Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
முதலிரவன்று புது மனைவியை இரும்பு கம்பியால் பிறப்புறுப்பில் குத்தி கொன்ற கொடூர கணவன்!
முதலிரவன்று புது மனைவியை இரும்பு கம்பியால் பிறப்புறுப்பில் குத்தி கொன்ற கொடூர கணவன்!

கடந்த வாரத்தில் மட்டும் ஹரியானா மாநிலத்தில் நான்கு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ஒன்றில் பெண்ணின் பிறப்புறுப்பில் குச்சியை வைத்து குத்தியதாக புகார் கண்டறியப்பட்டது.
இந்த கொடூர செயலால் அந்த பெண்ணின் கல்லீரலில் கிழிசல் உண்டாகி மிகுந்த இரத்தபோக்கு உண்டானது. இதுப் போன்ற சம்பவங்களுக்கு யாரை குற்றம் கூறுவீர்கள். இன்னமும் இந்த தேசம், இந்த சமூகம் பெண்களின் ஆடையை தான் குறைகூற போகிறதா?
இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை. உலகின் பல நாடுகளில் நடந்துவருகிறது. என்ன ஒரே வித்தியாசம் அவர்கள் பெண்களின் ஆடையை குறைகூறுவது இல்லை.
இதோ! திருமணநாளில் ஒரு பாகிஸ்தான் பெண்ணுக்கு நடந்த ஒரு கொடூரமான சம்பவம்...

முதலிரவு!
நாம் அனைவரும் அறிவோம், முதலிரவு என்பது ஒரு உடலுறவு சம்பவம் என்று. இதை குடும்பத்தாரே சூழ்ந்து நின்று ஆரம்பித்து வைக்கிறார்கள். திருமணம் ஆன முதல் நாள் இரவே ஆணும், பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது விதியா என்ன? முதலில் அவர்கள் இருவருக்குள் ஒரு புரிதல் ஏற்பட வேண்டாமா?

காதல்!
காதல் திருமணமாக இருந்தாலாவது அவர்கள் இருவருக்கும் இடையே புரிதல் இருக்கும் என்று கூறலாம். ஒரே மாதத்தில் நிச்சயம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்களில் முதலிரவிலேயே எல்லாம் முடித்து வேண்டும் என்பது சம்பிரதாய நிகழ்வு போல தெரியவில்லை. இதுவும் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒருவித வன்கொடுமை தான்.

வற்புறுத்தி!
பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது,
திருமணமான அன்று முதலிரவில் கணவனும், மனைவியும் உள்ள செக்ஸ் குறித்த பேச்சு எழுந்துள்ளது. முதல் நாளிலேயே அந்த ஆண் தனது புது மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளான். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளான் அந்த கொடூரன்.

கொலை!
கற்பழித்தது மட்டுமின்றி, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை வைத்துக் குத்தியுள்ளான். மேலும், மேலும் செக்ஸ் வைத்துக் போல அந்த இரும்பு கம்பியை அந்த பெண்ணின் பிறப்புக்குள் நுழைத்துக் குத்தியிருக்கிறான். இதனால் அந்த பெண்ணின் உடல் உறுப்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

சைக்கோ!
கண்டிப்பாக அந்த ஆண் ஒரு சைக்கோவாக தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், தொடர்ந்து பல முறை இரும்பு கம்பியை வைத்து குத்தியிருக்க வேண்டும் என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார்.
மேலும், இந்த கொலை குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் முதலில் போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த சைக்கோ மணமகன் தங்கள் உறவினர் என்பதால், பிறகு புகாரை வாபஸ் பெற்றுவிட்டனர்.

சம்பிரதாயம்!
நமது நாட்டில் திருமணம் ஆன முதல் இரவில் உடலுறவு நடக்க வேண்டும் என்பது போல, அப்பகுதியில் திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சி துவங்கம் முன் மணப்பெண், மணமகள் உடலுறவில் இணைய வேண்டும் என்ற சம்பிரதாயம் இருக்கிறது என்றும். அப்படி ஒரு நிகழ்வின் போதுதான் இந்த கொடூர மரணம் நடந்துள்ளது என்றும். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பிரதாயங்களை முதலில் நீக்க வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடப்பது இது புதிதல்ல. அங்கிருக்கும் அரசியல் சட்டமே பெண்களுக்கு எதிராக தான் இருக்கிறது. சில சமயங்களில் போலீஸ் இதுகுறித்த புகார்களை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் செய்திகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷம் வைத்துக் கொலை!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் மற்றுமொரு சம்பவம் நடந்தது. அதில் தன்னை கேட்காமல் தனக்கு பிடிக்காத ஆணுக்கு கல்யாணம் செய்து வைத்த காரணத்தால் ஆஸியா எனும் 21 வயது பெண் மணமகன் குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு பாலில் விஷம் கலந்துக் கொடுத்து கொலை செய்துவிட்டார்.

கெஞ்சினேன்!
இதுகுறித்து ஆஸியா கூறியதாவது.,
எனது மதத்தில் ஒரு பெண்ணுக்கு தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துக் கொள்ளும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எனது பெற்றோர் இதை பறித்தனர். நான் எத்தனையோ முறை இப்போது திருமணம் வேண்டாம். இந்த ஆணை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியும். என்னை வற்புறுத்தி இந்த திருமணத்தை செய்து வைத்தனர். ஆகையால் தான் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டேன் என்று ஆஸியா கூறியுள்ளார்.

27!
உண்மையில் ஆஸியா பாலில் விஷம் கலந்து கொடுத்தது 27 பேருக்கு. ஆனால், இதில் மரணம் அடைந்தது 17 பேர் தான். மீத பத்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றனர்.
மேலும், இதுகுறித்து இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் செய்த தவறுக்கு உடனே தண்டனை வழங்கிய பாகிஸ்தான் அரசு, அதே தவறை அதைவிட கொடூரமாக செய்த ஆணுக்கும் தண்டனை வழங்குமா?

மிருகத்தையும் விடாத மனிதன்!
மனிதன் தனது இச்சை வெறியை பெண்கள் மீது மட்டும் தான் காண்பிக்கிறான் என்று கூறிவிட முடியாது. இதோ! இது ஓரிரு நாட்களுக்கு முன்னர் கென்யாவில் நடந்த சம்பவம்.
35 வயதுமிக்க ம்பீதி முன்யோ எனும் ஆண். தனது தாய் வளர்த்து வந்த இரண்டு ஆடுகளை வன்கொடுமை செய்துள்ளான். அதுவும் இரண்டு மணிநேரம்.
இந்த இரண்டு மணிநேர வன்கொடுமையின் காரணமாக அந்த இரு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டன.
இவனது தாயே போலீஸில் புகார் அளித்த காரணத்தால், அவனை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்!



Click it and Unblock the Notifications











