Latest Updates
-
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை இருப்பவர்கள், நள்ளிரவில் செய்த அசாதாரண செயல்கள்!
தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை இருப்பவர்கள், நள்ளிரவில் செய்த அசாதாரண செயல்கள்!
உலகில் பல விசித்திரமான நோய்கள், வைரஸ்கள், உடல்நலக் கோளாறுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு பிரச்சனை தான் தூக்கத்தில் நடப்பது. சிலருக்கு இது பரம்பரை, பரம்பரையாக கூட ஏற்படுகிறது.
தூக்கத்தின் போது இவர்களுக்கே தெரியாமல் எழுந்து சென்று என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். திரும்ப எங்காவது உறங்கிவிடும் இவர்கள் மறுநாள் காலை எழுந்து மிக இயல்பாக நடந்துக் கொள்வார்கள்.

இந்த பிரச்சனையால்.. இவர்கள் மட்டுமின்றி, இவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை கொண்டிருக்கும் சிலர் Reddit இணையத்தில் தங்கள் வாழ்வில் நடந்த சில அசாதாரண அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்கள்.
திருட்டில் இருந்து போலீஸ் கேஸ் வரை சென்ற பல சமாச்சாரங்கள் நடந்திருக்கின்றன இந்த தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை காரணத்தால்...

கடுமையான காயங்கள்!
தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை எனக்கு நீண்ட காலமாக இருக்கிறது. எப்போதும் தூக்கத்தில் எழுந்து சென்றால்.. சாண்ட்வெச் சமைத்து தரையில் வைத்துவிட்டு வந்துவிடுவேன். இது தான் என் வாழ்வில் வழக்கமாக இருந்தது.
ஆனால், ஒருமுறை சமயலறையில் இருந்து மரத்தினாலான அலமாரியை என் வெறும் கைகளால் அடித்து உடைத்துவிட்டேன். மறுநாள் காலை எழுந்து பார்த்த போதுதான், என் கைகளில் கடுமையான காயங்கள் ஆகியிருந்ததை கண்டு அதிர்ந்தேன்.

தவறான ஈமெயில்!
ஒருமுறை தூக்கத்தில் நடக்கும் பழக்கம் கொண்டிருந்த நான், எனது லேப்டாப் எடுத்து, ஈமெயில் ஓபன் செய்து, அனைவருக்கும் ஒரு வினோதமான பார்ட்டி இன்விடேஷன் அனுப்பி இருந்தேன்.
நான் அனுப்பி இருந்த மின்னஞ்சல் இலக்கண பிழைகள், எழுத்துப்பிழைகள் என ஒன்றும் புரியாத வண்ணம் அமைந்திருந்தது. இதை மறுநாள், காலை எனது ஈமெயில் இன்பாக்ஸில் வந்திருந்த பதில்களை கண்டு தான் அறிந்தேன்.

திருட்டு!
தூக்கத்தில் நடக்கும் பிரச்சனையின் போது, நான் எழுந்து சென்று சமையல் அறையில் சமைத்து சாப்பிட ஆரம்பித்துவிடுவேன். ஒருமுறை இரண்டு முறை அல்ல. சில சமயம் இரவு வேளையிலேயே நான்கைந்து முறை எல்லாம் சமைத்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த பிரச்சனையை சரியாக பயன்படுத்திக் கொண்ட என் ரூம் மேட், எனது உணவுகளை இரவு வேளைகளில் திருட ஆரம்பித்துவிட்டாள்.

நாய் உணவு!
நான் எப்போது என் நெருங்கிய நண்பர் வீட்டில் தங்கி இருந்தேன். எனது தூக்கத்தில் நடக்கும் பிரச்சனையினால், ஓர் இரவில்.. அவர் வீட்டு ஃபிரிட்ஜை திறந்து, அதில் இருந்த உணவுகளை எல்லாம் எடுத்து வெளியே கொட்டிவிட்டு, அவர் வீட்டில் நாய்க்கு வாங்கி வைத்திருந்த உணவுகளை எல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்துவிட்டு உறங்கிவிட்டேன்.

நடுரோட்டில் அசம்பாவிதம்
நான் ஒரு நர்ஸ். இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் இருக்கும். அது ஒரு குளிர் காலம்... இரவில் ஒரு மெலிசான இரவு உடையுடன் எனது காரை வேகமாக ஓட்ட துவங்கியிருக்கிறேன். இடையே, எங்கோ காரை நிறுத்திவிட்டு.. இயற்கை உபாதை கழிக்க துவங்கியதாக அறியவந்தேன்.
இதெல்லாம் மறுநாள் காலை காவல் நிலையத்தில் காவலர்கள் என்னிடம் கூறியது. அவர்களிடம் இரவு கூச்சலிட்டு சண்டையிட்டதாகவும் கூறினார்கள். பிறகு, காலையில் தான் எனக்கு இருக்கும் பிரச்சனையை எடுத்துக் கூறி வெளிவந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இது அமைந்தது.

ஜன்னலை உடைத்து...
தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த ஒரு டீனேஜ் நபர், இரவு 32 அடி உயரத்தில் இருந்து கீழே குதுத்தி இருக்கிறார்.
இத்தனை பெரிய உயரத்தில் இருந்து குதித்தால் மரணிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த நபர் குதித்த பிறகு அப்படியே கீழே படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டார் என்பது தான் ஆச்சரியம்.

ஆர்கெஸ்ட்ரா!
எனக்கு தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை இருக்கிறது. எனக்கு இசை மீது அளவற்ற ஆவல். ஆர்கெஸ்ட்ரா இசையை கேட்பதில் பேரார்வம் எனக்கு. நானும் ஒரு ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞனாக வேண்டும் என்று விரும்பினேன்.
ஓர் இரவில், எழுந்து ஹாலில் நின்று ஆர்கெஸ்ட்ராவில் கலைஞர்களுக்கு குறிப்பு வழங்குவது போல கத்திக் கொண்டிருந்தேனாம். என் மனைவி அலறியடித்து ஓடி வந்து, என்னை மீண்டும் அழைத்து சென்று படுக்கையறையில் உறங்க வைத்திருக்கிறார்.

முன்பின் அறியாத நபர்...
என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் அது... நள்ளிரவில் தூக்கத்தில் எழுந்த நான், என் வீட்டுக்குள் யாரோ முன்பின் அறியாத நபரை அனுமதித்துள்ளேன். அவரும் படுக்கை அறை வரைக்கும் வந்து என் மணி பர்ஸ், லேப்டாப் போன்றவற்றை திருடி சென்றிருக்கிறார்.
மறுநாள் காலை தூங்கி எழுந்த போதுதான் இதை எல்லாம் அறியவந்தேன். பக்கத்து வீட்டில் இருந்த நபரொருவர், நான் அந்த முன்பின் அறியாத நபரை வீட்டுக்குள் அனுமதிப்பதை பார்த்ததாகவும்.. நானே அழைத்து சென்றதால் நண்பராக இருக்கும் என்று கருதி விட்டுவிட்டதாகவும் கூறினார்.

பணம் சுவாகா!
எங்கள் வீட்டில் இரண்டு பேருக்கு இந்த தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது. நான், என் அம்மா இருவரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
அப்போது எனக்கு 9 வயதிருக்கும். வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை எல்லாம் எடுத்து வீட்டுக்கு வெளியே ஜன்னல் வழியாக வீசிவிட்டேன். மறுநாள் காலை அப்பா கூறி தான் இத அறிந்தேன். அவர் என் மேல் கோபித்துக் கொள்ளவில்லை என்றாலும், என்மேல் எனக்கு பெரும் கோபம்.

திருடன்!
நியூயார்க்கில் வசித்து வந்த தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை இருந்த நபர், இரவில் அக்கம்பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் சைக்கிள், கோல்ப் விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை திருடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஒருமுறை கையும் களவுமாக காவலர்களிடம் அகப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த சமயம் அவர் தன்னிலை இன்று நடந்துக் கொண்டதை பார்த்து சந்தேகித்த காவலர்கள் இவருக்கு தூக்கத்தில் இருக்கும் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து, விசாரணை முறையை மாற்றியுள்ளனர்.



Click it and Unblock the Notifications