Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
அதிகாரிகள் முன் நிர்வாணப்படுத்தி டார்ச்சர். தற்கொலை செய்துக் கொண்ட பெண் சிறை கைதி!
அதிகாரிகள் முன் நிர்வாணப்படுத்தி டார்ச்சர். தற்கொலை செய்துக் கொண்ட பெண் சிறை கைதி!
சிறைச் சாலைகளில் எண்ணிலடங்கா அக்கிரமிங்கள், மனித தன்மையற்ற செயல்கள் நடந்து வருகின்றன. இது நாடுகள் பேதமின்றி உலகளவில் பரவலாக காணப்படுகிறது. ஆண்கள் சிறைகளை கட்டிலும், பெண்கள் சிறைகளில் நடக்கும் வன்கொடுமைகள் மிகவும் அபாயமானது. இதுக்குறித்து பெண் சிறை கைதிகள் பல வாக்கு மூலங்கள் மற்றும் புகார்களை அளித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் இயக்கம் என அழைக்கப்படும் MeToo மூவ்மெண்ட் காட்டுத் தீப் போல உலகின் பல நாடுகளில் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பெண் சிறை சாலையில் நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்யப்பட்டு காரணத்தால் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேட்டி ஆலன்!
கேட்டி ஆலன் (21) 15 வயதுமிக்க பள்ளி மாணவன் மீது குடி மயக்கத்தில் கார் ஓட்டி வந்து மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றவர். இவருக்கு நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை வழங்கியது.
இந்த தீர்ப்பின் போதே, ஆலனின் பெற்றோர், அவர் பல்கலைகழகத்தில் படித்து வருவதால், காவலர்கள் கண்காணிப்பில் வேண்டுமானால் இருக்கட்டும், சிறை தண்டனை வேண்டாம் என்று கோரினர்.

டார்ச்சர்!
ஆலனின் அம்மா லிண்டா (51) டெய்லி ரெக்கார்ட் என்ற செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தன் மகளை ஸ்ட்ரிப் சர்ச் என்ற பெயரில் பலமுறை நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.
நான் கடைசியாக சிறைசாலை சென்று அவளை பார்த்து வந்த போது, கேட்டி ஆலன் 80 சதவித கூந்தலை இழந்திருந்தாள். அதற்கு காரணம் அவளுக்கு ஏற்பட்ட மனவுளைச்சல். என்று தெரிவித்திருந்தார்.

அமைதியான பெண்!
ஆலன் எப்போதுமே அமைதியான பெண். அவள் யார் மீதும் எந்தவித புகாரும் அளிக்க மாட்டாள். எதுவாக இருந்தாலும் அவளே பார்த்துக் கொள்ளும் மனோபாவம் கொண்டவள். இந்த குணாதிசயத்தின் காரணமாக தான் கேட்டி ஆலனை டார்கெட் செய்து சிறை அதிகாரிகள் மற்றும் பிற சிறை கைதிகள் அவளை டார்ச்சல் செய்திருக்க கூடும் என்று மேலும் தெரிவித்திருந்தார்.

அதிகாரிகள் முன்னிலையில்!
புதியதாக பணியில் சேரும் சிறை அதிகாரிக்கு எடுத்துக்காட்டாக எப்படி சோதனை செய்ய வேண்டும் என்று காண்பிக்க ஆலனை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால், ஸ்ட்ரிப் சர்ச் பயிற்சி அளிக்கும் போதெல்லாம் ஆலனை டார்கெட் செய்து பல அதிகாரிகள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.
இதனால் ஆலன் மிகவும் மனக்கவலை அடைந்திருக்கிறார். சிலசமயம் ஆலனை நிர்வானப்படுத்திவிட்டு அதிகாரிகள் சாதரணமாக தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம். இதெல்லாம் ஆலனை மிகவும் கவலையடைய செய்துள்ளது.

தண்டனை!
கடந்த பிப்ரவரி மாதம், மைக்கேல் எனும் 15 வயது பள்ளி சிறுவன் மீது மோதியதால், விபத்துக்குள்ளாகி அவன் சுய நினைவு இழந்த நிலைக்கு சென்றான். இந்த வழக்கில் தான் கைதாகி கேட்டி ஆலன் 16 மாதம் சிறை தண்டனை பெற்றார். இந்த விபத்துக்கு தான் காரணமானதை நினைத்து மனம் வருந்தி, வழக்கு பதிவான போது, முழுமனதுடன் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை பெற்றிருக்கிறார் ஆலன்.

கோரிக்கை!
ஆனால், ஆலன் குடும்பத்தார் இளம் வயது பெண்ணை அடல்ட் சிறையில் அடைப்பது நியாயமற்றது. அவளை வேண்டுமானால் காவலர் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள் என்று முறையிட்டுள்ளனர். ஆனால், ஆலன் பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் கேட்டி ஆலனுக்கு 16 மாத சிறை தண்டனை விதித்தது.

அதிர்ச்சி!
ஆலன் சிறை தண்டனை முடித்து வந்துவிடுவாள் என்றே காத்திருந்தோம். ஆனால், ஒரு போதும் அவள் பிணமாக சிறையில் இருந்து வெளிவருவாள் என்று நாங்கள் கருதவில்லை. இரண்டு முறை சிறையில் இருந்த போது கடிதம் மூலம் தான் ஏற்படுத்திய விபத்திற்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார் ஆலன்.

முரண்!
ஆலனின் தாய் லிண்டா மற்றும் தந்தை ஸ்டீவார்ட், சிறை அதிகாரிகள் ஆலனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை. மேலும், அவள் இறந்த போது, stress-induced alopecia எனும் பாதிப்பால் தான் கேட்டி ஆலன் தற்கொலை செய்துக் கொண்டதாக சிறை மருத்துவர் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
ஆனால், ஆலனின் உடல் முழுக்க நிறைய காயங்கள், தழும்புகள் ஏற்பட்டிருந்தன. அதை சிறை மருத்துவர் திட்டமிட்டே மறைத்துவிட்டார். அவளை எண்ணிலடங்கா வகையில் நிர்வாணப்படுத்தி கொடுமைப் படுத்தி தற்கொலை செய்துக் கொள்ள சிறை அதிகாரிகள் தூண்டியுள்ளனர் என ஆலனின் பெற்றோர் புகாரை முன்வைத்துள்ளனர்.

கடைசி சந்திப்பு!
கடைசியாக லிண்டா தனது மகனுடன் ஆலனை சென்று சிறையில் பார்த்த போது, அவள் தூக்கமின்றி கவலையுடன் இருந்தது போல காட்சி அளித்தார். அவள் மிகவும் மன அழுத்தம் கொண்டிருந்தாள். அதன் காரணமாக அவளது 80% கூந்தல் உதிர்ந்து போயிருந்தது என லிண்டா கூறி இருக்கிறார். மேலும், தன்னை இங்கே ஒரு இறைச்சி போல பயன்படுத்துகிறார்கள் என ஆலன் கூறியதாக லிண்டா தெரிவித்திருக்கிறார்.

விசாரணை!
நிச்சயம் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று அப்போதே ஊர்ஜிதமாக நினைத்தேன். கேட்டி ஆலனுக்கு சிறையில் தகுந்த மனநல பரிசோதனை அல்லது நிபுணர்கள் கொண்டு பயிற்சி அளிக்கவில்லை.
ஸ்காட்லாந்து காவல் மையத்தின் செய்தி தொடர்பாளர், கேட்டி ஆலனின் மரணத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
விசாரணை எத்தனை முறை மேற்கொண்டாலும் இறந்த உயிரை மீட்டு திருப்பிக் கொண்டு வர இயலுமா?



Click it and Unblock the Notifications











