For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்திய அரசர்களின் விசித்திர செயல்கள்

|

இந்தியா மிகப்பெரிய பாரம்பரியமும், பண்பாடும், வீரமும் நிறைந்த நாடக பழங்காலம் முதலே விளங்குகிறது. இந்திய மன்னர்களின் வீரமும், போர் திறனும் இந்திய எல்லையையும் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலித்தது. குறிப்பாக நமது தமிழ் மன்னன் ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் இந்திய எல்லையையும் தாண்டி வெற்றிக்கொடி நாட்டி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.

weird facts about ancient Indian kings

அதேசமயம் இந்திய அரசர்களின் அந்தப்புரமும் உலகம் அறிந்த ஒன்றுதான். இரண்டு மனைவிகள் முதல் 200 மனைவிகள் வரை கூட இருந்த இந்திய அரசர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த பதிவில் இந்திய அரசர்களின் பெருமை, அதேசமயம் அவர்கள் செய்த முகம் சுழிக்க வைத்த செயல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதிதர்மன்

போதிதர்மன்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகமே கடவுளாக மதிக்கும் இந்த தமிழனை பற்றி நமக்கு தெரியாது. பல்லவ சாம்ராஜ்யத்தை சேர்ந்த இளவரசர் சீனா வரை சென்று அவர்களுக்கு வைத்தியமும், தற்காப்பு கலையும் கற்றுக்கொடுத்தார். இப்பொழுது அதுதான் உலக புகழ்பெற்ற கலையான குங்ஃபூ.

அசோகர்

அசோகர்

அமைதியை பேணிக்காத்த அரசராக இன்று அடையாளம் காணப்படும் அசோகரை பற்றி நமக்கு தெரிந்தது அவர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்பது மட்டும்தான். அதற்கு முன் அவருக்கு இருந்த பெயர் தேவநம்பியா மற்றும் சாண்டில் அசோகா ஆகும். அதற்கு பொருள் கொடூரமான அசோகர். இந்த பெயர் வர காரணம் அவர் தன்னுடைய 99 சகோதரர்களை கொன்றதுதான். ஒரே ஒரு சகோதரர் திஸ்ஸா என்பவரை மட்டும்தான் உயிருடன் விட்டார்.

மஹாராஜா கிஷன் சிங்

மஹாராஜா கிஷன் சிங்

ராஜஸ்தான் இந்தியாவின் மிகமுக்கியமான புகழ்பெற்ற மாநிலமாகும். அங்கு இருந்த பரத்பூரை ஆண்ட ஒரு இளவயது மன்னர்தான் மஹாராஜா கிஷன் சிங். இவர் இவருடைய வித்தியாசமான பாலியல் செயல்களுக்காக புகழ்பெற்றவர். இவருக்கு மொத்தம் 40 மனைவிகள் இருந்தனர். இவர் அந்தப்புரத்திற்கு வரும்போதெல்லாம் ராணிகள் அவரை நிர்வாணமாக வரவேற்க வேண்டும். அவர்களில் ஒரு ராணியை மட்டும் தூக்கிக்கொண்டு செல்வாராம்.

தாரா ஷிக்கோஹ்

தாரா ஷிக்கோஹ்

முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் மகனான தாரா ஷிக்கோஹ் இந்து மதத்தினால் ஈர்க்கப்பட்டார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களில் இருந்த 50 உபநிஷதங்களை தன் மொழியில் மொழிபெயர்த்தார். இது முஸ்லீம் அறிஞர்களுக்கு படிப்பதற்கு உதவியாய் இருந்தது. இது ஷிர் ஈ அக்பர் என்று அழைக்கப்படுகிறது.

MOST READ: நீங்கள் பயன்படுத்தும் இந்த பல்புகள்தான் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது தெரியுமா?

மிர் உஸ்மான் அலி கான்

மிர் உஸ்மான் அலி கான்

ஹைதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலி கான். 1940ல் இவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்று அறிவிக்கப்பட்டது. இவருடைய சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அதனை வைத்து அவர் செய்த செயல்தான் வியப்புக்குள்ளானது. அவரின் செல்வத்தை கொண்டு உலகின் மிகப்பெரிய விலை உயர்ந்த வைரத்தை வாங்கினார். இந்த விலைமதிப்பற்ற வைரத்தை அவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார்.

மஹாபத் கான் ரஸுல் கான்

மஹாபத் கான் ரஸுல் கான்

ஜூனாகரின் நவாபாக இருந்த மஹாபத் கான் ரஸுல் கான் நாய்களின் மீது அளவற்ற காதலுடன் இருந்தார். மற்ற அரசர்கள் பாலியலில் ஈடுபாடுடன் இருக்கும்போது இவரோ 800 நாய்களை வைத்து பராமரித்தார். ஒவ்வொரு நாயையும் தனி அக்கறையுடன் பாதுகாத்து வந்தார். அந்த நாய்களுக்கு இடையில் மக்களை அழைத்து கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார்.

பைரோஸ் ஷா துக்ளக்

பைரோஸ் ஷா துக்ளக்

பைரோஸ் ஷா துக்ளக் என்னும் அரசர் தான் கட்டிய ஒரு அழகிய கட்டிடமான குஜ்ரி மஹால் என்று வைத்தார். இந்த குஜ்ரி என்பது ஒரு பெண்ணின் பெயர் மேலும் அவர் ஒரு பால் விற்பவர் என்பதுதான் கூடுதல் சுவாரசியம். பைரோஸ் ஷா துக்ளக் ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது அங்கு குஜ்ரி என்னும் பெண்ணை கண்டு அவரின் அழகில் மயங்கினார். அதற்கு பிறகு அவர் அடிக்கடி அவரை பார்ப்பதற்காகவே வேட்டைக்கு செல்ல தொடங்கினார். ஆனால் அதிர்ச்சிதரும் விதமாக குஜ்ரி அந்நாட்டின் ராணியாக பைரோஸ் ஷா துக்ளக் அளித்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

மகாராஜா ராஜேந்தர் சிங்

மகாராஜா ராஜேந்தர் சிங்

பாட்டியாலா நகரை ஆண்டு வந்த மன்னர் மகாராஜா ராஜேந்தர் சிங். இவர் இறக்கும்போது அவரின் வயது 27. ஆனால் அப்பொழுது அவருக்கு இருந்த மனைவிகளின் எண்ணிக்கை 365. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவியுடன் அவர் இருப்பாராம்.

MOST READ: குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்!

மகாராஜா புபீந்தர் சிங்

மகாராஜா புபீந்தர் சிங்

இந்தியாவின் மிகமுக்கியமான சாதனைகளை படைத்த மன்னர் என்றால் அது மகாராஜா புபீந்தர் சிங் தான். 1892ல் இந்தியாவின் முதல் ஆட்டோமொபைல் வாகனத்தை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்தார். லண்டனிலிருந்து 1912ல் இந்தியாவின் முதல் விமானத்தை இறக்குமதி செய்தவர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை 1893ல் ஹிமாச்சலில் கட்டியவர். 1917ல் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா என்னும் வங்கியை தொடங்கினார். அதேசமயம் பாலியல் கலைகளிலும் இவர் சாதனையாளர்தான். 5 மனைவிகள் மற்றும் மற்ற தொடர்புகள் மூலம் இவர் மொத்தம் 88 குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync history வரலாறு
English summary

weird facts about ancient Indian kings

ndia had some kings with some interesting qualities. Check out the weird and shocking facts about ancient kings.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more