Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
கணவரின் விந்துவை விழுங்கிய பெண்ணுக்கு வாயில் வந்த கொடுமைய பாருங்க... எதுக்கு இந்த வேலை?
தன் கணவரின் விந்துவை விழுங்கியதால் நாக்கில் வந்த அழற்சியையும் கொடூரத்தையும் பாருங்கள். அதுபற்றிய தொகுப்பு தான் இது. படித்து அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்ற நிலையை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆண் பெண் தாம்பத்ய உறவு என்பது ஒரு சந்தோஷமான விஷயமாக இருந்தாலும் அதே சமயத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய விஷயமும் கூட. ஏனெனில் சில நேரங்களில் உடலுறவு வழியாக நிறைய பாலியல் நோய்கள் நம்மை தாக்கவும் வாய்ப்புள்ளது.

அதனால் தான் உடலுறுவின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். இங்கே ஒரு பெண் தன்னுடைய துணையின் விந்தணுவை குடித்ததால் வந்த விபரீதத்தை பாருங்கள். பெரும் அலர்ஜி ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது. சில சமயங்களில் நாம் செய்யும் சின்னஞ் சிறிய தவறு பெரும் விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

துணையுடன் உறவு
இந்த பெண்ணுக்கு வயது 31 இருக்கும். இவர் ஸ்பெயினில் வசித்து வருகிறார். தன் துணையுடன் உடலுறுவில் ஈடுபட்ட பிறகு அவரது விந்தணு திரவத்தை குடித்துள்ளார். அப்பொழுது தான் விபரீதம் ஆரம்பித்து உள்ளது. அதற்கு அப்புறம் அவருக்கு ஒரே வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூச்சுத் திணறல் மற்றும் சரும அழற்சி ஏற்பட்டுள்ளது.

அழற்சி பரவல்
அப்பொழுது அவரை பரிசோதித்த டாக்டர்கள் பென்சிலின் அழற்சி இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் அவரிடம் கூறிய போது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் துணையின் விந்து திரவத்தை குடித்த பிறகு தான் இப்படி ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்து உள்ளார்.

ஆன்டி பயாடிக் மருந்து எடுத்ததால்
மருத்துவர்கள் அந்த ஆணிடம் விசாரித்த போது அவருடைய துணை கொஞ்சம் நேரத்துக்கு முன் ஆன்டிபாயாடிக் பென்சிலின் ஊசி எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. இந்த மருந்து விந்தணு திரவத்தின் வழியாக அந்த பெண்ணின் வாய்க்குள் சென்றதால் இந்த அலற்சி ஏற்பட்டுள்ளது என்பது அப்போது புரிய வந்துள்ளது. இது அவருக்கு அனலிலைடிக் அதிர்ச்சியை தந்துள்ளது என்றே கூறலாம்.

விபரீதமான ஒன்னு
இதுவரை இந்த மாதிரி நடந்ததில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தான் முதல் தடவை என்றும் கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது உடலுறுவின் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சில செயல்கள் நம் உயிருக்கே உலை வைக்க நேரிடலாம். எனவே இந்த மாதிரியான ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்துக் கொண்ட சமயங்களில் வாய்வழி உடலுறவை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான உடலுறவே உயிரை காக்கும்.



Click it and Unblock the Notifications