Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் போராட்ட வாழ்க்கை
ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று வயது வித்யாசத்தில் உடன்பிறப்புகளுடன் இருப்பவர்கள் எல்லாரும் இந்த நிகழ்வை கடந்து வந்திருப்பார்கள். இதுல யாரு பெருசு?..... என்று கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இளையவரை மூத்தவர் என்றும் மூத்தவரை இளையவர் என்றும் சொல்வார்கள் .
ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். சின்ன சின்ன இடர்பாடுகளுக்கு எல்லாம் சோர்ந்து விடாமல் உத்வேகத்துடன் தொடர்ந்து பயணித்தால் மட்டுமே வாழ்க்கைக்கான இலக்கினை அடைய முடியும். வாழ்க்கையில் சந்திக்கிற சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் சோர்ந்திடாமல் இருக்க இவரது கதை உங்களுக்கு உற்சாக டானிகாக இருக்கும்.

#1
Image Courtesy
பிரிட்டனைச் சார்ந்த ஜியார்ஜியா ராங்கின் என்ற பெண் தான் அந்த நபர். இவர் வெறும் 31 இன்ச் உயரம் தான் இருக்கிறார். அப்படியானால் பத்துவயதிற்குட்பட்ட சிறுமியா என்று நினைத்திட வேண்டாம். ஜியார்ஜியாவுக்கு பத்தொன்பது வயது.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஜியார்ஜியாவின் கடந்த காலம் வலியும்,அழுகையும்,துக்கமும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது/

#2
Image Courtesy
இந்தப் பிரச்சனை தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதிருந்தே ஆரம்பித்திருக்கிறது. ஜியார்ஜியாவுக்கு இருப்பது ஸ்கெலிட்டல் டிஸ்ப்ளாசியா என்ற வகை நோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு வளர்ச்சி சரியாக இருக்காது. இதனால் இவரது உயரம் வளர்வது தடைபடும்.

#3
Image Courtesy
இதனால் ஜியார்ஜியா தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். அவருக்கான உடை தேர்ந்தெடுப்பதில் துவங்கி எல்லாவற்றிலும் சிக்கல்களை சந்தித்து ஒவ்வொன்றுக்கும் பெரும் போராட்டத்துடனே வெற்றி பெற்றிருக்கிறார்.

#4
Image Courtesy
ஜியார்ஜியா தற்போது பயிற்சி பெற்ற தேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட். ஜியார்ஜியா கைக்குழந்தையாக இருந்த போது, அவருக்கு கொடுக்கப்பட்ட எந்த உணவும் செரிக்கவில்லை
அதோடு ஜியார்ஜியாவின் எடையிலும் தொடர் சரிவு ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

#5
Image Courtesy
மருத்துவர்களால் ஆரம்பத்தில் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் டீ ஹைட்ரேசன் ஏற்பட்டிருக்கிறது. இது உயிர் போகும் அளவிற்கு விஷயம் சீரியசாகவே மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து கண்காணிக்கத் துவங்கினர்.

#6
Image Courtesy
மாத்திரைகளின் துணையுடன் நாட்கள் நகர்ந்தது. நாட்கள் நகர ஜியார்ஜியாவின் ரத்தத்தில் மாற்றம் தெரிந்தது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான நச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட்டது. இத்தனை கலேபரேங்களுக்கு மத்தியில் ஜியார்ஜியா தன்னுடைய ப்ரைமரி ஸ்கூலை முடித்துவிட்டிருந்தார்.
அதுவரையில் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாத ஒரு விஷயத்தை பெற்றோர் அப்போது தான் உணர்ந்தனர். அது தான் ஜியார்ஜியாவின் உயரம்!

#7
Image Courtesy
ஜியார்ஜியாவுக்கு வயது பதிமூன்றாகிறது. இப்போது ஜியார்ஜியாவினால் நடக்கவும் முடியவில்லை.அதோடு தன்னுடைய எடையைக்கூட தாங்க முடியாமல் அடிக்கடி கீழே விழ ஆரம்பித்தார் ஒரு முறை விழுந்தால் எழுந்தரிக்க இன்னொருவரின் உதவி தேவைப்பட்டது.

#8
Image Courtesy
அவருக்கு இருக்கக்கூடிய நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இனி வாழ்க்கை முழுவதும் வீல் சேர் தான் கதி என்றானது. அவர் வயதொத்த குழந்தைகள் ஜியார்ஜியாவை கிண்டல் செய்தனர்,பகடி செய்து கேலி பேசினர். தனக்கான நண்பர்கள் கிடைக்காமல் ஜியார்ஜியா மிகவும் கடுமையாக வருத்தப்பட்ட காலம் அது.

#9
Image Courtesy
இந்நிலையில் ஜியார்ஜியாவுக்கு தம்பி ஒருவன் பிறக்க, ஜியார்ஜியாவின் மனதிலும் அவரது பெற்றோர் மனதில் சிறு புன்னகை, இதுவரை மத்திரை,வலி,கேலி என்று மட்டுமே பார்த்து வந்த குடும்பம் மழலையின் சிரிப்பில் சில மாற்றத்தை உணர்ந்தது. ஜியார்ஜியாவும் தான்.

#10
Image Courtesy
உலகிலேயே ஐந்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இப்படியான குறைபாடு ஏற்படுமாம். இனி இந்த குறையை நினைத்து வருத்தப்படக்கூடாது, இப்படி வருத்தப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பத உணர்ந்து கொண்டார் ஜியார்ஜியா.
தன்னம்பிக்கையுடன் தன் வலியுடனும் தன்னை கேலி பேசிய இந்த சமூகத்துடனும் போட்டிப் போட ஆரம்பித்தார். தற்போது மேக்கப் ஆர்டிஸ்ட்டாக எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கும் ஜியார்ஜியா ஒரு இன்ஸ்பிரேஷன் தான்.



Click it and Unblock the Notifications