Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
சிவனுக்கு பிடித்த ராசிகள் எது தெரியுமா? இதில் உங்க ராசி உள்ளதா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. மேலும் அந்த கிரகம் குறிப்பிட்ட ராசியில் பிறந்தவரின் வாழ்க்கையை பாதிக்கிறது. இதனால் பலர் சில சமயங்களில் தங்கள் வாழ்வில் சரியான பாதைகளைக் கண்டுபிடித்து அதைப் பற்றிய வழிகாட்டுதலைப் பெற முடிவதில்லை. இந்த நேரத்தில் அவர்கள் தெய்வீக ஆசீர்வாதங்களை நாடுகிறார்கள். ஆனால் சில ராசிகளில் பிறந்தால் சில தெய்வங்களின் ஆசிகள் நேரடியாக கிடைக்கும்.
இந்து புராணங்களில், சிவன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். சிவனின் அருளைப் பெறுவதே வாழ்வில் மிகப் பெரிய வரம். சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே ஈசனின் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பர். இதனால் சிவபெருமான் அருள் பெற்றவர்களுக்கு பிரச்சனைகள் அவ்வளவாக இருக்காது. கடுமையான தவம் மற்றும் விரதத்தை மேற்கொண்டால் மட்டுமே சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வேண்டுதல்கள் மூலமே சிவபெருமானின் ஆசிகளை பெறுவார்கள். அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தைரியம், உறுதிப்பாடு மற்றும் தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் லட்சிய இயல்புக்காக சிவபெருமானால் சிறப்பாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். சிவனின் ஆசிகள் அவர்களுக்குத் தடைகளைத் தாண்டி, தங்கள் இலக்குகளை அடையவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தேவையான வலிமையையும் வழிகாட்டுதலையும் தருகின்றன.
கடகம்
கடகம் சந்திரனால் ஆளப்படுகிறது. கடக ராசியினர் உணர்ச்சி, உணர்திறன் மற்றும் அக்கறையுள்ள இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் தங்கள் உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர்.
கடக ராசிக்காரர்கள் சிவபெருமானிடம் சிறப்பு அருள் பெறுவார்கள். சிவபெருமான் அவர்களுக்கு உணர்ச்சி நிலைத்தன்மையையும், உள் அமைதியையும், ஆன்மீக வளர்ச்சியையும் தருகிறார். இந்த ஆசீர்வாதங்கள் சவாலான சமயங்களில் உதவி பெறவும், அன்புக்குரியவர்களுடன் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
சிம்மம்
சிம்மம் சூரிய கிரகத்தினால் ஆளப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். மேலும் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள். சுறுசுறுப்பான ஆளுமை இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் சிவனிடம் சிறப்பு ஆசிகளை எதிர்பார்க்கலாம். இது அவர்களின் படைப்பு முயற்சிகளை மேம்படுத்துகிறது. சிம்ம ராசிக்காரர்கள் சிவன் அருளால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வலிமை பெறுவார்களாவர். இது அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அவர்களின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் அதிகரிக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் கிரக அதிபதி. விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு சிவபெருமானின் விசேஷ அருள் இருக்கின்றது. குறிப்பாக பணியிடத்திலும் வியாபாரத்திலும் ஏற்படும் சங்கடங்களை சிவன் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். சிவபெருமானின் அருள் அவர்களின் பலத்தை அதிகரிக்கிறது. பழைய துக்கங்களிலிருந்து அவர்களை விடுவித்து, புதிய பயணத்தைத் தொடங்க பலம் தருகிறது.
கும்பம்
கும்ப ராசிக்கு சனி பகவான்தான் அதிபதி. மகும்ப ராசிக்காரர்கள் மீதும் சிவபெருமானுக்கு அதிகப்படியான பற்று உள்ளது. சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவனால் தீர்வு கிடைக்கும். சிவபெருமான் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அளிக்கிறார். இந்த ராசியினர் சிவனை வழிபட்டால் எந்த ஒரு கடின சூழ்நிலையில் கூட எளிதில் மகிழ்ச்சியைப் பெற்றிடுவார்கள் என்பது ஐதீகம். கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள் 'ஓம்நமசிவாய' என்ற பஞ்சாஷர மந்திரத்தை இரவு முழுவதும் பாராயணம் செய்தால் வாழ்வில் அதிகப்படியான நன்மைகளை பெறலாம்..



Click it and Unblock the Notifications