Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
உலகிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் டாப் 10 நாடுகள் இதுதான்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Countries With the Highest Suicide Rates: தற்கொலை என்பது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செய்யும் அதிகபட்ச வன்முறையாகும். ஒருவர் அதிகபட்ச கோபம் அல்லது விரக்தியால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முட்டாள்தனமே தற்கொலையாகும். தற்கொலை என்பது பெரும்பாலான மக்கள் விவாதிக்க தயங்கும் ஒரு தலைப்பாகும். உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சில நாடுகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகவும், சில நாடுகளில் குறைவாகவும் உள்ளது. தற்கொலைக்கான காரணங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய ஆய்வறிக்கையின் படி உலகில் அதிகம் தற்கொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன மற்றும் இங்கு தற்கொலை நடக்க காரணம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தென் கொரியா
தென் கொரியாவில் 100,000 பேரில் 24 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் தென் கொரியா ஒட்டுமொத்த தற்கொலை விகிதத்தில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் அனைத்து ஆசிய நாடுகளிலும் இதுவே மிக உயர்ந்த விகிதமாகும். 2020 ஆம் ஆண்டில், தென் கொரியா 51 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகைக்கு சிகிச்சை வழங்க வெறும் 4,000 மனநல மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். தென் கொரியாவில் தற்கொலைகள் நடக்க இதுவும் ஒரு காரணமாகும். தற்போது இளைஞகர்களிடையேயும் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது.
லிதுவேனியா
லிதுவேனியாவில் 100,000 பேரில் 21 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த காலங்களை விட தற்போது தற்கொலை விகிதம் குறைந்து வந்தாலும், இந்த பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றம் மிகவும் மோசமாக இருந்தது.
ஹங்கேரி
ஹங்கேரியில் 100,000 பேரில் 16 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலையைக் கையாள்வதற்கான அதன் முயற்சிகளில் ஹங்கேரி பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் கடந்த இரண்டு தசாப்தங்களில் கடும் சரிவைக் கண்டுள்ளது. மிகவும் வசதியான நகர்ப்புறங்களை விட ஏழை மற்றும் கிராமப்புறங்களில் தற்கொலை அடிக்கடி நிகழ்கிறது.
ஸ்லோவேனியா
ஸ்லோவேனியாவில் 100,000 பேரில் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை விகிதத்தை குறைப்பதில் ஸ்லோவேனியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஸ்லோவேனியா ஒரு சிறிய நாடு, ஆனால் மிகவும் நவீன கலப்பு பொருளாதாரத்தையும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் கொண்டுள்ளது. ஆண்களை விட பெண்கள் இங்கு அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஜப்பான்
ஜப்பானில் 100,000 பேரில் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஜப்பானில், சமீபத்திய ஆண்டுகளில் தற்கொலை விகிதங்கள் சில ஏற்ற இறக்கங்களைக் கண்டன, இதற்கு COVID-19 தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 1990-க்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பிறகு இந்த எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்திருந்தாலும், COVID-க்கு பிறகு இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 20 முதல் 44 வயதுடைய ஜப்பானிய ஆண்களில், தற்கொலைதான் மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாகும்.
எஸ்டோனியா
எஸ்டோனியா ஒரு வடக்கு ஐரோப்பிய நாடாகும். இங்கு 100,000 பேரில் 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே சீரான பொருளாதார வளர்ச்சியையும், உயர் வாழ்க்கைத் தரத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், இங்கு தற்கொலை விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லாட்வியா
லாட்வியாவில் 100,000 பேருக்கு தற்கொலை விகிதம் 14.9 ஆக உள்ளது. ஒரு வடக்கு ஐரோப்பிய நாடாகும். இங்கு 100,000 பேரில் 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.லாட்வியா மற்றொரு வடக்கு ஐரோப்பிய நாடு, எஸ்டோனியாவைப் போலவே, இது பால்டிக் கடலில் அமைந்துள்ளது மற்றும் முன்னேறிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு சிறிய, அதிக வருமானம் கொண்ட நாடு. இங்கு தற்கொலை விகிதம் 100,000-க்கு 14.9 ஆக உள்ளது. இருப்பினும், குடிப்பழக்கம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் அதன் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது.
பெல்ஜியம்
பெல்ஜியமில் 100,000 பேருக்கு தற்கொலை விகிதம் 14.6 ஆக உள்ளது. வடமேற்கு ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பெல்ஜியம் மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். மிக அதிக தற்கொலை விகிதத்தைக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடாகவும் இது அறியப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் வகையில் அதிக வருமானம் மற்றும் நல்ல சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளை கொண்ட இந்த நாடுகளில் கூட ஒரு மோசமான பிரச்சனையாக தற்கொலை இருப்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
அமெரிக்கா
என்ன தான் பணக்கார நாடாக இருந்தாலும் அதிக தற்கொலை விகிதத்தை கொண்ட நாடாக நீண்ட காலமாக இந்த வரிசையில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் 100,000 பேருக்கு தற்கொலை விகிதம் 14.1 ஆக உள்ளது. கடத்த பத்து வருடங்களில் இந்த தற்கொலை பிரச்சனைகள் மோசமடைந்ததோடு "விரக்தியின் மரணங்கள்" எனவும் பெயர் பெறுகின்றன.
மேலும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைவது அதிகப்படியான அளவில் போதைப்பொருள் எடுத்து கொள்வது மற்றும் அதிக மதுபானத்தால் ஏற்படும் கல்லீரல் நோய் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீடுகளை கணக்கிடுகிறது. மேலும் மக்களின் மோசமான பொருளாதார நிலை மற்றும் சமூக வாய்ப்புகளும் இதற்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.
பின்லாந்து
பின்லாந்தில் 100,000 பேருக்கு தற்கொலை விகிதம் 12.9 ஆக உள்ளது. பின்லாந்து உலகின் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இருப்பினும், உலகில் அதிக தற்கொலை நடக்கும் நாடுகளில் இது பத்தாவது இடத்தில் உள்ளது.
இந்தியா
2022 ஆம் ஆண்டில் நாட்டில் 171,000 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2021 ஐ விட 4.2% அதிகரிப்பையும் 2018 உடன் ஒப்பிடும்போது 27% அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக 2024-2025-ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். 2022 ஆம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு தற்கொலை விகிதம் 12.4 ஆக அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications
