Latest Updates
-
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்..
'ஸ்ட்ரிப்பர்ஸ்', தங்கள் வாழ்க்கை குறித்து கூறும் பகீர் உண்மைகள்!
'ஸ்ட்ரிப்பர்ஸ்', தங்கள் வாழ்க்கை குறித்து கூறும் பகீர் உண்மைகள்!
பாலியல், ஸ்ட்ரிப்பர், போல் டான்சர், க்ளப் டான்சர் போன்ற சில இடங்களில் வேலை செய்பவர்களை காணும் போது, நமக்கு அவர்கள் மீது ஒரு விதமான அருவருப்பு ஏற்படும். இது இயல்பானது தான். ஏனெனில், அவர்கள் செய்யும் வேலையானது சமூகத்தில் மோசமானது.

அவர்கள் பணத்திற்காக தங்கள் உடலை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார்கள் என கூறப்பட்டாலும், அங்கே வேலை செய்பவர்களில் வெகு சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் தங்கள் அன்றாட வாழ்க்கை நடத்த வேறு வழியின்றியும், யாரோ ஒருவரின் வறுபுறுத்தலின் காரணத்தாலும் தான் இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளில் ஸ்ட்ரிப்பர்களாக வேலை செய்து வரும் பெண்கள், தங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து கூறும் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள்...

#1
ஸ்ட்ரிப்பர் என்றாலே நிறைய பணம் கிடைக்கும், அவர்கள் ஒரு கவர்ச்சி பொருள், அவர்கள் தங்கள் உடலை காட்டி வியாபாரம் செய்கிறார்கள் என்ற எண்ணமே நிறைய பேரிடம் இருக்கிறது. நான் என் கஷ்டத்திற்காக வேறு வெளியின்றி ஸ்ட்ரிப்பராக வேலை செய்து வருகிறேன். எனக்கு தங்குவதற்கு வீடு கூட கிடையாது. என்னுடைய பழைய காரில் தான் தினமும் தான் தங்கி வருகிறேன்.

#2
ஸ்ட்ரிப்பர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என்று பலர் கருதுகிறார்கள். பெரும்பாலும் நேரில் அல்லது வீடியோக்களில் காணும் போது அவர்களுக்கு அப்படி தான் தெரியும், நிறைய பேர் எங்கள் மீது பணத்தை வீசி மகிழ்வார்கள். ஆனால், அது அனைத்தும் எங்களுக்கு வந்து சேரும் பணம் கிடையாது. எங்கள் முதலாளி அளிக்கும் ஊதியம் மட்டுமே எங்களுக்கு வந்து சேரும். என் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவை வாங்குவதற்கு கூட எனக்கு அந்த பணம் போதாது.

#3
ஸ்ட்ரிப்பர் என்றால் அந்த பெண் மோசமான குணம் கொண்டிருப்பார்கள் என்றே இந்த சமூகம் கருதுகிறது. என் வாழ்வில் நடந்த சில விஷயங்களால், இந்த இங்கே ஸ்ட்ரிப்பராக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.
எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுடைய எல்லா தேவைகளையும் நான் பூர்த்தி செய்ய வேண்டும், அவர்களை நன்கு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும். எனக்கு தேவையான பணம் இதில் கிடைக்கிறது. அதற்காக மட்டுமே நான் ஸ்ட்ரிப்பராக வேலை செய்கிறேன்.

#4
என் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் நான் ஒரு ஸ்ட்ரிப்பராக இருந்து தான் ஏற்படுத்துக் கொண்டுத்தேன். ஆனால், அவர்களுக்கு தனது தாய் ஒரு ஸ்ட்ரிப்பர் என்பது தெரியாது. சமீபத்தில் என் மகன் நான் ஒரு ஸ்ட்ரிப்பர் என்பதை அறிந்துக் கொண்டான்.
அதில் இருந்து அவன் என்னிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை. யாருக்காக எல்லா கொடுமைகளை சகித்துக் கொண்டு நான் இந்த தொழிலுக்கு வந்தேனோ, அவனுக்கே நான் ஒரு அருவருக்கத்தக்க பொருளாகிவிட்டேன்.

#5
நான் ஒரு ஸ்ட்ரிப்பர்... நான் ஸ்ட்ரிப்பராவதற்கு என் அப்பா தான் காரணம். அவரது கொடுமைகளினால் தான் நான் ஸ்ட்ரிப்பர் ஆனேன். எனக்கு இதில் துளிக் கூட விருப்பம் இல்லை. இது ஒரு நரகம். ஆனால், அவரது ஆசைக்காகவும், பண தேவைக்காகவும் நான் ஸ்ட்ரிப்பராக வேலை செய்து வருகிறேன்.

#6
நான் போல் டான்ஸ் பயிற்சி அளிக்கும் நபராக இப்போது வேலை செய்து வருகிறேன். சமீபத்தில், என்னிடம் பாடம் கற்கும் பெண்களிடம், நான் நான்கு வருடங்கள் ஸ்ட்ரிப்பராக வேலை செய்து வந்ததை கூறினேன். அதன் பிறகு அவர்கள் என்னை ஒரு வேண்டாத பொருள் போல, அருவருக்கத்தக்க ஆளாக காண்கிறார்கள். என்னிடம் நடனம் கற்கலாம்.. ஆனால், என்னை மதிக்க மாட்டேன் என்பது எந்த வகையில் நியாயம்?

#7
ஓர் இரவில் எனக்குக் ஒரு கால் வந்தது. காலின் எதிர்முனையில் இருந்து பேசிய நபர், அவர் வீட்டு அருகே வசிக்கும் பேச்சுலர் ஆண்கள் மிகுந்த சப்தத்துடன் பார்ட்டி கொண்டாடி வருகிறார்கள். எங்களால் தூங்க முடியவில்லை என்று புகார் அளித்தார்.
நான் அங்கே விரைந்து, அவர்களை உடனடியாக பார்ட்டியை நிறுத்தும்படி கூறினேன். ஆனால், அவர்கள் என்னை போலீஸ் வேடம் அணிந்து வந்த ஸ்ட்ரிப்பர் என்று கருதி மோசமாக நடந்துக் கொள்ள முயன்றனர். அவர்களை நான் ஒரு போலீஸ் அதிகாரி என்று நம்ப வைப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

#8
நான் ஒரு டான்சர். என் தோழிகள் சிலர் ஸ்ட்ரிப்பர்களாக பணியாற்றி வந்தார்கள். அவர்கள் அனைவரும் இப்போது அந்த வேலையை விட்டு வெளிவந்துவிட்டனர். இப்போது அவர்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள். முகநூலில் அவர்கள் இடும் பதிவுகள் எனைத்தும் முற்றிலும் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்கிறது.
இவர்களா, அப்போது ஸ்ட்ரிப்பர்களாக வேலை செய்தனர் என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவர்கள் மாறி இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications