For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா? இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...!

வாழ்க்கையின் சோகமான காலத்தில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய சில விஷயங்கள் உள்ளது. இவற்றை நினைவுகூர்ந்தாலே போதும் நாம் சோகத்தில் இருந்து வெளியேறிவிடலாம்.

|

இந்த மனித வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரமாகும். பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கும்போது மனிதர்களாய் நாம் பிறந்ததற்கு பின்னால் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். இந்த மனித வாழ்வை பிற உயிர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டியது நமது அடிப்படை கடமையாகும். பொதுவாக மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை சோகத்தில் வீணடிக்கிறார்கள்.

Things To Remember When You are Sad

வாழ்க்கை இன்பமும், துன்பம், வெற்றி, தோல்வி என அனைத்தும் கலந்ததாக இருக்கும். அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். பலரும் வாழ்க்கையின் சோகமான காலங்களில் முடங்கி போய்விடுகின்றனர், சிலர் அறிவீனத்தின் உச்சகட்டமாக சோகத்தில் தங்களின் விலைமதிப்பற்ற வாழ்க்கையையே முடிகொள்கிறார்கள். வாழ்க்கையின் சோகமான காலத்தில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய சில விஷயங்கள் உள்ளது. இவற்றை நினைவுகூர்ந்தாலே போதும் நாம் சோகத்தில் இருந்து வெளியேறிவிடலாம். வாழ்க்கையின் சோகமான காலக்கட்டத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும்

வலி முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும்

நாம் அனைவருமே நேர்மறையான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவதால் வலியை நாம் யாரும் விரும்புவதில்லை. எதுவாக இருப்பினும், வாழக்கையில் சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நம்மை சுற்றியுள்ள உறவுகளின் தவறான புரிதல் காரணமாக நாம் வலியை அனுபவிக்க நேரிடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த வலிகளை நாம் நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கையில் எல்லாம் தற்காலிகமானது

வாழ்க்கையில் எல்லாம் தற்காலிகமானது

நம் வாழ்க்கையில் வரும் அனைத்துமே நம்மை விட்டு சென்றுதான் ஆக வேண்டும். இந்த வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை, வானிலை நிரந்தரமாக இல்லை, நாளின் நேரம் நிரந்தரமாக இல்லை, சோகமான சூழ்நிலையும் இதே போன்றதுதான், எதுவும் கடந்து போகும். இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது கொஞ்சம் பொறுமைதான் மற்றும் உங்களைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நன்றாக சிந்திக்க முயற்சிப்பது உங்கள் சூழ்நிலையை விட்டு வெளியேற வர உதவும்.

கவலைப்படுவதும் புகார் செய்வதும் எதையும் மாற்றாது

கவலைப்படுவதும் புகார் செய்வதும் எதையும் மாற்றாது

காலங்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே இருப்பதால் நேரமும், ஆற்றலும் மதிப்புமிக்க வளங்களாக மாறிவிட்டது. கவலைப்படுவதும், புகார் செய்வதும் எதையும் மாற்றாது, ஆனால் இது மற்றவர்களுக்கான பாடமாக மாற வாய்ப்புள்ளது. இதற்குப் பதிலாக அமைதியாக உட்கார்ந்து நிலைமையைக் கடந்து செல்வதற்கான செயல் திட்டத்தைப் பற்றி சிந்திப்பது நல்லது.

MOST READ: கருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்?

ஒவ்வொரு சிறிய போராட்டமும் அடுத்த நிலைக்கான படிதான்

ஒவ்வொரு சிறிய போராட்டமும் அடுத்த நிலைக்கான படிதான்

நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு போராட்டம் நிறைந்த சூழ்நிலையையும் பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று இது உங்களை அழ வைப்பதாகத் தோன்றலாம் அல்லது பறக்க வைப்பதாகத் தோன்றலாம். நாம் ஒன்றும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உலகத்தில் வாழவில்லை எனவே நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும் .ஒவ்வொரு போராட்டத்திலும் நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் வாழ்க்கையில் சிறந்த உயரங்களை அடைய முடியும்.

பழிசுமத்துவது உங்களின் பிரச்சினை அல்ல

பழிசுமத்துவது உங்களின் பிரச்சினை அல்ல

நீங்கள் எப்போதாவது ஒரு பழிசுமக்கும் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறீர்களா? நீங்கள் சில நேரங்களில் உங்கள் சொந்த வழியில் சொல்வது சரிதான், ஆனால் நீங்கள் இன்னும் மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறீர்கள். இது மக்கள் ஒருவருக்கொருவர் விளையாடும் பொதுவான விளையாட்டு ஆகும். அமைதியாக இருப்பது அல்லது இதற்கு பதில் அளிப்பது என்று உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளது. நம்முடைய பலமும், நல்ல குணங்களும் நமக்கு நன்றாக தெரிந்திருந்தால் நாம் இதற்கு பதில் கூற வேண்டுமென்று அவசியமில்லை. எதிர்மறை கருத்துக்களுக்கு பதில் கூறுவதே மடத்தனம்.

என்னவாக இருக்க வேண்டும் என்பது இறுதியில் இருக்கும்

என்னவாக இருக்க வேண்டும் என்பது இறுதியில் இருக்கும்

வாழ்க்கை என்பது உங்கள் உணர்வுகளை நம்புவது மற்றும் வாய்ப்புகளைப் பெறுவது. மகிழ்ச்சியை இழந்து கண்டுபிடிப்பது, நினைவுகளைப் பாராட்டுவது, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் வாழக்கை எதைக் குறிக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்து கொள்வது எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். உங்கள் கர்மாவில் நீங்கள் சரியாக இருந்திருந்தால், உங்களிடமிருந்து எதையும் பறிக்க முடியாது. விலகி நிற்கும் பார்வையாளராக இருப்பது மற்றும் உங்கள் தற்போதைய நிலைமையைப் பாராட்டுவது முன்னோக்கிய சிறந்த வழியாகும்.

MOST READ: நீங்கள் கிச்சனில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...!

நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் சிரிப்பது

நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் சிரிப்பது

புன்னகை என்பது எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய ஒன்று என்று நம் கேள்விப்பட்டிருப்போம். தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தால் ஒருநாள் வாழ்க்கை உங்களை தொந்தரவு செய்வதை நிறுத்திவிடும். புன்னகைக்க எதுவும் செலவாகாது, புன்னகையும் ஒரு நேர்மறையான அணுகுமுறையாகும். இது வாழ்க்கையில் நிலவும் சோகத்தின் இருண்ட மேகங்களின் நினைவுகளைத் துடைக்கக்கூடிய வானவில் போன்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Remember When You are Sad

Here is the important things to remember when you are sad.
Story first published: Wednesday, November 6, 2019, 15:36 [IST]
Desktop Bottom Promotion