Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
உடல் பாகம் குறித்து அசிங்கமாக கமெண்ட் செய்தவர்களுக்கு செருப்படி ரிப்ளை கொடுத்து நடிகைகள்!
உடல் பாகம் குறித்து அசிங்கமாக கமெண்ட் செய்தவர்களுக்கு செருப்படி ரிப்ளை கொடுத்து நடிகைகள்!
90% உலக சினிமாக்களில் பெண்களை அழகிற்காகவும், கவர்ச்சிக்காகவும் தான் பயன்படுத்துகின்றனர். அதிலும் இந்தியாவில் அது 99% என்று அடித்துக் கூறலாம். விரல் விட்டு எண்ணும் அளவில் சில நடிகைகளை தவிர பெரும்பாலானோருக்கு நாலு சீன், நாலு பாடலில் திறமை / முகம் காட்டும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது.

இப்படியான சூழல் தான் என்னவோ, நடிகைகள் என்றாலே அழகாக, கவர்ச்சியாக, நல்ல உடல் வாகுடன் தான் இருக்க வேண்டும் என்ற உருவகத்தை ரசிகர்கள் மத்தியில் விதைத்துவிட்டது போல. இதில் சிலர் எல்லை மீறி நடிகைகளின் உடல் வாகங்களை பாடி ஷேம் வகையில் கமெண்ட் செய்வதுண்டு. இப்படியான கமெண்டுகள் நிச்சயம் அவர்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும்.
ஆனால், இந்த சூழலை பாசிட்டிவாக எதிர்கொண்ட நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இத்தகைய சூழலை, கமெண்டுகளை எப்படி கையாண்டனர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

டாப்சி!
நடிகை டாப்சி பலமுறை சமூக தளங்களில் பாடி ஷேம்ற்கு ஆளானவர். நேற்று ட்விட்டர் பயனாளி ஒருவர், நடிகை டாப்சியை டேக் செய்து, நான் உங்கள் உடல் பாகங்களை விரும்புகிறேன் என்று கூறி இருந்தார். அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து, நேற்று மற்றும் நேற்று முன் தினம் கூகுள் ட்ரெண்ட் லிஸ்டில் இடம்பெற்றார் டாப்ஸி.

பெருமூளை?
தன் உடல் பாகத்தை பாடி ஷேம் செய்யும் விதத்தில் ட்வீட் செய்த அந்த ட்விட்டர் பயனாளிக்கு டாப்சி, வாவ்! எனக்கும் அவற்றை பிடிக்கும். அதில் உங்களுக்கு பிடிட்டஹ்து என்ன? எனக்கு பிடித்தது cerebrum (பெருமூளை) என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டை ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 3 ஆயிரம் பேர் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்!
முன்னாள் உலக அழகி மற்றும் இந்திய திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் அழகிற்கு பெயர்போனவர். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய் உடல் எடை கூடி காணப்பட்டார். இதை பலரும் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கினார்கள். அசிங்கமாகவும், கேவலமாகவும் மீம் போட்டும் ட்ரால் செய்தனர்.
தன் மனைவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக அவர் உடல் சார்ந்து எழுப்பப்பட்ட கேலி, கிண்டல்களுக்கு அவரே பதில் அளித்தார்.

அபிஷேக்!
ஐஸ்வர்யா ராய் ஒரு நட்சத்திரம். ஆனால், அவர் ஒரு பெண் மற்றும் தற்போது தாய் என்பதை யாரும் மறந்து, எல்லை மீறி கமென்ட் செய்ய வேண்டாம். நான் என் வாழ்வில் எந்தவொரு பெண்ணையும் இவ்வாறு சித்தரித்து பேசியதோ, நகைத்ததோ இல்லை. இப்படியான முறையில் கமெண்ட் செய்வது யாருக்குமே அழகில்லை, என்று பதில் அளித்திருந்தார்.

ஹுமா குரேஷி!
பெண் உடல் வாகு / வடிவம் குறித்து கேலிக்கு உண்டாக்கும் கருத்துகளுக்கு எதிராக ஹுமா குரேஷி பெமினா இதழின் அட்டைப்படத்தில் தோன்றி தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியதாவது...

எடுத்துக்காட்டாக...
நிறைய பேர் பெண்களின் உடல் வாகினி வைத்து கேலி, கிண்டல் செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பெண்களை எப்படி இருந்தாலும் குண்டு, ஒல்லி மாற்றி, மாற்றி கூறி கிண்டல் செய்ய தான் போகிறார்கள். பற்கள் சரியில்லை, ஆங்கிலம் சரியாக பேசவில்லை, குட்டையாக இருக்கிறார் இன்னும் அவர்கள் வாயில் வரும் மற்றும் பல வாசகங்கள் பெண்களை கேலி, கிண்டல் செய்தான் போகிறது.
கேலி செய்பவர்கள் கேலி செய்துக் கொண்டே தான் இருப்பார்கள். உலகின் எல்லா இடங்களிலும் இத்தகைய மக்கள் இருக்கிறார்கள்.அவர்களை புறம்தள்ளிவிட்டு, வருங்கால பெண்களுக்கு நாம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று ஹுமா குரேஷி கருத்து தெரிவித்திருந்தார்.

சோனம் கபூர்!
அணில் கபூரின் மகள் சோனம் கபூர், இந்த கிளாமர் துறையில் பல வண்ணங்கள் மினுமினுக்கும் ஜொலிப்புகளை மட்டுமே நாம் காண்கிறோம். அதற்கு பின்னணியில் ஒரு இருண்ட பகுதி இருக்கிறது. நல்ல உடல் வாகுடன் ஒரு நடிகை வேண்டும் என்றால், அவர் அதற்காக நிறைய ஹார்ட் வர்க் செய்ய வேண்டி இருக்கிறது. நிறைய உடல் எடை குறைக்க வேண்டும். அப்படி செய்தாலுமே கூட அவளது உடல் பாகத்தினை இவர்கள் கேலி கிண்டல் செய்வார்கள். அந்த கேலியை எல்லாம் ஒரு சிறு புன்னகையை கொண்டு தாண்டி செல்ல வேண்டும்.

நம்பிக்கையுடன்...
உடல் பாகத்தை கேலி செய்பவர்கள் முன் தன்னம்பிக்கையுடன், நாம் முதலில்...., நாம் அழகாக தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன், பிறர் கருத்துகள் எதை பற்றியும் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

பர்நீதி சோப்ரா!
முதலில் உடல் எடை கூடி இருந்தாலும், பிறகு மிகுந்த கடின உழைப்பிற்கு பிறகு கச்சிதமான உடல் வாகு கொண்டார் பர்நீதி சோப்ரா. ஆனாலுமே கூட கேலி, கிண்டல் செய்வோர், அவருக்கு எதிரான ரசிகர்கள் அவரது பழைய படங்களை கொண்டும், அதனுடன் ஒப்பிட்டும் இவரை கேலி செய்துக் கொண்டே தான் இருந்தனர்.

கவலை வேண்டாம்...
இந்த கேலி, கிண்டல் எல்லாம் மிக விரைவில் கடந்த காலம் ஆகிவிடும். வாழ்வில் எல்லாமே ஒவ்வொரு கட்டங்களாக தான் வந்து செல்லும். நீங்களே உங்கள் உடல் குறித்து அசௌகரியமாக உணர்ந்தால்... அதை சரி செய்துக் கொள்ள எதாவது செய்யுங்கள். இல்லை, உங்கள் உடல் உங்களுக்கு சௌகரியமாக இருந்தால், யார் பற்றியும் கவலைக் கொள்ளாமல் நிம்மதியாக இருங்கள். கேலி செய்வோர் கேலி செய்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

ரிச்சா சதா!
எல்லா நடிகைகளும் மூடி மறைக்கும் ஒரு இரகசியம் என்றால் அது ஈட்டிங் டிசார்டர் தான். பலரும் தங்கள் உடல் எடையை பேணிக்காக்க, உடல் வாகினி கச்சிதமாக வைத்துக் கொள்ள பல நேரம் சாப்பிடவே மறந்து விடுகிறார்கள் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தவர் ரிச்சா.

எங்கே முடியும்...
ஆரம்பத்தில் நான் உடல் எடை ஏற்ற வேண்டும் என்று கருத்து கூறினார்கள். பிறகு, நான் உடல் எடை குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். சிலர் என் மூக்கு சரியல்லை என்றார்கள், சிலருக்கு என் இதழ் பிடிக்கவில்லை. சிலர் நான் கொஞ்சம் கொழுப்பு கூடிய உடல்வாகு கொண்டிருக்கிறேன் என்று கருதினார்கள். சிலருக்கு என் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்றவும், சிலருக்கு அதுவே குட்டையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. போலியான இமை முடிகள், நகங்களுக்கு ஜெல், பெரிய ஹீல்ஸ், ஃபோகஸ் லைட்டுகள்...இன்னும் எத்தனையை நாம் செவி சாய்த்துக் கேட்டு கொண்டே இருக்க போகிறோம்.... என்று கோபமாக கூறி இருந்தார்.

ஜரீன் கான்!
ஜரீன் கான் ஒரு கியூட்டான நடிகை என்பதை தாண்டி நல்ல பர்சனாலிட்டி கொண்டவர். ஜரீன் கான் குண்டாக இருக்கிறார், உடல் எடை கூடி இருக்கிறார் என்று நிறைய பேர் அவரது உடல் வாகினி சார்ந்து கமெண்ட் செய்திருக்கிறார்கள். அதற்கு அவர் அளித்த பதில்,

என் உரிமை...
நான் பெரிதாக இருக்கிறேன் என்று கமென்ட் செய்கிறார்கள். அதை உள்வாங்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. அதற்கு நான் செவி சாய்க்கப் போவதும் இல்லை. ஏனெனில், இது என் வாழ்க்கை, என் உடல். நான் எப்படியான உடல் வாகு கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எனக்கு மட்டும் இருக்கிறது. வேறு எந்த ...... எவருக்கும் இருக்கும் இல்லை., என்று கூறி இருந்தார்.

வித்யா பாலன்!
வித்யா பாலன் நடிக்க வந்த காலத்துடன் ஒப்பிடுகையில் மெல்ல, மெல்ல உடல் எடை கூடினார் என்பது நிதர்சனமே. இவரையும் பலர் பாடி ஷேம் செய்துள்ளனர். ஆனால், அதுக்குறித்து ஒருநாளும் வித்யா பாலன் வருந்தியதே இல்லை.

நான் செக்ஸியாக...
நான் என் வேலையை நேசிக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் என் உடல் வாகு குறித்து மற்றவர் கூறும் கருத்துகள் மீது அக்கறை எடுத்துக் கொண்டது இல்லை. என் உடல் வடிவத்தை நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், என் உடல் வாகு சார்ந்து நான் கொண்ட உணர்ச்சிகளை நான் மாற்றிக் கொள்ள முடியும். நான் என் உடலை செக்ஸியாக தான் உணர்கிறேன். உண்மையை கூற வேண்டும் என்றால் நான் எப்போதுமே அதுக்குறித்து வருத்தப்பட்டதே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அர்பிதா கான்!
அர்பிதா கான் சல்மான் கானின் வளர்ப்பு தங்கை ஆவார். அர்பிதா கானின் உடல் வாகினை கொண்டு பலர் இவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். தன் உடல் வாகு குறித்து பாடி ஷேம் கமெண்ட் செய்வோர் அனைத்தையும் குரைக்கும் நாய்கள் என்று கூறி இருக்கிறார் அர்பிதா கான்.

வேற வேலை இல்ல...
என் படங்கள், என் குடும்பம், என் உடல் எடை, என் முகம், என் சரும நிறம் மற்றும் நான் என் ஆண் குழந்தையுடன் என்ன செய்கிறேன், என் குழந்தை மீது எப்படி அக்கறை எடுத்துக் கொள்கிறேன் மற்றும் என் கணவர் என் வாழ்வியல் முறை சார்ந்து யாருக்கேனும் பிரச்சனை இருந்தால்... நான் கருதுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான்... உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நீங்கள் எல்லாம் வேலைவெட்டி இல்லாமல் தான் இருக்கிறீர்களா... உங்களுக்கு பிடிக்காத ஒரு நபரின் சமூகதள முகாரியை பின்தொடர்ந்து அவரை கமெண்ட் செய்யும் அளவிற்கு நீங்கள் சோம்பேறிகள் அல்லது வேலையில்லாதவர்களா? என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications











