For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிஜ வாழ்க்கையிலும் ஜேம்ஸ் பாண்டாக வாழ்ந்த இந்தியாவின் சிறந்த உளவாளி ' ப்ளாக் டைகர் ' யார் தெரியுமா?

|

உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தனது நாட்டை பாதுகாக்க மற்ற நாடுகளுக்குள் ஊடுருவி தனது நாட்டிற்கு எதிராக செய்யப்படும் சதிகளை முறியடிக்கும் ஒரு அசகாய சூரன்தான் ஜேம்ஸ் பாண்ட். இது வெறும் திரைப்படங்களில் மட்டும்தான் சாத்தியம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இது போன்ற பல நிஜ வாழ்க்கையின் ஜேம்ஸ் பாண்ட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்களுக்கென ஒரு உளவு அமைப்பு இருக்கும், அதில் இருக்கும் அனைவருமே நாட்டை பாதுகாக்கும் ஹீரோக்கள்தான். ஆனால் அதில் ஒருசிலர் மட்டுமே ஒரு வரலாற்றுச் சின்னமாக மாறுவார்கள். அவர்களை பின்பற்றி அடுத்த தலைமுறை உளவாளிகள் உருவாகுவார்கள். உளவாளிகளின் வாழ்க்கை முறையே அவர்களைப் பற்றிய எந்த அடையாளங்களும் எங்கும் இருக்காது, அவர்கள் அயல்நாடுகளில் பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கம் எந்த உதவியும் செய்யாது. இந்தியாவின் நிஜ ஹீரோவான ஒரு உளவாளியைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ரவீந்திர கௌசிக்

ரவீந்திர கௌசிக்

இந்தியாவின் தலைசிறந்த உளவாளியாக விளங்கியவர் ரவீந்திர கௌசிக். இந்தியாவின் உளவு அமைப்பான RAW-வில் ஏஜென்ட்டாக பணிபுரிந்த இவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இறக்கும் வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவில் பல ஹீரோக்கள் உளவாளிகளாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இவரின் வரலாறு விரைவில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

பிறப்பு

பிறப்பு

ரவீந்திர கௌசிக் 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் பிறந்தார். RAW-வில் இணைந்து இவர் முதன் முதலாக இரகசிய பணிக்குச் சென்றபோது இவரின் வயது வெறும் 23 தான். இந்தியாவின் மிகசிறந்த உளவாளியான இவர் பாகிஸ்தான் இராணுவத்திற்குள் ஊடுருவி அங்கு மிக உயர்ந்த பதவிகளை அடைந்தார்.

RAW வேலை

RAW வேலை

ரவீந்திராவிற்கு தியேட்டர் நாடகங்கள் மீது அலாதியான காதல் இருந்தது, அவர் அங்கு இளைஞராக நடித்ததை பார்த்துதான் RAW அவரை தேர்வு செய்தது. RAW - வில் சேர்ந்த பிறகு பயிற்சியின் போது அவர் உருது கற்றுக்கொண்டார். மேலும் குரான் மற்றும் பிற மத நூல்களை கற்றுக்கொண்டார் மேலும் பாகிஸ்தானின் நிலப்பரப்புகளையும் துல்லியமாக அறிந்து கொண்டார்.

MOST READ: 2020- ல் இந்த 5 ராசிக்காரங்கள காதல் தேடி வரப்போகுதாம்... சரியா யூஸ் பண்ணிக்கோங்க...!

புதிய அடையாளம்

புதிய அடையாளம்

ரவீந்திர கௌசிக் நபி அகமது ஷாகிர் என்ற புதிய மாற்றுப் பெயருடன் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். அவரைப் பற்றி இந்தியாவில் இருந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டது. பின்னர் அவர் கராச்சி பல்கலைக்கழகத்தில் தனது LLB பட்டப்படிப்பை முடித்து, பாகிஸ்தான் இராணுவத்தில் ஆபீஸராக சேர்ந்தார், விரைவிலேயே பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் பதவியையும் பெற்றார். இவர் அமானத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையையும் பெற்றுக்கொண்டார்.

ப்ளாக் டைகர்

ப்ளாக் டைகர்

1979 முதல் 1983 வரை அவர் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் வீரச்செயலுக்காக இவருக்கு இந்தியாவின் இரும்பு பெண்மணியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ப்ளாக் டைகர் என்ற பட்டத்தை வழங்கினார்.

சிக்கிக்கொண்டது

சிக்கிக்கொண்டது

1983 ஆம் ஆண்டில் அவரைச் சந்திக்க இனியாத் மசிஹா என்ற RAW ஏஜென்டை அனுப்பினர். ஆனால் அவர் பாகிஸ்தான் படையால் சிறைபிடிக்கப்பட்டார். அவரை சித்திரவதை செய்து விசாரித்த போது அவர் ரவீந்திர கௌசிக்கின் அடையாளத்தை கூறிவிட்டார். 1985-ல் ரவீந்திராவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது, அதற்கு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

சிறைவாசம்

சிறைவாசம்

இவர் 18 ஆண்டுகளை பாகிஸ்தான் சிறையில் கழித்தார். இவர் முதல் இரண்டு ஆண்டுகளாக, சியால்கோட்டில் உள்ள ஒரு விசாரணை மையத்தில் சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் அவரது வாழ்நாள் முழுவதும் மியான்வாலி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

MOST READ: இரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா?

 ப்ளாக் டைகரின் முடிவு

ப்ளாக் டைகரின் முடிவு

இவர் சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்திற்கு கடிதங்கள் எழுதினார். அதில் தனது மோசமான ஆரோக்கியம் பற்றியும், பாகிஸ்தான் சிறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். நவம்பர் 2001 இல், 'தி பிளாக் டைகர்' நுரையீரல் காசநோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு நியூ மத்திய முல்தான் சிறையில் இறந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ravindra Kaushik: The Greatest Spy In Indian History

Here is the real story of Ravindra Kaushik 'Black Tiger', the greatest spy in Indian history.
Story first published: Thursday, December 26, 2019, 12:04 [IST]