Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
உங்க பிறந்த தேதி 9,18 மற்றும் 27 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
நியூமராலஜியில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அர்த்தம், ஆற்றலும் உள்ளது. அந்த வகையில் எண் 9 சக்தியைக் குறிக்கிறது. அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணின் கீழ் வருகிறார்கள்.
நியூமராலஜியில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அர்த்தம், ஆற்றலும் உள்ளது. அந்த வகையில் எண் 9 சக்தியைக் குறிக்கிறது. அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணின் கீழ் வருகிறார்கள். இந்த எண்ணின் கீழ் பிறந்தவர்கள் ஆக்கபூர்வமானவர்களாகவும், அழிவுகரமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த எண் செவ்வாயால் ஆளப்படுகிறது, செவ்வாய் மூர்க்கத்தனத்தையும், போரையும் குறிக்கிறது.

எண் 9-ல் பிறந்தவர்கள் ஆளக்கூடியவர்களாகவும், சமமான மற்றும் மகத்தான ஆற்றலுடன் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் மற்றும் சுதந்திரமாக வேலை செய்ய விரும்புபவர்கள், அதனால் அவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இந்த பதிவில் எண் 9-ல் பிறந்தவர்களின் ஆளுமை எபப்டிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

பொதுவான குணங்கள்
எண் 9 கீழ் பிறந்தவர்களை அடையாளம் காண உதவும் அவர்களின் ஒரே பண்பு அவர்களின் போர் குணம்தான். வாழ்க்கையில் எதை சாதிக்க நினைத்தாலும் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற வியத்தகு மன உறுதி அவர்களிடம் இருக்கும். அவர்கள்அனைத்திலும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க போராடுகிறார்கள், ஒருபோதும் சண்டையை தவற விட மாட்டார்கள், அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் அல்ல. அவர்கள் சிறந்த இராஜதந்திரிகளாகவும் இருக்க முடியும், மேலும் தங்கள் சொந்த நலனுக்காக எப்போதும் உரிமையை சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்
எண் 9-; பிறந்தவர்களுக்கு 5, 6 மற்றும் 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும், எனவே இந்த மூன்று எண்கள் கூட்டுத்தொகையாக வரும் தேதிகளில் சிறப்பாக செய்லபட முடியும். இவற்றில் 27 ஆம் தேதி மிகவும் சாதகமாக இருக்கும். கூடுதலாக, 1, 10, 21 மற்றும் 30 ஆம் தேதிகளும் நன்றாக இருக்கும். இந்த தேதிகள் அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் கொண்டு வரலாம். இந்த நாட்களில் அவர்களின் முக்கியமான நடவடிக்கைகளை வைத்துக் கொள்வது நல்லது. எண் 9-ல் பிறந்தவர்களுக்கு 2 கூட்டுத்தொகையாக வரும் தேதிகள் சாதகமாக இருக்காது, மேலும் 19 ஆம் தேதியும் பட்டியலில் அடங்கும். இந்த நாட்களில் எண்ணங்களில் தெளிவு இல்லாமல் இருக்கலாம், மற்றும் உங்களின் முடிவுகள் தவறாக செல்லவும் வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்
சிவப்பு அவர்களுக்கு சிறந்த நிறமாக இருக்கும். அடர் சிவப்பு மற்றும் நீல நிறமும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அவர்கள் இந்த வண்ண ஆடைகளை அணியலாம் அல்லது நேர்மறை விளைவுகளுக்காக குறைந்தபட்சம் ஏதாவது ஒரு சிவப்பு நிற பொருளை உடன் வைத்திருக்கலாம். வெளிர் நிறங்கள் அவர்களுக்கு பொருந்தாது, குறிப்பாக வெள்ளை மற்றும் வெளிர் பச்சை நிறம் அவர்களுக்கு மோசமான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

தொழில் வாழ்க்கை
எண் 9-ல் பிறந்தவர்களுக்கு பொறியியல் தொடர்பான தொழில்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அவர்கள் சிவில் இன்ஜினியரிங் வேலைகளை மேற்கொள்ளலாம் அல்லது பொறியியல் பொருட்கள் மற்றும் இரும்பு மற்றும் எஃகு இயந்திரங்கள் உற்பத்தி, கட்டுமானம் அல்லது விற்பனை ஆகியவற்றில் வணிகம் செய்யலாம். அவர்கள் கடுமையான போராளிகள் மற்றும் சவால்களை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள், அரசியலும் அவர்களுக்கு பொருத்தமான துறையாக இருக்கும். 3, 5 மற்றும் 6 ஆகிய எண்களின் கீழ் பிறந்தவர்களை பார்ட்னராக வைத்திருப்பதன் மூலம் அவர்கள் பயனடையலாம், அதே நேரத்தில் 3, 5, 6, 8 மற்றும் 9 எண்களின் கீழ் பிறந்தவர்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இருப்பினும், எண் 2 இல் பிறந்தவர்கள் அவர்களுக்கு மோசமான எதிரிகளாக இருப்பார்கள்.

திருமண வாழ்க்கை
எண் 9 இன் கீழ் பிறந்தவர்களுக்கு அதே எண்ணில் பிறந்தவர்களுடனான திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். அவர்களுடனான திருமணம் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். எண்கள் 3 மற்றும் 6 க்கு கீழ் பிறந்தவர்களுடனான அவர்களின் திருமணமும் பலனளிப்பதாக இருக்கும். இருப்பினும் எண்கள் 1, 2 மற்றும் 8-ன் கீழ் பிறந்தவர்களுடனான திருமணம் அவர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்காது, மேலும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications