Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
இந்தியாவையே ஆண்ட அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் தெரியுமா?
இந்திய வரலாற்றுக்கான அசோகரின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது ஆகும். அசோகரின் வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணம் அவர் புத்த மதத்திற்கு மாறியதுதான்.
இந்தியாவின் மிகப்பெரிய ராஜ்ஜியங்களை ஆண்ட அரசர்களில் மிகவும் முக்கியமானவர் மாமன்னர் அசோகர் ஆவார். அவரின் பெயரை தவிர்த்து இந்தியாவின் வரலாற்றை எழுதுவது முடியாத ஒன்று. ஏனெனில் இந்திய வரலாற்றுக்கான அவரின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது ஆகும். அசோகரின் வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணம் அவர் புத்த மதத்திற்கு மாறியதுதான்.

மௌரிய வம்சத்தில் பிறந்த அசோகர் இந்தியாவின் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டார், சிலப்பகுதிகள் தவிர்த்து பல ஆண்டுகள் இவரின் கீழ்தான் இந்தியாவின் பெரும்பகுதி இருந்தது. இவரின் ஆட்சிக்காலத்தில் மௌரிய சாம்ராஜ்ஜியம் இந்துகுஷ் மலைத்தொடர்களில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் வரை பரவியது. அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வலிமைமிக்க பேரரசர்
இந்திய துணைக்கண்டம் முழுவதையும் ஆட்சி புரிந்த அசோகரால் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் நுழைய இயலவில்லை. அசோகர் அவரின் வீரம் மற்றும் நிர்வாக திறமையால் பெரும்புகழ் பெற்றார். ஒரு ஒருங்கிணைப்பாளராக மாபெரும் அரசை தன் கீழ் கொண்டுவர தேவையான அனைத்து திறமைகளும் உடையவராக அவர் இருந்தார்.

கலிங்க ராஜ்ஜியம்
அசோகர் தன் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு போர்களில் பங்கு கொண்டார், போரிடுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. ஒடிசா மற்றும் வட கரையோர ஆந்திரப் பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்திருந்த ஒரு ராஜ்ஜியமாக கலிங்கம் இருந்தது.

கலிங்க யுத்தம்
கலிங்க ராஜ்ஜியம் அதன் ஜனநாயகத்தாலும், இறையாண்மையாலும் மிகச்சிறந்த மாநிலமாக விளங்கியது. எட்டு வருட காத்திருப்பிற்கு பிறகு அசோகர் கலிங்கத்தின் மீது போர் அறிவித்தார். வரலாற்று குறிப்புகளின் படி இந்த கொடூரமான போரில் கிட்டத்தட்ட 1,00,00 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும் தன் மண்ணை காக்க முன்வந்த குடிமக்களும் கொல்லப்பட்டார்கள். மொத்தத்தில் இதை போரில் 1,50,000 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.

போரின் பாதிப்பு
அசோகர் அவர் உருவாக்கிய பாறை கல்வெட்டுகளில் கூறியுள்ளபடி போர் முடிந்த மறுநாள் அசோகர் அந்த நகரத்தின் வீதிகளில் நடந்து சென்றார். அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் சிதைக்கப்பட்ட சடலங்களும், எரிக்கப்பட்ட வீடுகளும், அனாதை ஆக்கப்பட்ட மக்களும்தான். அவர் கண்ட காட்சி கல் இதயத்தையும் கரைக்கும் என்று கல்வெட்டு கூறுகிறது.

போரின் தாக்கம்
போருக்கான நியதிகள் அனைத்தும் தகர்க்கப்பட்டிருந்ததது, அவரின் அதிகார வெறி மறைந்து தனது மக்களை பாதுகாக்கும் அமைதியை விரும்பும் ஒருவராக அவரை அந்த போர் மாற்றியது. இந்த தருணத்தில் அவர் கேள்விப்பட்ட புத்தரின் போதனைகள் அவரின் மனதை ஊக்கப்படுத்தியது.

மனம் மாறிய மன்னர்
அசோகர் புத்த மதம் பற்றிய தன் ஞானத்தை ஆழமாக்க எண்ணினார். அதனால புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களுக்கு 256 நாட்கள் புனித யாத்திரை மேற்கொண்டார். அதனபின்னர் அவர் சக்கரவர்த்தி என்னும் ஆடம்பரத்தை துறந்து தனது மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவராக மாறினார்.

நினைவு சின்னங்கள்
புத்த மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட அசோகர் அதற்கு பிறகு மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தினார். மேலும் அவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல இடங்களில் புத்தரின் நினைவுஸ் சின்னங்களை கட்ட தொடங்கினார்.

புத்த மதத்தை பரப்புதல்
கான்ஸ்டடைன்க்கு கீழ் கிறித்துவம் எப்படி வளர்ச்சி பெற்றதோ அதே போல அசோகரின் ராஜ்ஜியத்திற்கு கீழ் புத்த மதம் பெரும் வளர்ச்சியை அடைந்தது. தனது ராஜ்ஜியம் மட்டுமின்றி பக்கத்து ராஜ்ஜியங்களிலும் புத்த மதத்தை அசோகர் பரப்பினார்.

அசோகரின் குடும்பம்
புத்த மதம் மீதான அசோகரின் ஆர்வம் அவரின் மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ராவையும் ஈர்த்தது. அவர்கள் இருவரும் இலங்கையில் புத்த மதத்தை பரப்பினர். புத்த மதம் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்க காரணம் அசோகர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகள்தான்.



Click it and Unblock the Notifications