Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
இந்திய தேர்தல் வரலாற்றில் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் தெரியுமா?
Lok Sabha Election 2024: இந்தியாவின் தேர்தல் திருவிழா கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது, இந்தியாவின் தலையெழுத்து என்னவென்பது இன்னும் ஒரே நாளில் தெரிந்து விடும். அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை தங்களை ஆளப்போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்துவடன் உள்ளனர். இந்திய தேர்தல் வரலாற்றில் நடந்து முடிந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
இந்தியாவின் கடந்த தேர்தல்களில் சில வேட்பாளர்கள் வரலாறு வெற்றியைப் பெற்றுள்ளனர். சில நட்சத்திர வேட்பாளர்களை விட மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்த சில வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரீதம் முண்டே
மறைந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கோபிநாத் முண்டேவின் இரண்டாவது மகளான பிரீதம் முண்டே, மகாராஷ்டிராவின் பீட் தொகுதியில் இடைத்தேர்தலில் ஏறக்குறைய ஏழு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மக்களவை தேர்தலின் வரலாற்றை மாற்றி எழுதினார்.
ஒரு வேட்பாளர் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், லோக்சபா தேர்தலில் அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனில் பாசு தான் சாதனை படைத்திருந்தார். 2004 பொதுத் தேர்தலின் போது மேற்கு வங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் அவர் 5,92,502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 32 வயதான பிரீதம் முண்டே மொத்தம் 9,16,923 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் அசோக்ராவ் சங்கர்ராவ் பாட்டீல் 2,24,678 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
சிஆர் பாட்டீல்(பாஜக)
பாரதிய ஜனதா கட்சியின் சிஆர் பாட்டீல், குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியாளரை 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தபோது, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அனைத்து சாதனையையும் முறியடித்தார். இருப்பினும், 2014 அக்டோபரில் ப்ரீதம் முண்டே செய்த 6.96 லட்சம் சாதனையை விட அவரது வித்தியாசம் சற்று குறைவாகவே இருந்தது.
அனில் பாசு, சிபிஐ (எம்)
லோக்சபா தேர்தலில் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சாதனையை 2004 முதல் 2014 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அனில் பாசு வைத்திருந்தார். அவர் 2004 பொதுத் தேர்தலின் போது மேற்கு வங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் 5,92,502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எட்டாவது மக்களவைத் தேர்தலில் 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள ஆரம்பாக் தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிபிஐ (எம்) கட்சி 2012 இல் அவரை கட்சிக்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஒழுக்க மீறல் குற்றச்சாட்டிற்காக கட்சியை விட்டு நீக்கியது.
பிவி நரசிம்மராவ் (காங்கிரஸ்)
மூன்றாவது அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனையை மறைந்த பிரதமர் பிவி நரசிம்ம ராவ் வைத்துள்ளார். 1991ல் ஆந்திராவின் நந்தியால் தொகுதியில் 5.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். நரசிம்மராவ் பெற்ற வெற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
நரசிம்மராவ் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பத்தாவது பிரதமராக பணியாற்றினார். தென்னிந்தியாவில் இருந்து பிரதமர் பதவியை பெற்ற சாதனையை அவர் படைத்தார். அவர் திறம்பட நிர்வாகத்தை வழிநடத்தினார், ஒரு பெரிய பொருளாதார மாற்றம் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார். அவர் பெரும்பாலும் 'இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை' என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.
நரேந்திர மோடி (பாஜக)
இந்தியாவின் பதினான்காவது பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வதோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 11,43,524 வாக்குகள் பதிவாகின. அதற்கு முன்பு நடந்த தேர்தலில் பாஜகவின் பால்கிருஷ்ணா சுக்லா, 2009-ல் 49.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2014-ல் 70.75 சதவீத வாக்குகள் பதிவாகின.
ராம்விலாஸ் பாஸ்வான் (எல்ஜேபி)
லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் 1989 தேர்தலில் ஜனதா தளம் சார்பில் ஹாஜிபூர் தொகுதியில் 5,04,448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிக ஒட்டு வித்தியாசத்தில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர்தான். இரண்டாவது முறையாக 1977ல் பாரதிய லோக்தளம் சார்பில் 4,24,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும், முன்னாள் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி 1969 இல் பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2014 பொதுத் தேர்தலில் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து 16வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் அவரது மகன் சிராக் பாஸ்வான் ஜமுய் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.



Click it and Unblock the Notifications
