Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
கல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா? தவறா?
இங்கிலாந்தில் படிக்கிற கல்லூரி மாணவர்கள் தங்களுடைய கல்வி கட்டண செலவுக்காக என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்
சில மாதங்களுக்கு முன்பு செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற ஓர் பெயர் நிர்மலா தேவி. கல்லூரி பேராசிரியராக இருக்கும் இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு. மாணவர்களை வழிகாட்டும் இடத்தில் இருந்து கொண்டு இப்படியொரு அபத்தமான கீழ்த்தரமான வேலையைச் செய்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வெளிநாட்டில் நடைபெறுகிற இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்திப்பட்டது. அதில் 20ல் ஒரு மாணவர் தன்னுடைய அன்றாட செலவுகளுக்காக,கல்வி கட்டணங்களை கட்ட முடியாமல் அல்லது அதனை சரிகட்ட பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரிய வந்திருக்கிறது.
இந்த சர்வேயில் 6750 மாணவர்கள் வரை பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு சொன்ன காரணங்கள் பெரும்பாலும் வாழ்க்கைமுறை,லிவிங் காஸ்ட் அதிகம்,கல்வி கட்டணம், விடுதி கட்டணம் தான் பெரும்பாலும் சொல்லியிருக்கிறார்கள்.

#1
அதோடு பாடங்களை கவனிப்பது, எங்களுக்கான ப்ராஜெக்ட் வேலைகள் செய்வது, அதற்கான தயாரிப்பு பணிகள் ஆகியவற்றிற்கு நேரம் சென்று விடும். மற்ற பகுதி நேர வேலையாகவோ அல்லது வார இறுதி நாட்களில் செல்வதோ எங்களுக்கு தோதாக படவில்லை.
நேரமும் எங்களுக்கு ஒத்து வரவில்லை . ஆனால் இந்த பாலியல் வேலைக்கு அப்படியான நேர அட்டவணை எதுவும் இல்லை என்பதும் ஒரு ப்ளஸ்.

#2
வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது தங்களுக்கு தோதான நாட்களில் பாலியல் தொழிலாளியாகவும் மற்ற நேரங்களில் பப்களில் வேலைக்கு செல்வதைக்கூட விரும்பியிருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு ஷிப்ட் அடிப்படையில் வேலைக்குச் செல்வார்கள். நீண்ட வெக்கேஷன் நேரங்களில் ஷிப்ட் அடிப்படையிலான வேலைகளுக்கு செல்வார்கள்.
இது அங்கிருக்கும் எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எல்லாம் எதுவும் நடக்கவில்லை.

#3
இங்கே பிரபலமான இன்னொரு வேலை வெப்கேம் வொர்க் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஓர் வகையில் பாலியல் தொழில் தான், தன் லேப்டாப் அல்லது மொபைல் போன் மூலமாக வீடியோவில் பாலியல் தொடர்பான செய்கைளை செய்வது, பேசுவது என வேலைகள் இருக்குமாம்.
தன் அறையிலிருந்தே இந்த வேலையை செய்து விட முடியும் என்பதால் மாணவர்கள் மத்தியில் இந்த வேலைக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.

#4
பெரும்பாலும், நேரடியான பாலியல் உறவுக்கு அதிக ஈர்ப்பு இல்லை. மாறாக செக்ஸ் தொடர்பான உடையாடல்கள், சாட் செய்வதற்கு தான் நிறைய வரவேற்பு இருக்கிறதாம். இதனை மாணவர்கள் தனித்தனியாகவும் தாங்களாகவே சில மாணவர்களை ஒன்றிணைத்தும் நடத்துகிறார்கள்.
தனக்கு தேவையான போது மட்டும் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள்.

#5
இங்கே ஒரு மாணவி தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆன்லைனில் 35 யூரோவுக்கு விற்றிருக்கிறார். இதனைப் பார்த்து மேலும் சிலர் இதே போல விற்பனையை துவக்கியிருக்கிறார்கள். அவ்வளாக வரவேற்பில்லை இப்போதைக்கு, மெல்ல பெரும் வரவேற்ப்பு இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக சொல்கிறார்கள்.
விலை நிர்ணயம் அவரவர் இஷ்டப்படி தான் நடக்கிறது. எல்லா வேலைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு என்று பணம் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் வெப்கேமுக்கு மட்டும் ஒரு நிமிடத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. போன் உரையாடல் என்றால் ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீட்டிக்க தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

#6
சிலர் செல்ஃபி செக்ஸ் என்று சொல்லப்படுகிற செல்ஃபி வீடியோ செக்ஸ் விளையாட்டிற்கும் நிறைய வரவேற்பு இருப்பதாக சொல்கிறார்கள். இது தவிர தனிமையில் இருப்பவர்களிடத்தில் பேச்சுத்துணைக்கு செல்வது, ரெஸ்ட்டாரெண்ட், டின்னர் பார்ட்டிக்கு கம்பெனி கொடுப்பது போன்ற வேலைகளும் தொடர்கிறது.
அதாவது அந்த நேரத்திற்கு மட்டும் பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் கூட வெளிப்படையாக தான் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை வெளிப்படையாக போட்டிருக்கிறார்கள்.

#7
இது மிகப்பெரிய பிஸ்னஸ் மார்க்கெட்டாக செயல்படுகிறது. தனக்கென்று ஒரு பிராண்ட், கஸ்டமர்,மார்கெட்டிங்,விளம்பரம்,ரிவியூ என ஏகப்பட்ட ஃபார்மட் வைத்திருக்கிறார்கள். படிக்கும் வரை மட்டும் இந்த தொழில் படிப்பு முடிந்ததும் இதை பெரும்பாலும் பின் தொடர விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனை நாங்கள் எங்கள் விருப்பத்தில் தேர்வு செய்திருக்கிறோம். படித்துக் கொண்டே செலவுகளுக்கு தேவைப்படுகிற பணத்தை புரட்டிக் கொள்ள இது ஒர் வழி அவ்வளவு தான். இதில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களை நாங்கள் பார்க்கவில்லை என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

#8
பொதுவாக இது போன்ற செக்ஸ் வொர்க் என்று சொன்னாலே தவறான பார்வையில் தான் பார்க்கப்படுகிறது. அதனாலேயே சில நேரங்களில் குடும்பம் மற்றும் தன் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து இந்த விஷயத்தை சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள். உடன் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் இது சகஜமான ஒன்றாக இருக்கிறது.
சமீபத்தில் கல்லூரி கட்டணம் வேறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் செய்தி,



Click it and Unblock the Notifications
