Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
பணக்காரன் ஆவதற்காக தன்னுடைய விந்துப்பையை விற்கும் இளைஞன்... இப்படியும் நாட்ல நடக்குமா?
ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான். பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். காரணம் இதோ
நிறைய பேர்கள் தங்கள் ஏழ்மையை போக்க உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த பையன் செல்வந்தராக ஆக என்ன செய்து இருக்கிறான் என்று பார்த்தீங்களா? ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான்.

பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. படிச்சுப் பாருங்க. நாட்டுல இப்படியும் ஆட்கள் இருக்கிறாங்க.

விதைப்பை விற்பனை
எல்லாரும் பிறக்கும் போதே பணக்காரராக இருப்பதில்லை. சிவாஜி படத்தில நம்ம ரஜினி சார் கூட இத அழகாக சொல்லி இருப்பாரு " பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான், ஏழை இன்னும் ஏழையாத் தான் இருக்கிறோம்னு." நிறைய பேர்கள் தங்கள் ஏழ்மையை போக்க உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பையன் செல்வந்தராக ஆக என்ன செய்து இருக்கிறான் என்று பார்த்தீங்களா? ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான். பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். காரணம் இதோ

யார் அவர்?
ஹார்ரியல் கௌடி என்று இந்த 27 வயது இளைஞன் கென்யாவிலுள்ள மிகோரி கவுண்டியில் உள்ள உறிரி பகுதியில் வாழ்ந்து வருகிறான். இவனுடைய ஒரு செயல் இப்பொழுது உலகத்தையே தன் பக்கம் திருப்பி உள்ளது. ஓரே நாளில் செல்வந்தர் ஆக ஆசைப்பட்டு உள்ளான் . தன்னுடைய ஏழ்மை நிலையை போக்க விரும்பிய அவன் ஒரு வித்தியாசமான வழியை கையில் எடுத்து உள்ளான்.

விந்தணுபை விற்பனை
ஏற்கனவே கெளடி 1.5 மில்லியன் தொகைக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் செல்வந்தராக வேண்டும் என்ற ஆசையில் இந்த முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

நம்பிக்கை
நிறைய பேருக்கு விதைப்பையை நீக்கிவிட்டால் உயிர் புாய்விடும் என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரே ஒரு விதைப்பை ஆரோக்கியமாக இருந்தாலே எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ முடியும். ஒரே ஒரு விந்தணுபையை கொண்டு கூட ஒரு ஆணால் வாழ முடியும். எனவே இதை தேவைப்படும் ஒரு நபருக்கு நான் பணத்திற்கு விற்க முற்படுகிறேன் என்கிறார் அவர்.

ஒரு சிறுநீரகம்
எப்படி மனிதருக்கு ஒரு சிறுநீரகம் இருந்தால் போதுமோ அதே மாதிரி இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஒரு சிறுநீரகத்தை கொடுத்த பிறகும் கூட உங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும். அது போல ஒரு விந்தணுபையை இழப்பதும் உங்களுடைய இயல்பான வாழ்க்கையை பாதிக்காது என்கிறார் அவர் .

மருத்துவர்களின் கருத்து
கெளதி ஒரு விந்தணுபையை கொடுக்க முற்பட்டாலும் மருத்துவர்கள் இதைச் செய்ய ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் பணம் சம்பாதிக்கணும், பணக்காரன் ஆகணும்னு நினைச்சாலும், ஒரு விந்துப்பை வைத்து உயிர் வாழ முடியும் என்றாலும் கூட, பணக்காரன் ஆவதற்காக இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்து தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.



Click it and Unblock the Notifications
