மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு கருப்பு எள்ளு விதைகளை வாங்கி வாங்கினால், மூதாதையர்களின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இப்படி செய்வதால் பித்ரு தோஷம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. நம்பிக்கைகளின் படி, எள்ளு விதைகளை ஒருவருக்கு தானம் செய்யும் போது, தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
4. ஆடைகள்
மகா சிவராத்திரி நாளில் ஏழை எளியோருக்கு ஆடைகளை தானம் செய்தால், வாழ்வில் உள்ள பண பிரச்சனைகள் தீரும். மேலும் இச்செயலால் வீட்டின் வருமானத்தில் உயர்வு ஏற்படும், கடன் தொல்லை தீரும் மற்றும் சிவனின் பரிபூர்ண அருள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 4 பொருட்களைத் தவிர, சர்க்கரை, தேன், வில்வ பழம், சந்தனம் போன்ற பொருட்களையும் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி கொடுத்தால், சிவனின் அருளைப் பெறலாம். எனவே இந்த பொருட்களை மகா சிவராத்திரி நாளில் வாங்கி கொடுத்து, சிவனின் பரிபூர்ண ஆசியைப் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
